• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • 90ஸ் கிட்ஸ்களுக்கு குரு பலம் எப்படி உள்ளது? தள்ளிப்போகும் திருமணம் நிறைவேறுமா?

90ஸ் கிட்ஸ்களுக்கு குரு பலம் எப்படி உள்ளது? தள்ளிப்போகும் திருமணம் நிறைவேறுமா?

குரு பெயர்ச்சி

குரு பெயர்ச்சி

பலமிழந்து அமையப் பெற்ற கிரகங்களின் மீது குரு பார்வை இருந்தால், அவற்றின் தோஷங்கள் விலகி பலமுள்ளதாக மாறிவிடும்.

 • Share this:
  குருவின் பார்வை எதையும் முழுமையாக்கும். குருபகவான் தனது பொற்பார்வையால் அன்பர்களுக்கு பலன்களை அள்ளித் தருவார். கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குரு பகவான் செப்டம்பர் 14-ஆம் தேதி வக்ர கதியில் மகர ராசிக்கு திரும்புகிறார். பின்னர் நேர்கதியில் மீண்டும் நவம்பர் 20ஆம் தேதி ( கார்த்திகை மாதம் 4ஆம் தேதி ) கும்ப ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி 2022 ஆம் ஆண்டு வரை பயணம் செய்வார். இந்த குருவின் பயணத்தாலும் அவரின் பார்வையாலும் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கப் போகிறது என்பதை பார்க்கலாம்.

  ஒருவரின் ஜனன கால ஜாதகத்தில் குரு வலுவாக இருப்பின் அந்த நபருக்கு எந்த ஒரு கடின நிலையில் குருவின் அற்புத பலனால் நிலையான பலன்களைத் தான் பெறுவார்கள் என்பது ஜாதகப்படியான விதி. சுப காரியங்களுக்கு முகூர்த்த நிர்ணயம் செய்யும்போது குரு பலம் பார்த்து நாள் நிச்சயம் செய்வது வழக்கம்.

  அப்படி திருமணம் யோகம் யாருக்கு அமையப்போவது, 90ஸ் கிட்ஸ் இன்னமும் திருமணமாகாமல் வரன் தேடிக்கொண்டிருந்தால், குருப் பார்வை படுமாயின் உடனே திருமணம் நிச்சயமாகும்.

  கோச்சார குரு, ஜென்ம சந்திரன் நின்ற வீட்டிலிருந்து 2,5,7,9,11 ம் இடங்களில் சஞ்சரிக்கும்போது கோச்சார குரு பலம் வாய்ந்தவராக இருப்பார். இதையே குரு பலம் என குறிப்பிடுகிறார்கள்

  தான் இருக்கும் இடத்தில் இருந்து 5, 7, 9 ஆகிய இடங்களை குரு பகவான் பார்வை செய்கிறார். குரு நின்ற வீட்டில் அதிக நற்பலன்களை கொடுப்பதில்லை என்றாலும், பார்வை செய்யும் இடங்கள் ஏற்றம் பெறுகிறது. ‘குரு பார்க்க கோடி புண்ணியம்’ என்பது ஆன்றோர் வாக்கு. எத்தகைய தோஷம் இருந்தாலும் குரு பார்த்தால் விலகிவிடும்.

  குரு திசை ஒருவருக்கு நடைபெற்றால், ராஜாவின் திசை நடப்பதாக கூறுவார்கள். வலுபெற்று அமைந்த குரு திசை ஒருவருக்கு இளமையில் நடைபெற்றால், அவர் கல்வியில் சாதனை மேல் சாதனை செய்வார். திருமண வயதில் நடைபெற்றால் சிறப்பான மண வாழ்க்கை, தொழில் ரீதியாக மேன்மை, பொருளாதார உயர்வு ஏற்படும். இறுதி காலத்தில் நடைபெற்றால் புத்திரர்களால் உயர்வு, சமுதாயத்தில் பெயர், புகழ் உண்டாகும்.

  பலமிழந்து அமையப் பெற்ற கிரகங்களின் மீது குரு பார்வை இருந்தால், அவற்றின் தோஷங்கள் விலகி பலமுள்ளதாக மாறிவிடும். குரு தனித்து இருப்பது நல்லதல்ல. அதுவே குரு கிரகச் சேர்க்கையுடன் அமைந்தால், அந்த இடம் பலம் வாய்ந்ததாக மாறுகிறது.

  குரு, கோட்சார ரீதியாக 2, 5, 7, 9, 11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில், பொருளாதார மேன்மை, திருமணம் போன்ற சுபகாரியங்கள் கைகூடக்கூடுதல், புத்திர பாக்கியம் போன்ற யாவும் சிறப்பாக அமையும். ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் கோட்சார குரு வரும் போது, குரு பலம் என கூறுகிறோம். ஆனால் குரு ஒரு சுற்றுக்கு 12 வருடம் எடுத்து கொள்வதால், ஒருவருக்கு 5 முறை தான் குரு பலம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

  ஒருவர் ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் குரு பார்வை பட்டால் அந்த தோஷம் நீங்கும் என்பார்கள். அதாவது ஒருவருக்கு திருமணத்தில் தடை இருந்தால், குரு பார்வை படும்போது தடை நீங்கி உடனே திருமணத்தை நடத்தி தருவார். ஜாதகத்தின் விதியையும்  மாற்றும் வல்லமை, குரு பகவானுக்கு மட்டுமே உள்ளது. எனவேதான் திருமணத்தில் குரு பலம் வந்துவிட்டதா? என நன்கு  அறிந்த பின் திருமண முயற்சிகளில் ஈருபடுவார்கள்.

  குருவின் பார்வை களஸ்திர ஸ்தானத்தில் வரும்போது திருமண வயதில் உள்ளவர்களுக்கு, அந்த காலகட்டத்தில் நிச்சயம் திருமணம் கைகூடிவரும். அதுபோல குருபகவானின் பார்வை புத்திர ஸ்தானத்தில் இருந்தால். அந்த ஜாதகருக்கு அந்த குருபெயர்ச்சி காலத்தில் குழந்தை செல்வம் கிடைக்கும்.

  ஒரு ஜாதகத்தில் குருவின் அருள் முழுமையாக இல்லாவிட்டால் திருமணம் கால தாமதமாகலாம். அல்லது திருமண வாழ்வில் நிம்மதியின்மையோ, குழந்தை பேறோ கிடைக்காமல் இருக்கலாம். இந்த குறையை சில பரிகாரங்களின் மூலமாகவும் குரு ஆராதனைகள் மூலமும் முழுவதும் நிவர்த்தி செய்யலாம்.

  Also Read:
  குரு பெயர்ச்சி பலன்கள் 2021: 12 ராசிகளுக்கான பொது பலன்கள்


   

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Yuvaraj V
  First published: