ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Rasi Palan : கன்னி - இந்த வார ராசிபலன் (ஆகஸ்ட் 08முதல் ஆகஸ்ட் 14வரை)

Rasi Palan : கன்னி - இந்த வார ராசிபலன் (ஆகஸ்ட் 08முதல் ஆகஸ்ட் 14வரை)

கன்னி

கன்னி

கன்னி ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்): இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். தொல்லைகள் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது.  பணவரத்து தாமதப்படும். வீண் ஆசைகள் உண்டாகலாம்.

தொழில் வியாபாரத்தில் வேகம் குறைந்தாலும் திருப்திகரமாக நடக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரிகள் மூலம் நன்மை உண்டாகும். குடும்பாதிபதி சுக்கிரன் ஆட்சியாக இருக்கிறார். குடும்பத்தில் இருந்த  பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த காரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே  இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

பெண்களுக்கு வீண் கவலைகள் ஏற்பட்டு நீங்கும். கலைத்துறையினருக்கு உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். அரசியல்வாதிகள் தங்களின் திறமையான செயல்பாட்டால் பாராட்டு கிடைக்கும். மாணவர்களுக்கு எதிலும் நல்லது கெட்டதை யோசித்து அதன் பின்பு அந்த காரியத்தில் ஈடுபடுவது நன்மை தரும். கல்வியில் கூடுதல் கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

பரிகாரம்: புதன்கிழமையில் பெருமாளை வணங்கி 9 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்க மனத்தெளிவு உண்டாகும். அறிவுத் திறன் அதிகரிக்கும்.

First published:

Tags: Rasi Palan