• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan : மிதுனம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 04 முதல் ஜுலை 10 வரை)

Rasi Palan : மிதுனம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 04 முதல் ஜுலை 10 வரை)

மிதுனம்

மிதுனம்

மிதுனம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

    சாமர்த்திய மிதுனம் என்பதற்கேற்ப நன்றாக சிந்தித்து நல்ல யோசனைகளால் மற்றவர் மனம் நோகாமல் சாமர்த்தியமாக பேசி சமாளிக்கும் ஆற்றலும் வாழ்க்கையில் வளமும் நலமும் அதிகம் பெறும் மிதுன ராசி அன்பர்களே நீங்கள் செயல்படாமல் மூடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையான செயல்பட்டுக்கு வந்து விடும். உங்கள் செயல்பாட்டின் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்களின் உதவிக்கரம் முழு காரணமாக இருச்கும்.

    கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் அனுகூல  பயன்கள் உண்டாகும். தந்தை வழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி உண்டு சிறிது பொறாமைப்படுவார்கள்.

    உத்தியோகஸ்தர்கள் அரசு மற்றும் தனியார்துறைகளில் பணிபுரிபவர்களின் செயலில் இருந்த மந்தநிலைகள் நீங்கி சுறுசுறுப்பான செயல்பாடுகள் உருவாகும்.  நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ள தேவையான பயிற்சி படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும்.

    தொழிலதிபர்கள் புதிய ஆர்டர்கள் கிடைக்கப்பெற்று தங்கள் தொழிலில் வளம் காண்பார்கள்.

    பெண்கள் நிறைவான வகையில் சத்தான பாக்கியம் அடையலாம். அழகு சார்ந்த  பொருட்களை உருவாக்கும் பெண்கள் நிறை வேலை வாய்ப்புகள் பெற்று மனமகிழ்ச்சி அடைவார்கள்.

    மாணவர்கள் படிப்பினில் ஆர்வம் காட்டி பெற்றோருக்கு நற்பெயர்  வாங்கித்தருவர். மாணவர்கள் தகுந்த சமயத்தில் நுணுக்கங்களை அறிந்து நற்பெயர்  அடைவார்கள். நண்பர்களும் உதவி செய்வார்கள்.

    பரிகாரம்: முடிந்த வரை புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும். புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு தேங்காய் நீராஞ்சன தீபம் ஏற்றவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: