• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Horoscope : ரிஷபம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை

Horoscope : ரிஷபம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை

ரிஷபம்

ரிஷபம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction April 11, 2021 - April 17, 2021

  • Share this:
    ரிஷபம்: இந்த வாரம் நெடுங்காலமாக தடைபட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறும். வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும். உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை அகலும். மனஸ்தாபங்கள் நீங்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பார்த்துக் கொண்டிருக்கும் வேலையில் இடமாறுதல்கள் ஏற்படலாம்.

    புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது.  பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். பெண்கள் ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.

    பிதுரார்ஜித சொத்து விஷயங்களில் ஒரு நல்ல முடிவுகள் வந்து சேரும். கலைத்துறையினருக்கு ஓரளவு முன்னேற்றம் கிடைக்கும். தாங்கள் மேன்மையடைந்திட புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வரலாம்.

    அரசியல்துறையினருக்கு அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாட வேண்டிய நிலை ஏற்படலாம். உங்களுக்கு எதிரானவர்கள் மேல் ஆத்திரம் கொள்ள வேண்டாம். மாணவமணிகளுக்கு புதியதாக கல்வி பயில மனம் ஆனந்தப்படும். நல்ல நட்பு வட்டாரம் கிடைக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி

    பரிகாரம்: லக்ஷ்மி நரஸிம்மரை வணங்குங்கள். பேசும் வார்த்தையிலும் கொடுக்கும் வாக்கிலும் நிதானம் தேவை.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: