Rasi Palan : கடகம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 12முதல் ஜுலை 17வரை)

கடகம்

கடகம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்): எளிதில் கோபம் அடையாமல் பழகு வதற்கு இனிமையான குணம் கொண்ட கடக ராசியினரே, இந்த வாரம் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பண வரத்து எதிர் பார்த்தது போல் இருக்கும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கலாம். பாதியில் நின்ற காரியங்களை தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். திடீர் குழப்பம் ஏற்படலாம். தீ, எந்திரம் ஆகியவற்றை கையாளும்போது கவனம் தேவை.

    தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயலாற்றுவது நல்லது.

    குடும்பத்தில் சிறு சண்டைகள் உண்டாக லாம். கணவன், மனைவி ஒருவருக்கொரு வர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது நன்மை தரும்.

    பெண்களுக்கு மனதில் திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சமையல் செய்யும் போதும் மின் சாதனங்களை இயக்கும் போதும் கவனம் தேவை.

    மாணவர்களுக்கு கல்வி பற்றிய மனக் கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர் ஆலோசனை கைகொடுக்கும்.

    பரிகாரம்: மேல்மருவத்தூர் ஆதிபரா சக்தியை வணங்க துன்பங்கள் தீரும். மனக்கவலை அகலும்.
    Published by:Vaijayanthi S
    First published: