• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Horoscope : மேஷம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை

Horoscope : மேஷம் ராசிக்கான இந்த வார ராசி பலன் | ஏப்ரல் 11 முதல் ஏப்ரல் 17 வரை

மேஷம்

மேஷம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction April 11, 2021 - April 17, 2021

  • Share this:
    மேஷம்: இந்த வாரம் சுணக்க நிலை மாறும். வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். பண விஷயங்கள் தாராளமயமாக இருக்கும். இருந்தபோதும் நீங்கள் படும் கஷ்டம் வெளியே தெரியாது. நீங்கள் எப்போதுமே பிறர் கண்ணுக்கு சௌகரியமான வாழ்க்கை வாழும் ஆளாகத் காட்சி தருவீர்கள். நீங்கள் யாரிடமும் உங்களது குறைகளைத் தெரிவித்துக் கொள்ள மாட்டீர்கள். வீட்டில் நடைபெற வேண்டிய சுபகாரியங்கள் சுமூகமாக நடைபெறும்.'

    உத்தியோகஸ்தர்களுக்கு காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மேன்மைகளை அடைவீர்கள். வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய வியாபார ஒப்பந்தங்கள் நடந்தேறும். புதிய கடனுக்கான முயற்சிகளை இக்கால கட்டத்தில் முடித்துக் கொள்ளுதல் நன்மை பயக்கும்.

    பெண்கள்  தடைபட்டிருந்த திருமண ஏற்பாடுகள் இனிதே நிறைவேறும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்துறையினருக்கு உங்கள் மேல் போட்டி மற்றும் பொறாமை கொண்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள்.  மாணவர்களுக்கு கல்வி விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும். புதிய நட்புகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வியாழன்

    பரிகாரம்: திருச்செந்தூர் செந்திலதிபனை நினையுங்கள். அனைத்து காரியங்களும் தங்கு தடையின்றி நடைபெறும். சஷ்டி தோறும் அருகிலிருக்கும் முருகன் கோவிலில் பால் அபிஷேகம் செய்யுங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: