Horoscope : மீனம் ராசிக்கான இந்த வார ராசி பலன்கள் | மார்ச் 28 முதல் ஏப்ரல் 03 வரை

மீனம்

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Weekly prediction March 28, 2021 - April 03, 2021

  • Share this:
    மீனம்: பிறர் கூறுவதற்கு மதிப்பளிக்கும் மீன ராசி அன்பர்களே! இந்த வாரம் .வீண் வாக்குவாதங்கள் அகலும். மனதில் உற்சாகம் ஏற்படும். ஆனாலும் வீண் பகை உண்டாகலாம். நண்பர்களிடம் இருந்து பிரிய வேண்டி இருக்கும். கவுரவ பங்கம் ஏற்படாமல் கவனமாக செயல்படுவது நல்லது.

    தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க எடுக்கும் முயற்சிகளில் சாதகமான நிலை காணப்படும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பணிகளை சிறப்பாகச் செய்து மேலிடத்தில் பாராட்டு பெறுவார்கள்.
    குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி சுமுகமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம்.

    பெண்களுக்கு கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.
    மாணவர்கள் மிக கவனமாக பாடங்களை படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சி செய்வீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும்.

    பரிகாரம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தியை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், சனி.
    Published by:Ram Sankar
    First published: