Rasi Palan : கும்பம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 18முதல் ஜுலை 24வரை)

கும்பம்

கும்பம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்): எடுத்த காரியத்தை எத்தனை குறுக்கீடு கள் வந்தாலும் அதை சமாளித்து செய்து முடிக்கும் திறன் உடைய கும்பராசியினரே, இந்த வாரம் கவுரவ பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள்.  மற்றவர்களின் செயல்களால் மன அமைதி கெடவும்  வாய்ப்பு உண்டு.  நீண்ட நாட் களாக இருந்து வந்த பிரச்சனை தீரும்.

    தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள்  கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி  நடந்து முடியும். பயணங் கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம்.

    குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு  நீங்கும். உறவினர் கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும்  உதவி தாமதமாக கிடைக்கும்.  சகோதரர் களால் மனவருத்தம் உண்டாகும்படி யான சம்பவம் நேரலாம் கவனம் தேவை.

    பெண்களுக்கு அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும்.

    மாணவர்களுக்கு சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது.  பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.

    பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.
    Published by:Vaijayanthi S
    First published: