Rasi Palan : கன்னி - இந்த வார ராசிபலன் (ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07வரை)

கன்னி

கன்னி ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்): இந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். தூர தேச பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகளுக்கள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ராசியினை செவ்வாய் பார்ப்பதால் ஆரோக்கியக் குறைபாடு நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும்.

    தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். அனுபவப்பூர்வமான அறிவு திறன் கைகொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.

    பெண்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் வந்து குவியும். அரசியல்வாதிகளுக்கு மனதில் தைரியம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, புதன், வெள்ளி

    பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம்  பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
    Published by:Vaijayanthi S
    First published: