• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan : கும்பம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 20 முதல் ஜூன் 26 வரை)

Rasi Palan : கும்பம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 20 முதல் ஜூன் 26 வரை)

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்): இந்த வாரம் கவுரவ பிரச்சனை உண்டாகும். நீங்கள் நல்லதாக பேசினாலும் எதிரில் உள்ளவர்கள் அதை தவறான கண்ணோட்டத்துடனேயே பார்ப்பார்கள். மற்றவர்களின் செயல்களால் மன அமைதி கெடவும்  வாய்ப்பு உண்டு.  சூரியன் சஞ்சாரம் பணவரத்தை தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனை தீரும்.

    தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள்  கூடுதல் முயற்சிக்கு பிறகு எதிர்பார்த்தபடி  நடந்து முடியும். பயணங்கள் செல்ல நேரிடலாம். புத்தியை உபயோகித்து வியாபாரத்தில் புதுமையை செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடு படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பிடித்தமான இடத்திற்கு வேலை மாற்றம் கிடைக்கலாம். குடும்பத்தில் மனைவி குழந்தைகளுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு  நீங்கும். உறவினர்கள் நண்பர்கள் உதவ முன்வந்தாலும்  உதவி தாமதமாக கிடைக்கும்.

    சகோதரர் களால் மனவருத்தம் உண்டாகும்படியான சம்பவம் நேரலாம் கவனம் தேவை. பெண்களுக்கு அடுத்தவர் பேசுவதை காதில் வாங்காமல் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் குறையும். மனதில் எதிர்காலம் பற்றிய சிந்தனை உண்டாகும். மாணவர்களுக்கு சக மாணவர்கள், நண்பர்களிடம் அதிகம் பேசி பழகுவதை தவிர்ப்பது நல்லது.  பாடங்களில் கூடுதல் கவனத்துடன் படிப்பது நன்மை தரும்.

    மேலும் படிக்க.. நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

    பரிகாரம்: மாரியம்மனை தீபம் ஏற்றி வழிபட எல்லா துன்பங்களும் நீங்கும். காரிய வெற்றி உண்டாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: