Horoscope : துலாம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை

Horoscope : துலாம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை

துலாம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction April 11, 2021 - April 17, 2021

  • Share this:
    துலாம்: இந்த வாரம் மிகுந்த தன்னம்பிக்கையுடையவரான தங்களுக்கு தெய்வ அனுகூலமும் சேர்ந்து இருப்பதால் சாதனைகள் புரிவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். சில மாற்றங்கள் வந்து சேரும்.  அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும்.  உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும்.  பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

    தொழிலில் வியாபாரங்கள்  கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற  வேண்டி வரும். பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டும். மக்கள் நலனிற்கு எந்த குறைபாடும் இருக்காது. தொழில் வெற்றியடையும் கவலை வேண்டாம். பெண்கள்  கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள்.

    பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது. கலைத்துறையினர் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் வருவாய் உண்டு. சோதனைகள் வெற்றியாக மாறும்.

    அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. எதிர்கால படிப்புகளுக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி

    பரிகாரம்: கோளறு பதிகம் படிப்பது. சிவன் கோவிலுக்கு இளநீர் அபிஷேகம் செய்வது.
    Published by:Vijay R
    First published: