• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan : கடகம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 04 முதல் ஜுலை 10 வரை)

Rasi Palan : கடகம் - இந்த வார ராசிபலன் (ஜுலை 04 முதல் ஜுலை 10 வரை)

கடகம்

கடகம்

கடகம் ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)

    எதிர்காலம் நம் கையில் என்பதற்கேற்ப எதற்கும் கலங்காத மனமும் எதிர்ப்பைக் கண்டு அஞ்சாத குணமும் வருங்கால் முன்னேற்றம் குறித்து எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருக்கும் தீர்க்கதரிசிகளான கடக ராசி அன்பர்களே

    குடும்பத்தில் ஒற்றுமை கூடும். அரசாங்க அதிகாரிகளின் அனுகூலமான செயல்கள் உங்களுக்கு தேவையான சமயத்தில் கிடைக்கும். பூமி தொடர்பான விற்பனை தொழில் வாய்ப்புகளைப் பெற்றவர்கள் சுமாரான அளவில் லாபம் பெறுவார்கள்.

    உத்தியோகஸ்தர்கள் அரசுத்துறைகளில் அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் சிலரது குறுக்கீடுகளின் காரணமாக சோர்வு மனப்பான்மைக்கு ஆளாவார்கள். பின்னர் வரும் காலங்களில் தகுந்த ஆலோசனைகள் கிடைக்கப்பெற்று தங்கள் பணியில் சிறந்து விளங்குவார்கள்.

    தொழில்திபர்கள் தங்கள் நிறுவனத்தின் புகழை பரப்ப புதிய விளம்பர வியாபாரம் தொடர்பான வாகனங்கள் வைத்திருப்பாவர்கள், வாகன பராமதிப்புக்காக செலவு செய்ய வேண்டியது இருக்கும்.

    பெண்கள் பணிச்சுமைகள் காரணமான மனக்குழப்பமும் துக்கமின்மையும் உண்டாகி பின்னர் சரியாகும்.  புத்திர பாக்கிய அமைப்பு அனுகூல நிலையில் உள்ளது.

    மாணவமணிகள் சிறப்பான பலனைக் காணலாம். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக  இருக்கும். கைவிட்டுப் போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.

    பரிகாரம்: திங்கள்கிழமைதோறும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சென்று எழுமிச்சை தீபம் ஏற்றி வழிபடவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: