மிகவும் அமைதியாக காணப்படும் ரிஷப ராசி அன்பர்களே! உங்களின் வசீகர தன்மை பிறரை எளிதில் கவரும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் வல்லமை படைத்தவர்கள். பார்க்க சாதுவாக இருந்தாலும் தன்னம்பிக்கையும், பிறர்பால் அன்பும் கொண்டவர்கள். இந்த குருபெயர்ச்சி உங்களுக்கு சிறப்பாக அமையும். இதுவரை குருபகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடமான கும்ப ராசியில் இருந்து பல்வேறு பிரச்சினைகளை தந்து கொண்டிருந்தார். அவர் பொருள் இழப்பையும், வறுமையயும் தந்திருப்பார். சிலர் பதவி இழக்கும் நிலைக்கு ஆளாகி இருப்பர். இந்த நிலையில் இப்போது குருபகவான் 11-ம் இடமான மீனராசிக்கு வந்து உள்ளார். இது மிகவும் சிறப்பான இடம் ஆகும். அவர் பலவிதத்தில் வெற்றியை தந்து பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணச்செய்வார்.
மேலும் அவரின் மற்றும் 9-ம் இடத்து பார்வைகள் சிறப்பாக அமைந்துள்ளது. அதன் மூலமும் பல்வேறு நன்மைகள் பெறலாம். ஆனால் அவர் ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். குரு வக்ரத்தில் சிக்கும் போது அவர் தரும் நற்பலன்கள் சற்று குறையலாம். சனிபகவான் தற்போது 9-ம் இடத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவரால் உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்,
எதிரிகளால் பிரச்சினை வரலாம். பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும். சனிபகவான் சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது பார்வையால் நன்மை கிடைக்கும். மேலும் மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந்தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வகிக்ரம் அடைந்தாலும் மகர ராசியிலேதான் இருக்கிறார். சனிபகவான் வக்கிரம் அடைவதால் உங்களுக்கு கெடுபலன்கள் நடக்காது .
ராகு உஙகள் ராசிக்கு 12ஆம் இடமான மேஷத்தில் இருக்கிறார். இது சுமாரான நிலைதான். இங்கு அவரால் நற்பலனை தர இயலாது. பொருள் விரயத்தையும், தூரதேச பயணத்தையும் கொடுப்பார். ஆனால் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 6-இடமான துலாம் ராசியில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் உங்கள் ஆற்றல் மேம்படும். முயற்சிகளில் வெற்றியை தருவார்.
பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெறுவீர்கள். துலாம் ராசியில் இருப்பதால் பின்தங்கிய நிலை மறையும். மேலும் பொன்னும், பொருளும் தாராளமாக கிடைக்கும். காரிய அனுகூலம் ஏற்படும்.மேலும் அவரது பின்னோக்கிய 4-ம் இடத்துப்பார்வை சாதகமாக இருப்பதால் பக்தி உயர்வு மேம்படும்.
எடுத்த பொருளாதார வளம் மேம்படும். மேலும் நகை- ஆபரணங்கள் வாங்கலாம். நினைத்த காரியம் நிறைவேறும். எந்த பிரச்சினை வந்தாலும் அதை குரு, கேது மற்றும் சனி பார்வையால் எளிதில் முறியடிப்பீர்கள். பொன், பொருள் கிடைக்கும். மேலும் கேதுவின் பின்னோக்கிய4-ம் இடத்துப் பார்வையால் தெய்வ அனுகூலம் கிடைக்கும். இதனால் பொருளாதார வளம் மேம்படும். எடுத்த எல்லா காரியங்களையும் சிறப்பாக செய்து முடிக்கலாம். சிற்சில தடைகள் வந்தாலும் அதை தூசிபோல் துடைத்தெறிவீர்கள். பொருளாதார வளம் இருந்து கொண்டே இருக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும்.
அவ்வப்போது செலவுகள் வந்தாலும் அதை ஈடுகட்டும் அளவுக்கு வருமானம் இருக்கத்தான் செய்யும். குருவின் 9-ம் இடத்துப் பார்வையால் செல்வாக்கு மேம்படும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். எண்ணற்ற பல வசதிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார்.
உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். அக்கம் பக்கத்தினர்களின் தொல்லையில் இருந்து விடுபடுவர். நகை-ஆபரணங்கள் வாங்கலாம். குடும்பத்தில் இருந்து வந்த பின்னடைவுகள் மறையும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். குடும்பத்தோடு புனிதஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். புத்தாடை-அணிகலன்கள் வாங்கலாம். அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர். காரிய அனுகூலம் எளிதாகும்.
புதிய வீடு-மனை வாகனம் வாங்குவதற்கான அனுகூலம் உண்டு. உத்தியோகத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலைப்பளு குறையும். பதவி உயர்வு, சம்பள உயர்வுக்கு தடை ஏதும் இல்லை. அரசு வகையில் எதிர்பார்த்த லோன் எளிதில் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலருக்கு இடமாற்றம் வரலாம். வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் ஒன்று சேருவர். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம்.
அவர்கள் தங்கள் கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர் பணியில் இருப்பவர்களுக்கு இந்த காலம் உன்னதமாக இருக்கும். மருத்துவர்கள் கூடுதல் பலன்களை காணலாம். அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். வக்கீல்கள் யாருடைய உதவியையும் நாடாமல் தானே காரியத்தை சாதிக்கலாம். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
வியாபாரம் வளர்முகமாக இருக்கும். பணப்புழக்கம் மிகஅதிகமாக இருக்கும். உங்களிடம் வேலைபார்ப்பவர்கள் நன்றி கடனுடன் இருப்பர். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும்... தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தைப் பெறுவர். உங்கள் வளர்ச்சிக்கு ஒரு பெண் பின்னணியாக இருப்பார். வாடிக்கையாளர் மத்தியில் நற்பெயர் கிடைக்கும். பங்கு வர்த்தகம் நல்ல லாபத்தைத் தரும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். தொழில் ரீதியாக வெளியூர் பயணம் சென்றவர்கள் வீடு திரும்புவர். .
கலைஞர்கள் சிறப்படைவர். பெண்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் சிறப்பு பெறுவர். முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாணவர்களுக்கு குரு சாதகமாக இருப்பதால் அனுகூலமான காற்று வீசும். சிறப்பான நிலையை காணலாம். நல்ல மதிப்பெண் கிடைக்கும். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம்.காலர்ஷிப் போன்றவை கிடைக்கும்.
விவசாயிகளுக்கு பாசிபயறு, நெல், மஞ்சள், கொண்டைக்கடலை, கொள்ளு, துவரை, பழவகைகள் நல்ல வருவாயைக் கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். கோழி, ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். பால் பண்ணை மூலமும் நல்ல வருவாய் கிடைக்கும். புதியசொத்து. வாங்க அனுகூலம் உண்டு. பக்கத்து நிலகாரர்கள். வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். அவர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு, விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.
பெண்கள்; தனம்-மனம் நிறைவாக இருக்கும். கடவுளின் கருணை உங்களுக்கு கிடைக்கும். உற்சாகம் பிறக்கும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். திருமணம் ஆகாமல் இருக்கும் பெண்களுக்கு திருமணம் கைகூடும் அதுவும் நல்ல வரனாக அமையும். புத்தாடை, அணிகலன்கள் வாங்கி குவிப்பர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். அண்டை வீட்டார்கள் உதவிகரமாக இருப்பர். குருவின் 7-ம் இடத்துப் பார்வையால் பொருளாதார வளத்தை அதிகரிக்க செய்வார். சகோதரிகளால் மேன்மை கிடைக்கும்.
குழந்தை பாக்கியம் கிடைக்கும். இதனால் வாழ்க்கையில் வளம் காணலாம். வேலையில் மன மகிழ்ச்சி ஏற்படும் உயர்ந்த பதவி கிடைக்கும். வேலையில் திருப்தி காண்பர். கோரிக்கைகள் நிறைவேறும். சகஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.பெண் காவலர்கள் சிறப்பான பலனைப் பெறுவர்.வேலையில் நிம்மதியும், திருப்தியும் கிடைக்கும்.சு யதொழில் செய்து வரும் பெண்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். பூ வியாபாரம் செய்யும் பெண்கள் நல்ல வருமானத்தை பெறுவர். உஷ்ணம், தோல், தொடர்பான நோய் முதலியன பூரண குணம் அடையும்.
பரிகாரம்
சனிக்கிழமை பெருமாள் வழிபாடு நடத்துங்கள். பிள்ளையாரை தினமும் வணங்கி வாருங்கள். நாக தேவதையை வணங்கி வாருங்கள். திருநாகேசுவரம்திருபெரும்பள்ளம் அல்லது காளகஸ்தி ஆகிய தலங்களுக்குச் சென்று வரலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gurupeyarchi, Rasi Palan