Corona Rasipalan: வாழ்க்கையை கொரோனா மாற்றிவிட்டதா? உங்கள் ராசி என்ன சொல்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்..

கொரோனா

இந்த கொரோனா காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்க உங்கள் ராசி என்ன சொல்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

  • Share this:
கொரோனா வைரஸ் நாலாபுறமும் சுழன்று அடித்து வருகிறது. ஒரு முடிவே இல்லையா? என மக்கள் நாள்தோறும் புலம்பி வருகின்றனர். கவலை, வெறுப்பு, பதட்டம் என எதிர்மறையான விஷயங்களை அனைவரும் சூழ்ந்து ஆட்டிபடைக்கும் காலமாக இந்த நேரம் இருந்து வருகிறது. ஜோசியத்தின்படி, நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என தெரிந்து கொண்டீர்கள் என்றால், விழிப்புணர்வுடன் இருக்க வசதியாக இருக்கும். உங்கள் ராசி என்ன சொல்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

மேஷம்

கொரோனா தொற்று நோயால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடியில், நீங்கள் அவசர முடிவுகளை எடுப்பீர்கள். சூழ்நிலைகள் அத்தகைய முடிவுகளை எடுக்க உங்களைத் தள்ளும் என்றாலும், நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அவசர முடிவுகள் உங்களை நெருக்கடிக்கு மட்டுமே தள்ளும். மிகப்பெரிய பிரச்சனைகளுக்குகூட அழைத்துச் செல்ல வாய்ப்புகள் உள்ளன என்பதால், முடிவுகள் எடுப்பதில் பொறுமை அவசியம்.

ரிஷபம்

இந்த பெருந்தொற்று காலத்தில் சமூகத்தோடு ஒன்றிப்போவது நல்லது. உங்களுக்காக புதிய பாதைகளை வகுத்துக்கொண்டு அதன்வழியே செல்ல முயற்சிக்க வேண்டாம். புதிய பாதை உங்களுக்கு ஏராளமான ஆபத்துக்களையும், சிக்கல்களையும் கொடுக்க வாய்ப்புகள் உள்ளன. ஏற்கனவே பெருந்தொற்றால் அவதிப்படும் நீங்கள், மேலும் சிக்கல்களில் சென்று சிக்கிக்கொள்ள வேண்டாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! உங்களுக்கு வரும் சூழ்நிலைகள் குறுகிய காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். முடிவுகளை எடுக்க அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அது ஆபத்தை ஏற்படுத்தும். எவ்வளவு சீக்கிரம் முடிவுகளை எடுக்கிறீர்களோ, அது உங்களுக்கு நன்மை பயக்கும். அதனால், எதிர்கொள்ளக்கூடிய சங்கடமான சூழ்நிலைக்கு தயாராக இருந்து, அதனை உங்களுக்கானதாக மாற்றிக்கொள்ளுங்கள்.

கடகம்

கொரோனா வைரஸால் உங்களுடைய வாழ்க்கை ஏதாவதொரு புள்ளியில் நிறுத்தப்பட்டிருக்கும் அல்லது தொடர்ந்து பயணிக்க முடியாத நிலையில் இருப்பீர்கள். அதனால், உங்கள் மனதில் உண்டாகும் உணர்ச்சிகளுக்கு இடம் கொடுக்காதீர்கள். நிதானத்தையும், பொறுமையையும் கடைபிடிக்க வேண்டியது அவசியம். நிதி அல்லது குடும்பம் என எதுவாக இருந்தாலும் பொறுமையாக முடிவெடுத்தால் நிச்சயம் வெற்றி பெறலாம்

சிம்மம்

சுகாதார பேரிடர் காலம் உங்களை முற்றிலும் முடக்கிபோட்டிருக்கும். நீங்கள் எதனைச் செய்ய முடிவெடுத்தாலும், அந்த இலக்கை அடைவதற்கு நீண்ட நேரம் அல்லது காலமாகும். தொழில் அல்லது குடும்பம் என எதுவாக இருந்தாலும் உங்களுக்கு கிடைக்கும் அனுபம் ஒரேமாதிரியாக இருக்கும். அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம். முயற்சியை மேலும் அதிகரித்தால் நிச்சயம் வெற்றி உங்களை வந்தடையும்.

கன்னி

இந்த தொற்றுநோய் காலம் உங்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரக்கூடும். வேலை வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நிதி சார்ந்த எந்த பிரச்சனைகளும் உங்களுக்கு இருக்காது, பணம் உங்களைத் தேடி வரும். புதிதாக தொழில் அல்லது வேறு ஏதேனும் தொடங்க திட்டமிட்டிருந்தால், தைரியமாக நீங்கள் அதனை செய்யலாம். இது உங்களுக்கான காலம். உழைப்பைக் கொடுத்தால் வெற்றி உங்களைத் தேடி வரும்.

துலாம்

கொரோனா காலத்தில் நீங்கள் ஒத்த எண்ணம் கொண்ட நபர்களுடன் பயணிக்க தொடங்குவீர்கள். நிதி சார்ந்து ஒரு குழுவை உருவாக்குவீர்கள் அல்லது நண்பர்களுடன் இணைந்து புதிய தொழிலை தொடங்குவீர்கள். தன்னார்வ தொண்டு நிறுவனம் அல்லது கூட்டுறவு போன்ற குழுக்களையும் உருவாக்குவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் பண ஆதாயத்தை அடிப்படையாகக்கொண்டே இருக்கும். நல்ல வளர்ச்சியை எட்டும் வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்

எந்த மாற்றத்தையும் விரும்பாமல், தற்போதைய நிலையிலேயே தொடர்ந்து பயணம் செய்வீர்கள். ஏனென்றால், எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டிய அவசியத்தை நீங்கள் உணர்ந்திருக்கமாட்டீர்கள். நிதி வரவு நன்றாக இருக்கும் அதேவேளையில், மற்றவர்கள் கடன் வாங்குவதற்காக உங்களை அணுகுவார்கள். பிறருக்கு கடன் கொடுப்பதற்கு முன்பு, உங்கள் தேவைக்கான பணம் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

தனுசு

கொரோனா காலத்தில் உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். உங்களுக்கு தேவையான நிதி சிக்கல்களை போக்குவதற்கு தேவையன உதவிகளையும் செய்வதற்கு முன்வருவார்கள். மேலும், அவர்களும் உங்களிடம் உதவியை எதிர்பார்பார்கள். முடிந்தளவுக்கு பிறருக்கு உதவி செய்ய முயற்சி செய்யுங்கள்.

மகரம்

கொரோனா காலத்தில் மகர ராசிக்காரர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செலவு செய்ய வேண்டும். தேவையற்ற அல்லது ஆடம்பர விஷயங்கள் அல்லது பொருட்கள் மீது ஆர்வம் கொண்டு செலவு செய்தீர்கள் என்றால், உங்கள் வங்கி இருப்பு காணாமல் போய்விடும். அத்தியாவசிய தேவைக்கு செலவு செய்ய உங்களிடம் பணம் இருக்காது. எனவே, முடிந்தவரை கையில் இருக்கும் பணத்தை சேமித்து வைத்துக்கொள்ளுங்கள்.

கும்பம்

உங்களுக்கு நிதிச் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் சிக்கல்களை எதிர்கொள்ளும் நேரத்தில் உங்களுக்கு சிலர் ஆலோசனை கொடுப்பதுடன், உதவுவதற்கும் முன்வர வாய்ப்புகள் உள்ளன. சீரான வருமானத்ததை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். இதனைக் கடைபிடித்தால் உங்களின் தற்போதைய நிலை மேம்படும். யாரேனும் ஒருவர் ஆலோசனைக் கொடுத்தால், அதனை நிராகரிக்காமல் உங்களுக்கு தேவையான சில விஷயங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.

மீனம்

பண வரவு இல்லாமல் சிக்கல்களை எதிர்கொள்கிறீர்கள் என்றால், புதிதாக ஒருவர் உங்களுக்கு வேலை கொடுக்க வாய்ப்புகள் உள்ளன. அந்த வாய்ப்பு, நிதி நிலைமையை மேம்படுத்த உதவாது என்றாலும், அன்றாட வாழ்க்கையை சமாளிப்பதற்கு உகந்ததாக இருக்கும். ஏற்கனவே, உங்களுக்கு பழக்கமான அல்லது தெரிந்த நபர்கள் யாரும் உதவமாட்டர்கள். முகமறியாத அல்லது புதிய நபர்களிடம் வாய்ப்பு கிடைக்கும்.

 
Published by:Tamilmalar Natarajan
First published: