நல்ல பேச்சுவன்மையும் சிறந்த எண்ணமும் கொண்ட மிதுன ராசி அன்பர்களே! நீங்கள் எப்போதும் கலகலப்பாக இருப்பீர்கள். ஆச்சாரங்களை கடை பிடித்து வருவீர்கள். தெய்வ நம்பிக்கை உடைய நீங்கள் செய்யும் தொழிலில் கண்டிப்பும், கண்ணியமும் உடையவர்கள். சொந்த திறமையால் முன்னேற்றம் அடைய நினைப்பவர்கள். இதுவரை குருபகவான் 9-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை செய்து கொண்டிருந்தார். குறிப்பாக எடுத்த காரியத்தில் பல்வேறு வெற்றிகளை தந்திருப்பார். இப்போது குருபகவான் 10-ம் இடத்திற்கு அடியெடுத்து வைத்திருக்கிறார். இது சிறப்பான நிலை என்று சொல்ல முடியாது. முன்பு போல் அவரால் நல்ல பலன்களை அள்ளிதர முடியாது. 10-ம் இடத்தில் குரு பகவான் பற்றி ஜோதிடத்தில் ஈசனாரொருபத்திலே தலையோட்டிலே யிரத்துண்டதும், என்று கூறப்படுகிறது.
அதாவது குரு 10-ல் இருக்கும் போது சிவன் பிச்சை எடுத்தார் என்பது பொருளாகும். இதை கண்டு நீங்கள் சஞ்சலம் கொள்ள வேண்டாம். காரணம் அது தெய்வீக ஜாதகம். மேலும் அதன்கிரக நிலைவேறு உங்கள் கிரக நிலைவேறு. பொதுவாக 10-ம் இடத்தில் இருக்கும் குரு பகவான் பொருள் நஷ்டத்தையும், மனசஞ்சலத்தையும் ஏற்படுத்துவார். குரு சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது 5-ம் இடத்துப் பார்வை மிக சிறப்பாக இருக்கிறது. அதன் மூலம் எந்த இடையூறையும் உடைத்தெறிந்து முன்னேற்றம் காணலாம்.மேலும் மேலும் ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார்.
அவர் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார் மாறாக நன்மையே தருவார். குருபகவான் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மீன ராசிக்குள்ளேயே இருக்கிறார். சனிபகவான் தற்போது 8-ம் இடமான மகர ராசியில் உள்ளார். இது சிறப்பான இடம் அல்ல. அஷ்டமத்தில் சனியால் எப்படி நன்மை தர முடியும்? இங்கு அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். அக்கம்பக்கத்தினர்கள் வகையில் மனக்கசப்பும், கருத்து வேறுபாடும் ஏற்படும்.
சிலர் ஊர்விட்டு ஊர்செல்லும் நிலை உருவாகும்.இவையெல்லாம் அஷ்டமத்து சனியின் பொதுவான பலன்தான். ஆனால் இந்த கெடுபலன்கள் அப்படியே நடக்கும் என்று கவலைகொள்ள வேண்டாம். காரணம் மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை சனிபகவான் வகிக்ரத்தில் உள்ளார். இந்த காலக்கட்டத்தில் சனியின் பலம் சற்று குறையும். அவரால் கெடுபலன்கள் நடக்காது. நிழல் கிரகமான ராகு தற்போது உங்கள் ராசிக்கு 11-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார்.
இது உங்களுக்கு உகந்த இடம். அங்கு அவர் நற்பலனை தருவார். அவரால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்கள் மிக உறுதுணையாக இருப்பர். கேது 5-ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம் இல்லை. இந்த இடத்தில் அவர் அரசு வகையில் சிற்சில பிரச்சினை -யை தரலாம். மேலும் திருட்டு பயமும் ஏற்படலாம். ஆனால் கேதுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 11-இடமான மேஷத்தில் விழுகிறது. இதன் மூலம் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
இனி விரிவான பலனை காணலாம்
குரு சாதகமற்ற நிலைக்கு சென்றாலும் அவரின் 5-ம் இடத்துப் பார்வையும் சாதகமாகஅமைந்துள்ளது. அதன் மூலம் துணிச்சல் பிறக்கும். பணவரவு இருக்கும். தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். பெண்களுக்கு சாதகமான திசையில் காற்று வீசுவதால் முக்கிய பொறுப்புகளை அவர்கள் வசம் ஒப்படையுங்கள். அது சிறப்பாக முடியும். ராகு பொருளாதாரத்தில் நல்ல வளத்தைத் தருவார். பெண்களால் அனுகூலம் கிடைக்கும்.குடும்பத்தில் வசதிகள் அதிகரிக்கும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும்
உத்தியோகம் பார்ப்பவர்கள் சீரான நிலையில் இருப்பர். கடந்த காலத்தைப்போல் உன்னத பலனை எதிர்பார்க்க முடியாது. அதேநேரம் பின்தங்கிய நிலைக்கு செல்ல மாட்டீர்கள். வேலையில் பளு இருக்கும். ஆனாலும் அதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்காமல் போகாது. மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சிலருக்கு வீண் மனக் குழப்பத்தினால் வேலையில் ஆர்வமில்லாமல் போகலாம்.
போலீஸ் மற்றும் பாதுகாப்பு துறையில் இருப்பவர்களுக்கு சிறப்பான காலமாக அமையும். பெண்கள் வகையில் இருந்த இடர்பாடுகள் மறையும். அதேபெண்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். ஆசிரியர்களுக்கு ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந்தேதி வரை கோரிக்கைகள் நிறைவேறும். சக ஊழியர்கள் தகுந்த நேரத்தில் உதவுவார்கள்.
மருத்துவர்களுக்கு அலுவலக ரீதியாக முன்னேற்றமான சம்பவம் நடக்கும். முக்கிய கோரிக்கைகளை கேட்டு பெற்று கொள்ளவும்.வக்கீல்களுக்கு வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும். புதிய வழக்குகள் எடுத்து நடத்தும் போது சற்று கவனம் தேவை.
வியாபாரிகளுக்கு அலைச்சல் இருக்கும். தொழில் விஷயமாக தொடர்ந்து வெளியூர் பயணம் மேற்கொள்ள வேண்டியதிருக்கும். வருமானம் சீராக இருக்கும். எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். புதிய தொழில் தொடங்குவதை தற்சமயம் தவிர்ப்பது நல்லது. அரசின் உதவி கிடைக்க வாய்ப்பு இல்லை. எதிரிகள் வகையில் தொல்லைகள் தலைதூக்கினாலும்அதை குருவின் பார்வையால் முறியடிக்கலாம்.இரும்பு, அச்சு தொடர்பான தொழில்களும், தரகு, பழைய பொருட்களை வாங்கி விற்பது போன்ற தொழில்களும் சிறந்து விளங்கும். வயதால் மூத்த பெண்கள் உங்களுக்கு தக்க சமயத்தில் உதவுவார்கள். அதன்மூலம் வளர்ச்சியை அடையலாம்.
பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தரகு, கமிஷன் தொழிலில் எதிர்பார்த்த பலனை பெற்று முன்னேற்றம் காண்பர். உங்களை எதிர்த்தவர்கள் தவிடுபொடி ஆவார்கள். கலைஞர்களுக்கு முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். பொதுநல சேவகர்களுக்கு புகழ், பாராட்டு வரும். அரசியல்வாதிகள் சீரான நிலையில் இருப்பர்.
மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய திருக்கும். ஆனால் குருவின் பார்வையால் சிறப்பான நிலையை காணலாம். ஆசிரியர்களின் அறிவுரை கைகொடுக்கும்.
விவசாயிகள் அதிகமாக பாடுபட வேண்டியதிருக்கும். அதிக செலவு பிடிக்கும் பயிரை தவிர்ப்பது நல்லது. புதிய சொத்துகள் வாங்க அனுகூலம் தற்போது இல்லை. உளுந்து, எள், பனைபொருள் மற்றும் மானாவாரி பயிர்களில் சிறப்பான மகசூல் கிடைக்கும். புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு
பக்கத்து நிலகாரர்கள் வகையில் இருந்து வந்த தொல்லைகள் மறையும். ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. ஆடு,கோழி, பசு, கால்நடை வகையில் எதிர்பார்த்த பலனை பெற இயலாது. பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். வழக்கு விவகாரங்களில் மெத்தனமாக இருக்க வேண்டாம்
பெண்கள்- வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். கணவன் மற்றும் குடும்பத்தாரிடம் நன்மதிப்பை பெற்று குதூகலம் அடைவர். புத்தாடை, அணிகலன்கள் வாங்கலாம். பெற்றோர் வீட்டில் இருந்து பொருட்கள் வரப்பெறலாம். சகோதரர்களால் பணஉதவி கிடைக்கும். சுய தொழில் செய்து வரும் பெண்கள் சிறப்பான பலனை பெறுவர். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பெண்களுக்கு குரு வீண் பகையையும் உருவாக்குவார். இருப்பினும் குருபகவானின் 5-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். கோரிக்கைகள் நிறைவேறும்.
உடல்நலம் லேசாக பாதிக்கப்படலாம். குறிப்பாக பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
பரிகாரம் ச னி க் கி ழ û ம ú த ô று ம் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். சனிக்கிழமை சனீஸ்வரனுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். துர்க்கை வழிபாடு நல்லது. ஏழைகளுக்கு கொள்ளு தானம் செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gurupeyarchi