Rasi Palan : கும்பம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 04 முதல் ஜுலை 10 வரை)

கும்பம்

கும்பம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கும்பம் (அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

    வாக்குறுதி என்பதி சத்தியத்திற்கு மேலானது என்பதை உணர்ந்து உங்கள் உண்மையான வார்த்தைகளால் இரும்புக் கதவையும் திறக்கும் திறமையுடைய அணுகுமுறையும் கொண்ட கும்ப ராசி அன்பர்களே

    இந்த வாரம் வீடு மனை வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வ ஏண்ணிய சொத்துக்களால் வருமானம் கிடைக்கும். எதிரிகளால் இருந்த  தொந்தரவுகளை சமாளிக்க கடந்த காலங்களில் பணம் விரையமானது. அந்நிலை அடியோடு அழிந்து விட்டது. மேலும் நோய்களுக்கான சிகிக்சைக்கோ  வீணான செயல்களுக்கோ கிரகநிலை இடம் தராது. கணவன் மனைவி மற்றும் குடும்ப ஒற்றுமை மேலோங்கும். உங்களின் ணத் தேவைகளுக்கு  வாழ்க்கைத்துணையின் உதவி நிச்சயம் உண்டு.

    உத்யோகஸ்தர்கள் அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையைக் காண்பீர்கள். உங்களின் வேலைகளை தன்னம்பிக்கையுடன் செய்து முடிப்பீர்கள்.  பணப்புழக்கம் அதிகமாகும். உங்கள் வேலைகளுக்கு உரிய அங்கீகாரத்தை மேலதிகாரிகள் வழங்குவார்கள். சக ஊழியர்கள் சற்று தள்ளியே இருப்பார்கள்.

    தொழிலதிபர்கள் அடுக்குமாடி கட்டடங்களை கட்டி விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும் ஆதாயம் பெற்று முன்னேற்றம் அடைவார்கள்  பணப்புழக்கம் தங்கு தடையின்றி இருக்கும். நிறுவனத்தின் புகழ் எட்டுத்திக்கும் பரவும். வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சுமுகமாக  முடியும்.

    பெண்கள் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணிபுரியும் பெண்கள் நிர்வாகத்தாலும் உயர்அதிகரிகளாலும் இடப்படும் கட்டளைகளை  கவனமுடன் செயல்படுத்தி வேலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். சுயதொழில் செய்யும் பெண்கள் தங்கள் தொழில் சிறக்க வேலை தெரிந்த  மற்ற பெண்களையும் கூட்டு சேர்த்துச் கொள்ளலாம்.

    மாணவர்களுக்கு மருத்துவம், பொறியியல், தகவல் தொழிற்நுட்பம் மற்றும் விவசாயம் ஆகியோர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். விரும்பிய  துறைகளில் எடுத்து படிப்போருக்கு சிறந்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

    பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும்.  நவகிரகத்திற்கு நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.
    Published by:Karthick S
    First published: