• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan : கடகம்- இந்த வார ராசிபலன் (ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07வரை)

Rasi Palan : கடகம்- இந்த வார ராசிபலன் (ஆகஸ்ட் 01 முதல் ஆகஸ்ட் 07வரை)

கடகம்

கடகம்

கடகம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்): இந்த வாரம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புக்களை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியதடை அகலும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.  அக்கம்பக்கத்தினரிடம்  சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.

    பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினருக்கு ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வெள்ளி

    பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா  பிரச்சனைகளும் தீரும். தடைகள் நீங்கும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: