முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Rasi Palan : கடகம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

Rasi Palan : கடகம் - இந்த வார ராசிபலன் (ஜூன் 06 முதல் ஜூன் 12 வரை)

கடகம்

கடகம்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Last Updated :

கடகம்

இந்த வாரம் தொடக்கத்தில் காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், சீராக நடக்கும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபம் நீங்கும். பிள்ளைகளின் எதிர்கால நலனுக்காக  முக்கிய பணிகளை மேற்கொள்வீர்கள். உறவினர்கள், அக்கம் பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது.

பெண்களுக்கு மனதில் எதைபற்றியாவது சிந்தித்த வண்ணம் இருப்பீர்கள். அரசியல்வாதிகள் திட்டமிட்ட எந்த பணிகளும் துரித கதியில் நடைபெறும். கலைத்துறையினருக்கு தொழிலில் இருந்த பிரச்சனைகள் அகலும்.  மாணவர்களுக்கு  கல்வியில் சீரான போக்கு காணப்படும். கூடுதல் மதிப்பெண் பெற மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றிபெறும்.

அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - வியாழன் - வெள்ளி

பரிகாரம்: குல தெய்வத்தை வணங்க குடும்ப பிரச்சனை, தொழிற்பிரச்சனை கல்வியில் தடை போன்றவை விலகும். எதிலும் நன்மை உண்டாகும்.

மேலும் படிக்க... நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Rasi Palan