பெரிய மனிதர்களின் நட்பும், சுகவாசழும் பெற்று விளங்கும் சிம்ம ராசி அன்பர்களே! நீங்கள் சூரியனைப் போல பிரகாசத்துடன் காணப்- படுவீர்கள். மற்றவர்களிடமிருந்து தனித்துவத்தை பெற்றிருப்பீர்கள். உங்களின் செயல்பாடுகள் உங்களை ் முன்னிலைப்படுத்தும் இப்படிப்பட்ட குணநலன்களை கொண்ட உங்களுக்கு இது வரை குருபகவான் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். உங்கள் செல்வாக்கு உயர்ந்திருக்கும். நினைத்ததை நிறைவேற்றி இருப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரித்திருக்கும். தேவைகள் பூர்த்தியாகி இருக்கும். பொருளாதார வளம் மேம்பட்டிருக்கும். வீடுமனை வாங்கி இருப்பீர்கள். அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகுந்து இருப்பீர்கள். சிலர் வாகனம் வாங்கி இருக்கலாம். இந்த நிலையில் இப்போது குரு 8-ம் இடத்திற்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு. சிறப்பான நிலை அல்ல. 8-ம் இடத்தில் இருக்கும் குருபகவான் பொதுவாக மன வேதனையும், நிலையற்ற தன்மையைம் கொடுப்பார்.
பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண் விரோதத்தை உருவாக்குவார். பல்வேறு தொல்லைகளை கொடுப்பார் என்பது பொதுவான ஜோதிட வாக்கு. ஆனால் இதனை கண்டு நீங்கள் அஞ்ச வேண்டாம். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7-ம் இடத்து பார்வைக்கு தனி சக்தி உண்டு. அந்த பார்வை உங்களுக்கு சாதகமாக உள்ளது. குருவின் பார்வையால் கோடி நன்மைகளை அடையலாம் என்பது ஜோதிட வாக்கு. அந்த வகையில் உங்களுக்கு எந்த இடையூறுகள் வந்தாலும் அதை குருவின்பார்வை முறியடித்து 6 வெற்றிக்கு வழிவகுக்கும். எனவே குரு சாதகமற்ற நிலையில் இருக்கிறா ர என்று. நீஙகள் கவலை கொள்ள வேண்டாம்.
மேலும் ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ஆம் தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார் மாறாக நன்மையே தருவார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மீன ராசிக்குள்ளேயே இருக்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு 6-ம் இடமான மகரத்தில் இருப்பது மிகச்சிறப்பான இடம் ஆகும். நல்ல பணப் புழக்கத்தையும், காரியத்தில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றல் பிறக்கும். எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர். மேலும் சனியின்10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமைந்து உள்ளது.
அதன்மூலம் அவர் பொருளாதார வளத்தையும், காரிய அனுகூலத்தையும் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். நிழல் கிரகமான ராகு தற்போது உங்கள் ராசிக்கு 9-ம் இடமான மேஷத்தில் இருப்பது சிறப்பான இடம் இல்லை. அவரால் காரியத்தில் சிற்சில தடைகளை உருவாக்கலாம். எதிரிகளின் இடையூறு தலைதூக்கும். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். அதற்காக கவலை-கொள்ள தேவை இல்லை காரணம் அவரின் 47, மற்றும் 11-ம் இடத்துப் பின்னோக்கிய பார்வைகள் சிறப்பாக அமைந்து உள்ளது. அதன்மூலம் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
கேது தற்போது 3-ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவர் இறை அருளையும், பொருள் உதவியையும் கொடுப்பார். மேலும் உடல் உபாதைகளை குணமாக்குவார். மேற்கண்ட கிரக நிலையில் இருந்து விரிலான பலனை காணலாம்.
இனி விரிவன பலனை காணலாம்
குரு சாதகமற்ற நிலைக்கு சென்றாலும் அவரின் 7-ம் இடத்துப்பார்வை சாதகமாக அமைந்துள்ளது. அதன் மூலம் துணிச்சல் பிறக்கும். பண வரவு இருக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம்.மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். ஆனாலும் வீண் விவாதங்களை தவிர்க்கவும். கேதுவால் கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.பெண்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு-மனைவாகனமை வாங்கலாம்.
ராகுவின்பின்நோக்கிய பார்வையால் பொன், பொருள் கிடைக்கும் ராகுவின் பின்னொசக்கிய 7-ம் இடத்துப்பார்வையால் காரிய அனுகூலத்தையும், பொருளாகார வளத்தையும், குடும்பத்தின் மகிழ்ச்சியையும் தருவார். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர்.
உத்தியோகம்; போலீஸ், ராணுவத்தில் பணிபுரிபவர்கள் உயர்ந்த நிலையை அடைவர். புதிய பதவி கிடைக்கும். தனியார் துறையில் பார்ப்பவர்களுக்கு அலைச்சல் இருக்கும். இருப்பினும் குருவின் 7-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் நன்மைகள் கிடைக்க பெறலாம். சகஊழியர்கள் ஆதரவுடன் இருப்பர். ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். முக்கிய கோரிக்கைகளை அப்போது வைக்கலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர்.
ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டிய திருக்கும்.வெளியில் பலவேறு விஷயங்களில் பெருமையாக பேசப்பட்டாலும் அலுவலகத்தில் விட்டுக்கொடுத்து போவது நல்லது. இல்லையென்றால் வீண்மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். ஜுன்20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை எதிர்பாராத வகையில் பலநன்மைகள் கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். அலைச்சல், வேலைபளு குறையும். வக்கீல்கள் யாருடைய உதவியையும் நாடாமல் தானேகாரியத்தை சாதிக்கலாம். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மருத்துவர்கள் வேலையில் திருப்தி காண்பர். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும்.
வியாபாரிகளுக்கு பொருளாதார வளம் அதிகரிக்கும். ஆன்மிக சம்பந்தபட்ட மற்றும் பூஜை பொருள்ட்கள் வியாபாரம் செய்பவர்கள் அதிகலாபத்தை பெறுவர். பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். புதிய வியாபாரம் அனுகூலத்தை கொடுக்கும். இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும். தீயோர் சேர்க்கையால் பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். மேலும் குருவின் பார்வையால் பணவரவு கூடும். பகைவர்களின்சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும்.
கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெற தடைகளை சந்திக்க வேண்டிய-திருக்கும். புகழ் கவுரவத்திற்கு பங்கம் வராது. பொதுநல சேவகர்கள்நற்பலனை காணலாம்.அவர்கள் எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.
அரசியல்வாதிகள் சிறப்பான பலனை க்காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது
மாணவர்கள்: சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. குருவின்பார்வையால் கல்வியில் சிறப்பு கிடைக்கும். மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். ஆசிரியர்களின் உதவி பயன் உள்ளதாக அமையும். ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை போட்டிகளில் வெற்றி காணலாம்.
விவசாயம்: நவீன இயந்திரங்கள்வாங்க வாய்ப்பு உண்டு. புதியதொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். எள், சோளம்,கேழ்வரகு, தக்காளி போன்ற பயிர்கள் மூலம் அதிக லாபத்தை காண்பர்.புதிய சொத்து வாங்கும் எண்ணம் கைகூடும். வழக்கு விவகாரங்கள்சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு. கோழி, ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தைப் பெறுவர்.
எந்த ஒரு தமிழ் மாதத்திலாவது இரண்டு அமாவாசையோ இரண்டு பவுர்ணமியோ வந்தால் அந்த மாதத்தை மல மாதம் என்பார்கள். அந்த மாதத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளை சிலர் தவிர்ப்பார்கள். இந்த சுபகிருது ஆண்டில் வைகாசி மாதம் மல மாதமாக உள்ளது. அந்த மாதம் 1-ந் தேதியும் 31-ந் தேதியும் பவுர்ணமி வருகிறது. பெண்கள் தெய்வ அனுகூலம் தொடர்ந்து கிடைக்கும். வசதிகள் பெருகும். பெரியோர்களின் ஆதரவும், ஆலோசனையும் கிடைக்கும். தோழிகள் உதவிகரமாக இருப்பார்.
பொருள் லாபம் அதிகரிக்கும். பக்தி உயர்வு மேம்படும். உங்களால் குடும்பம் சிறக்கும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் தொல்லையில் இருந்து விடுபடுவர். உற்சாகமான நிலையை அடைவீர்கள். உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர். பெண் காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். வேலையில் நிம்மதியும் திருப்தி கிடைக்கும். தங்கள் கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். தனியார்துறையில் வேலை பார்ப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும்.
ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை எதிர்பார்த்த பலனை பெற்று முன்னேற்றம் காண்பர். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். மேல் அதிகாரிகள் அனுசரணையுடன் இருப்பர்.
உடல்நலம்: சிறப்பாக இருக்கும். வாயு தொடர்பான உபாதை பூரண குணம் அடையும்.
பரிகாரம்: குருபகவானுக்கு மஞ்சன் நிற பூக்களால் அர்ச்சனை செய்யுங்கள். பத்திரகாளி அம்மனையும் வழிபாட்டு வாருங்கன். துர்க்கைக்கு எலுமிச்ச விளக்கு ஏற்றுங்கள். ராகுவுக்கு உளுந்து படைத்து மந்தாரை மலர்களால் அர்ச்சனை செய்யுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gurupeyarchi