• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan : கன்னி - இந்த வார ராசிபலன் (ஜூன் 13 முதல் ஜூன் 19 வரை)

Rasi Palan : கன்னி - இந்த வார ராசிபலன் (ஜூன் 13 முதல் ஜூன் 19 வரை)

கன்னி

கன்னி

கன்னி ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கன்னி

    இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். ராசிநாதன் புதனின் சார பலம் பலவித நற்பலன்களை அளிக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும்.

    பணவரத்து திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். பிள்ளைகளிடம் கனிவுடன் பேசுவது நல்லது. விருந்தினர் வருகை இருக்கும். குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும்.

    பெண்களுக்கு துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின் போதும் கவனம் தேவை. கலைத்துறையினர் எந்த காரியத்திலும் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

    மேலும் படிக்க... நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி

    பரிகாரம்: நவக்கிரகத்தில் புதனை வணங்க குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். பண கஷ்டம் குறையும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: