ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

திருமணமாகாதவர்களுக்கு உங்களின் ராசிப்படி 2022ம் ஆண்டு எப்படி இருக்கும்?

திருமணமாகாதவர்களுக்கு உங்களின் ராசிப்படி 2022ம் ஆண்டு எப்படி இருக்கும்?

எல்லா கதை காதல் கதைகளும் திருமணத்தில் முடிவதில்லை. அதேபோல அனைவருமே மகிழ்ச்சியாக வாழ்வது இல்லை. ஆனால் திரைப்படங்களை மிஞ்சும் ரொமான்டிக் காதல் கதைகள் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையாக மாறியுள்ளது. காதலித்து திருமணம் கொண்டாலும் பெற்றோர்கள் பார்த்து நிச்சயக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும், நீடித்த திருமண உறவில் ஒரு சில விஷயங்கள் அவசியமாக இருக்க வேண்டும். பொதுவாக திருமணமான தம்பதிகளுக்கு ஆலோசனைகள் கூறப்பட்டாலும், பல ஆண்டு வெற்றிகரமாக வாழும் தம்பதிகள் கூறும் ஆலோசனைகள் பலருக்கும் உதவியாக இருக்கும்.

எல்லா கதை காதல் கதைகளும் திருமணத்தில் முடிவதில்லை. அதேபோல அனைவருமே மகிழ்ச்சியாக வாழ்வது இல்லை. ஆனால் திரைப்படங்களை மிஞ்சும் ரொமான்டிக் காதல் கதைகள் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கையாக மாறியுள்ளது. காதலித்து திருமணம் கொண்டாலும் பெற்றோர்கள் பார்த்து நிச்சயக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும், நீடித்த திருமண உறவில் ஒரு சில விஷயங்கள் அவசியமாக இருக்க வேண்டும். பொதுவாக திருமணமான தம்பதிகளுக்கு ஆலோசனைகள் கூறப்பட்டாலும், பல ஆண்டு வெற்றிகரமாக வாழும் தம்பதிகள் கூறும் ஆலோசனைகள் பலருக்கும் உதவியாக இருக்கும்.

திருமணமாகாதவர்கள் அல்லது இதுவரை சிங்கிளாக இருப்பவர்களுக்கு வரும் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்திக் கொள்ளலாம்...

  • Trending Desk
  • 3 minute read
  • Last Updated :

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்தையும் நாம் பெரிய ஆரவாரத்துடன் வரவேற்கிறோம். வருங்காலத்தில் நாம் எதிர்பார்த்தபடி நமக்கு நல்ல விஷயங்கள் நடக்குமா? இல்லை வேறு என்ன நடக்கும் என்பது தெரியாவிட்டாலும் புதிய வருடத்தை மகிழ்ச்சியோடும், நம்பிக்கையோடும் தொடங்குவோம். ஆனால், நாம் முன்னோக்கி செல்லும் பாதையை தீர்மானிப்பதில் நமது ராசியானது சந்தேகத்திற்கு இடமின்றி முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, திருமணமாகாதவர்கள் அல்லது இதுவரை சிங்கிளாக இருப்பவர்களுக்கு வரும் ஆண்டு எப்படி இருக்கும் என்பதை அறிய பிரபல ஜோதிடர் பண்டிட் ஜகன்னாத் குருஜி சில தகவல்களையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். சரி, ஒவ்வொரு ராசிக்கும் திருமண பலன்கள் இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்பதை தெரிந்துக் கொள்ளலாம்..

மேஷம்

நீங்கள் செய்யும் எல்லாவற்றிலும் ஆர்வத்துடன் இருப்பது நல்லது என்றாலும், அதிகப்படியான ஆர்வம் சில நேரங்களில் உறவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை மறக்காதீர்கள். மேஷ ராசிக்காரர்கள் எந்தவொரு உறவிலும் ஈடுபடும் போது சில விஷயங்கள் கடினமாக இருக்கும். ஏனெனில் அடிக்கடி சண்டைகள் வரும். ஆனால் 2022 இல், உங்களது உறவில் சில மாற்றங்கள் ஏற்படும். இது உங்களின் வாழ்க்கையில் காதலை ஏற்படுத்தும். திருமண யோகமும் வரும்.

ரிஷபம்

நீங்கள் ஒரு இலக்கை அடைய விரும்பினால், அனைத்து சிக்னல்களும் பச்சை நிறமாக மாறும் வரை காத்திருக்க கூடாது. முன்கூட்டியே அந்த காரியத்தை தொடங்கினால் நல்லது.  நீங்கள் உங்கள் வாழ்க்கை துணை அல்லது காதலை தேர்ந்தெடுப்பதற்கு இது உகந்த நேரமாகும். அதனால் நீங்கள் எதற்கும் பயப்படுவதை விட்டுவிட்டு, உங்களுக்கு மிகவும் பிடித்த நபருடன் சுதந்திரமாக பேச, பழக ஆரம்பியுங்கள். அது நிச்சயம் காதல் அல்லது திருமண உறவுக்கு வழிவகுக்கும் என்பதில் ஐயமில்லை.

மிதுனம்

2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகவும் சுவாரசியமான ஒருவரைச் சந்திக்கப் போகிறார்கள் என்பது உறுதி.

கடகம்

இந்த ராசியை கொண்ட சிங்கிள்களுக்கு ஒரு சிறப்பு வாய்ந்த உறவுடன் பழகும் வாய்ப்பு இருக்கும். ஆனால் இருவருக்கும் இடையே உணர்ச்சிபூர்வமான ஆதரவு இல்லாமல் போனால் உங்கள் உறவை தொடர முடியாது. எனவே, அவர்கள் உங்களை மிகவும் புரிந்து கொள்ள வேண்டும் என்றால் அவர்களுடன் போதுமான நேரத்தை நீங்கள் ஒதுக்க வேண்டும்.

சிம்மம்

2022 என்பது பெரும்பாலான சிம்ம ராசிக்காரர்களுக்கு காதல் நிறைந்த ஆண்டாக இருக்காது. எப்படியாவது தங்கள் காதலைக் கண்டுபிடிக்கும் சிம்ம ராசிக்காரர்கள் பல விஷயங்களை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் உங்கள் காதல் உறவுக்காக ஏங்கவில்லை என்றால், இப்போதைக்கு தனியாக இருப்பது நல்லது.

கன்னி

இந்த வருடம் விசேஷமான ஒருவரைச் சந்திப்பது பெரும்பாலான கன்னி ராசியினருக்கு எளிதாக இருக்கும். ஆனால் அதன்பிறகு ஏற்படும் பிரச்சினைகளுக்கு உங்களை நீங்களே தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், வாழ்க்கையைப் பற்றிய உங்களது சாதாரண அணுகுமுறை உங்களின் துணையால் அதிகம் பாராட்டப்படாது.

துலாம்

துலாம் ராசிக்காரர்கள் தங்களின் சரியான துணையை கண்டுபிடிக்க இந்தாண்டு நிறைய முயற்சிகளை எடுக்க வேண்டியிருக்கும். உணர்ச்சிப்பூர்வமான இணக்கத்தன்மை, இலக்கு சார்ந்த அணுகுமுறை மற்றும் தொழில் பாதை இலக்கு ஆகியவற்றின் அடிப்படையில் நீங்கள் உங்களுக்கு பொருந்தக்கூடிய ஒருவரை கண்டுபிடிக்க வேண்டும்.

விருச்சிகம்

இந்த ராசியைச் சேர்ந்த சிலர் இப்போதைக்கு சிங்கிளாக இருப்பதே நல்லது. ஆனால் எதிர்காலத்தில் இதே போன்ற நிலை தொடர வாய்ப்பில்லை. நீங்கள் விரைவில் உணர்ச்சி மற்றும் காதல் நிறைந்த உறவில் ஈடுபடும் வாய்ப்புகள் உள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் வாழ்க்கையில் மிகச் சுதந்திரமான அணுகுமுறையைக் கொண்டிருப்பவர்களாக அறியப்படுகிறீர்கள். குறிப்பாக நீங்கள் எந்த உறவிலும் ஒரு பகுதியாக இல்லாதபோது உங்களுக்கான தனிப்பட்ட வாழ்க்கையை சுதந்திரமாக நீங்கள் வாழ்வீர்கள். இருப்பினும் 2022 ஆம் ஆண்டில், ஒரு புதிய உறவு உங்களின் கதவுகளைத் தட்டக்கூடும். ஆனால் அது எல்லோருக்கும் பொருந்தாது.

மகரம்

2021ம் ஆண்டு தனிமையில் இருக்கும் மகர ராசிக்காரர்கள் அடுத்த ஆண்டு இறுதி வரை சிங்கிளாக அப்படியே இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் இந்த ராசிக்காரர்களின் மனதில் வேலையும் வியாபாரமும் தொடர்ந்து ஆட்சி செய்யும். இதனால், காதல் அல்லது திருமண உறவு உண்டாவதற்கான வழிகள் இல்லை.

கும்பம்

தனிமையில் இருக்கும் இந்த ராசிக்காரர்களுக்கு 2022ம் ஆண்டு கடைசி ஆண்டாக இருக்கலாம். ஏனெனில் அடுத்த ஆண்டு திருமணம் ஆகிவிடும். இந்த காலகட்டத்தை அவர்கள் அதிகம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் தங்கள் தொழில் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகளில் ஆண்டு முழுவதும் கவனம் செலுத்துவார்கள். இருப்பினும், விசேஷமான ஒருவர் விரைவில் உங்களின் வாழ்க்கையில் நுழையலாம்.

First published:

Tags: Marriage, New Year, New Year 2022, New Year Celebration, Rasi Palan