முகப்பு /செய்தி /ஆன்மிகம் / துலாம் ராசிக்கு குருப்பெயர்ச்சி 2022 - 23 எப்படி இருக்கும்? - ஜோதிடர் காழியூர் நாராயணன்

துலாம் ராசிக்கு குருப்பெயர்ச்சி 2022 - 23 எப்படி இருக்கும்? - ஜோதிடர் காழியூர் நாராயணன்

Gurupeyarchi 2022- 2023 - Thulam Rasi Palan | துலாம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

Gurupeyarchi 2022- 2023 - Thulam Rasi Palan | துலாம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

Gurupeyarchi 2022- 2023 - Thulam Rasi Palan | துலாம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்.

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

சிறந்த நண்பர்களையும், நல்ல உறவினர்களையும் கொண்ட துலாம் ராசி நண்பர்களே! நீதி நேர்மையுடன் நீங்கள் நடக்க விரும்புவீர்கள். மனதில் சரி என்று பட்டதை மறைக்காமல் வெளியிடும் மனப்பக்குவம் கொண்டவர்கள். இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்தார். அவரால் குடும்பம் மேம்பட்டிருக்கலாம். நல்ல பணப் புழக்கத்தை தந்திருப்பார். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தி வைத்திருப்பார். பிள்ளைகளால் பெருமை கிடைத்திருக்கும். பெண்களால் எண்ணற்ற முன்னேற்றத்தை அடைந்திருப்பீர்கள். இந்த நிலையில் இப்போது குரு பெயர்ச்சி நடக்கிறது. குரு பகவான் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார்.

இது சாதகமான நிலை என்று சொல்ல முடியாது. 5-ம் இடத்தில் இருந்தது போன்ற நன்மைகளை அவரால் கொடுக்க முடியாது. அதே நேரம் மிகவும் பிற்போக்கான பலனையும் அவர் தரமாட்டார். பொதுவாக 6-ம் இடத்தில் இருக்கும் குரு உடல்நலத்தை பாதிப்புக்குள்ளாக்குவார். மனதில் தளர்ச்சியை ஏற்படுத்துவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனாலும் அதற்காக கவலை கொள்ள வேண்டாம்.

குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 9-ம் இடத்து பார்வை மிகவும் சாதகமாக காணப்படுகிறது. குருவின் பார்வைக்கு கோடி நன்மைகள் உண்டு என்பார்கள். குருவின் பார்வை மூலம் எந்த இடையூறுகளையும் தடுத்து நிறுத்தலாம். மேலும் அவர் ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார் மாறாக நன்மையே தருவார். குரு வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மீன ராசிக்குள்ளேயே இருக்கிறார்.

சனிபகவான் 4-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. சனி வீண் விரோதத்தை கொடுப்பார். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலம் நன்மை கிடைக்கும். மேலும் சனிபகவான் மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை வக்கிரம் அடைகிறார்.

வக்கிர காலத்தில் அவரால் சிறப்பாக செயல்பட முடியாது. சாதகமற்ற கிரகம் செயல்பட முடியாமல் போவது உங்களுக்கு சாதகம் தானே. அவர் 2023மார்ச்29-ந் தேதி அன்று 5-ம் இடமான கும்பத்திற்கு செல்கிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் அப்போது அவரது 7-ம் இடத்துப் பார்வை மூலம் நற்பலனை தருவார். ராகு தற்போது 7-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. இங்கு அவரால் இடப்பெயர்ச்சியையும், அவப்பெயரையும் சந்திக்க நேரலாம். சிலர் கெட்டவர்களோடு சேரும் சூழ்நிலை உருவாகும். யாரிடமும் கவனமாக பழக வேண்டும். தற்போது கேது உங்கள் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல அவர் சிறுசிறு தடையையும், உடல் உபாதையையும் தரலாம்.

அதற்காக கவலை கொள்ள வேண்டாம். காரணம் கேதுவின் பின்னோக்கிய 11-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 3-இடமான தனுசு ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதனால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். தெய்வ அனுகூலம் கிடைக்கும். பொருளாதார வளம் மேம்படும்.

இனி விரிவான பலனை காணலாம்

முக்கிய கிரகங்கள் எதுவும் சாதகமாக இல்லாத காலக்கட்டம். எடுத்த காரியத்தில் அவ்வப்போது தடைகள் வரும். அதை சற்று முயற்சி எடுத்து முறியடித்து வெற்றி காண்பீர்கள். பண வரவுக்கு தகுந்தாற்போல் செலவும் இருக்கும். வீண் வாக்கு வாதத்தில் ஈடுபட வேண்டாம். சுபநிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. இருப்பினும் குருவின்9-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். துணிச்சல் பிறக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். மேலும் சனிபகவானின் 3-ம் இடத்துப் பார்வையால் முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேம்படும். அக்கம் பக்கத்தினர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள்.

உத்தியோகத்தில் பளுவும், அலைச்சலும் இருக்கும். சிலருக்கு திடீர் இடமாற்றம் ஏற்படலாம். மேல அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. வெளியூர் வாசம் நிகழும். தனியார் துறையில் வேலை பார்ப்பவர்களுக்கு உழைப்புக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும்.  குருவின் பார்வையால் வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு, பதவி உயர்வுக்கு தடையேதும் இல்லை.செலவை குறைத்து சிக்கனமாக இருக்க வேண்டும். கேதுவின் பின்னோக்கிய பார்வையால் பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் முன்னேற்றத்தை காணலாம்.

ஆசிரியர்களுக்கு வேலையில் அதிக பளுவும் அலைச்சலும் இருக்கும். உங்களுக்கு வரும் பிரச்சினைகள் அனைத்தும் குருவின்பார்வையால் இருக்கும் இடம் தெரியாமல் போகும். வக்கீல்கள் கவனமுடன் இருக்கவும். எந்த விஷயத்திலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்வது சிறப்பு. மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை அலைச்சல்,வேலைபளு குறையும். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். கூடுதல் வளர்ச்சியை காணலாம். தொழிலில் பண வரவு இருக்கும்.

மருத்துவர்கள் அதிக முயற்சி எடுத்தால் கோரிக்கைகள் நிறைவேறும்.  உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். வியாபாரம் இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு. பணவிரையம் ஏற்படலாம். வாடிக்கையாளரை அதிக முயற்சி எடுத்து தக்கவைக்க வேண்டியது இருக்கும். அரசுவகையில் இருந்து வந்த அனுகூலமற்ற போக்கு மறையும். சிலர் தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கலாம். எனவே யாரிடமும் பார்த்து எச்சரிக்கையுடன் பழகவும். குருவின்9-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். குடும்ப பிரச்சினையை தொழிலில் காட்டாமல் இருந்தால் நல்ல முன்னேற்றம் அடையலாம்.

கேதுவின் பின்னோக்கிய பார்வையால் கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். தரகு,கமிஷன் தொழில் முன்னேற்ற பாதையில் அடியெடுத்து வைப்பீர்கள்.உங்களை எதிர்த்தவர்கள் தவிடுபொடி ஆவார்கள். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் சீராக கிடைக்கும். அலைச்சல் அதிகரிக்கும். வெளியூர் வாசம் நிகழும். சமூகநலசேவககர்களுக்கு எதிர்பார்த்த பதவி கிடைப்பது அரிது.

அரசியல்வாதிகள் பலனை எதிர்பாராமல் உழைக்க வேண்டியது இருக்கும்.பின்நாளில் அதற்கான பலன் கிடைக்கும். சிலர் மனஉழைச்சலுடன் காணப்படுவர். மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியை கேட்டு பெறுவது நல்லது. குருவின் பார்வையால் தேர்வுகள் சிறப்பாக எழுதுவீர்கள். விவசாயம் சீராக இருக்கும். உழைப்பே உங்கள் முதலீடு. அனாவசிய செலவை குறையுங்கள் .ஆடு, கோழி, பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. விவகாரங்கள் சுமாராக இருக்கும்.

பெண்கள் புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். வேலைக்கு செல்லும் பெண்கள் உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும். பெண் காவலர்களுக்கு சகஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். மேல்அதிகாரிகளின் கருணைபார்வை கிடைக்கும். சுயதொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர்.

உடல் நலனை பொறுத்தவரை கேதுவால் சிற்சில உபாதைகள் வந்தாலும் பாதிப்புகள் ஏற்படாது. மனதில் தளர்ச்சி ஏற்படும்.

பரிகாரம் : சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். வியாழக்கிழமை கு ருபகவானு க்கு கொண்டைகடலை படைத்து தானம் செய்யவும். சிவாலயம் சென்று தட்சிணாமூர்த்தியையும் வணங்குங்கள்.

First published:

Tags: Gurupeyarchi