• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Horoscope : விருச்சிகம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை

Horoscope : விருச்சிகம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை

விருச்சிகம்

விருச்சிகம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction April 11, 2021 - April 17, 2021

  • Share this:
    விருச்சிகம்: இந்த வாரம் குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். உத்தியோகஸ்தர்கள் தூர தேசம் பயணம் எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு வேலை உத்தரவாதம் கிடைக்கவிருக்கிறது.

    வேலை வாய்ப்பினை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிடைக்கும். தொழிலில் அனுகூலமான செய்திகள் தேடி வரும். நீண்ட தூர பிரயாணங்களில் இருந்த சுணக்க நிலை மாறும். வழக்குகளில் வெற்றி கிட்டும். பெண்கள் தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள்.  அழகிய பெரிய வீடும் மற்றும் விலை உயர்ந்த வாகனமும் வாங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

    கலைத்துறையினருக்கு தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டாம். அரசியல்வாதிகள் விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். மாணவர்கள் படிப்பினில் சாதனைகள் புரிவர். எதிர்நோக்கியிருக்கும் சவால்களையும் முடிப்பீர்கள். சுற்றுலா சென்று வருவீர்கள்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - புதன் - வெள்ளி

    பரிகாரம்: ஸ்ரீதுர்க்கையை வழிபடுவது நல்லது. மது மாமிசத்தை அறவே விட வேண்டும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: