Rasi Palan : கடகம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 13 முதல் ஜூன் 19 வரை)

கடகம்

கடகம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கடகம்

    இந்த வாரம் வீண் அலைச்சல் நீங்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பணம் வரும் வாய்ப்பு உள்ளது. தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்களுக்கு எதையும் புதுமையாக செய்து வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு மனதில் இருந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும்.

    அரசியல்வாதிகளுக்கு நீண்ட நாட்களுக்குப் பிறகு காரியங்கள் துரிதமாகும். புதிய பதவிகள் தேடிவரும். மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும்,  பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.

    மேலும் படிக்க... நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன் - வெள்ளி

    பரிகாரம்: குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அர்ப்பணித்து வணங்கி வர செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.
    Published by:Vaijayanthi S
    First published: