இன்று முதலீட்டாளர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமான நாள். இன்று முதலீடு செய்வது மிகவும் பலனளிக்கும். வியாபாரத்தில் எடுக்கும் முடிவுகள் லாபகரமாக இருக்கும். நிதி நிலைமைகள் மேம்படும்.
ரிஷபம்:
விலையுயர்ந்த பொருட்கள் திருடப்பட வாய்ப்புள்ளது, எனவே உங்கள் மதிப்புமிக்க பொருட்களை பத்திரமாக கண்காணிக்க வேண்டும். தேவையற்ற செலவுகளில் ஈடுபட்டால் நிதி நிலை மோசமாகும். வாகனம் ஓட்டும்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
மிதுனம்:
பிறருக்கு கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். இன்று பயணங்கள் லாபகரமாக இருக்கும். உங்கள் தொழிலுக்கான வெகுமதி இன்று கிடைக்க வாய்ப்புள்ளது. செல்வம் பெருகுவதை காண்பீர்கள்.
கடகம்:
சமூகத்தில் உங்கள் மீது மக்களின் மரியாதை அதிகரிக்கும். நிதி நிலைமைகள் மேம்படும். புதிய பணிகளைத் தொடங்க இன்று மிகவும் சாதகமானது, சுருக்கமாக சொன்னால் இன்று தொட்ட காரியங்கள் துலங்கும்.
சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்கள் இன்று ஆபத்துகள் அல்லது இடர்களை சந்திக்க நேரிடும். அவசரப்பட்டு எதையும் செய்வதைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணையின் வருமானம் அதிகரிக்கும். புதிய வாகனம் வாங்க வாய்ப்புள்ளது.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களே இன்று வியாபார பங்குதாரரே உங்களை ஏமாற்றலாம். சேர்ந்த செல்வத்திலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. முதலீடுகளில் கவனமாக இருங்கள் மற்றும் கடன் வாங்குவதையோ அல்லது கடன் கொடுப்பதையோ தவிர்க்கவும்.
துலாம்:
வழக்குகள் அல்லது நீதிமன்றம் தொடர்பான விஷயங்கள் தீரும். நிலம் அல்லது ரியல் எஸ்டேட் தொடர்பான வேலைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு, இன்று மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.
விருச்சிகம்:
இன்று விருச்சிக ராசியினருக்கு பழைய முதலீடு எதிர்பாராத வகையில் நன்மை தரும். வருமானம் பெருகும், பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.
தனுசு:
திடீர் செலவுகள் உங்கள் வரவு-செலவுத் திட்டத்தை பாதிக்கலாம். செலவு செய்யும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வேலை தேடும் நபர்கள் இன்று அதிர்ஷ்டசாலியாக இருக்கமாட்டார்கள் என்றாலும், ஆனால் கடின உழைப்பு உங்களுக்கு வாய்ப்புகளை வழங்கும்.
மகரம்:
வேலையில்லாத மகர ராசிக்காரர்களுக்கு இன்று பல நல்ல வேலை வாய்ப்புகள் வரும். நிதி நிலை கணிசமாக மேம்படும். புதிய முயற்சிகள் தொடங்குவதற்கு இன்று நல்லது.
கும்பம்:
இன்று தொழில் வியாபாரம் சிறு ஏற்ற இறக்கங்களை சந்திக்கும். ஆனால் உணவு மற்றும் கல்வி தொடர்பான தொழில், வியாபாரம் லாபம் தரும். மற்ற நாட்களை விட வருமானம் சிறப்பாக இருக்கும்.
மீனம் :
வேலையில் புதிய வாய்ப்புகள் உங்களுக்கு அதிக வருமானத்தைத் தரும். வெளியூர் பயணம் செய்ய திட்டமிடலாம். ரியல் எஸ்டேட் தொடர்பான விஷயங்கள் லாபகரமாக இருக்கும்.
Published by:Murugesh M
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.