முகப்பு /செய்தி /ஆன்மிகம் / கன்னி ராசிக்கு குருப்பெயர்ச்சி 2022 - 23 எப்படி இருக்கும்? - ஜோதிடர் காழியூர் நாராயணன்

கன்னி ராசிக்கு குருப்பெயர்ச்சி 2022 - 23 எப்படி இருக்கும்? - ஜோதிடர் காழியூர் நாராயணன்

கன்னி

கன்னி

gurupeyarchi 2022- 2023 kazhiyur narayanan | கன்னி ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்...

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

மென்மையான அணுகுமுறையை கொண்ட கன்னி ராசி அன்பர்களே! உங்களது பண்பும்‌ நீதியும்‌ நேர்மையும்‌ எல்லோரையும்‌ மிக எளிதில்‌ கவரும்‌. பொதுவாக நல்ல செல்வாக்கும்‌, செல்வமும்‌ படைத்தவர்களாக இருப்பீர்கள்‌. மென்மையான பேச்சும்‌, நல்ல குணநலமும்‌ கொண்டவர்கள்‌ நீங்கள்‌. உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சிறப்பாக அமையும்‌ என்பதில்‌ எந்த அய்யமும்‌ கொள்ள தேவை இல்லை. குருபகவான்‌ இதுவரை உங்கள்‌ ராசிக்கு 6-ம்‌ இடத்தில்‌ இருந்தார்‌. அவர்‌ மன நிம்மதியை இழக்க செய்திருப்பார்‌. உங்கள்‌ நிலையில்‌ இருந்து. தடுமாற்றத்தை உண்டு பண்ணியிருப்பார்‌. பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்கும்‌. வீண்‌ பகையும்‌, விரோதமும்‌ உருவாகியிருக்கும்‌. பல்வேறு தொல்லைகளை அனுபவித்து இருப்பீர்கள்‌. இப்போது குருபகவான்‌ 6-ம்‌ இடத்தில்‌ இருந்து 7-ம்‌ இடத்திற்கு செல்வது மிகவும்‌ உயர்வான நிலை.

மேலும்‌ குருவின்‌ 5-ம்‌ இடத்துப்‌ பார்வையும்‌ சிறப்பாக உள்ளது. எனவே குரு குடும்பத்தில்‌ மகிழ்ச்சியை அதிகரித்து சுபநிகழ்ச்சியை தருவார்‌. செல்வாக்கு மேம்படும்‌. பணப்புழக்கம்‌ அதிகரிக்கும்‌. தேவைகள்‌ பூர்த்தியாகும்‌. எண்ணற்ற பல வசதிகள்‌ கிடைக்கும்‌. உத்தியோகஸ்தர்களுக்கு உயர்வை தருவார்‌. குரு ஜுன்‌ 20-ந்‌ தேதி முதல்‌ நவம்பர்‌ 16-ந்‌ தேதி வரை வக்கிரம்‌ அடைகிறார்‌.

குருபகவான்‌ வக்கிரம்‌ அடைந்தாலும்‌, அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும்‌ மீன ராசிக்குள்ளேயே இருக்கிறார்‌. சனிபகவான்‌ தற்போது 5-ம்‌ இடத்தில்‌ இருக்கிறார்‌.  சிறப்பான இடம்‌ என்று சொல்ல முடியாது. அவர்‌ குடும்பத்தில்‌ சிற்சில பிரச்சினைகளை தருவார்‌ குழப்பத்தை உருவாக்கலாம்‌. மனதில்‌ ஏனோ இனம்‌ புரியாத வேதனை குடிகொள்ளலாம்‌. அவர்‌ திருப்தியற்ற நிலையில்‌ இருந்தாலும்‌ அவரது 7-ம்‌ இடத்துப்‌ பார்வை சிறப்பாக உள்ளன. இதனால்‌ நன்மைகள்‌ கிடைக்கும்‌. மேலும்‌ சனிபகவான்‌ மே 25-ந்‌ தேதி முதல்‌ அக்டோபர்‌ 9-ந்‌ தேதி வரை வக்கிரம்‌ அடைகிறார்‌. இந்த காலத்தில்‌ அவர்‌ வக்கிரம்‌ அடைந்தாலும்‌ மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார்‌.

வக்கிரத்தில்‌ சிக்கும்‌ கிரகத்தால்‌ சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில்‌ சனிபகவான்‌ வக்கிரத்தில்‌ சிக்கும்‌ போது கெடுபலன்களை தரமாட்டார்‌. 2023 மார்ச்‌ 29-ந்‌ தேதி சனிபகவான்‌ அன்று 6-ம்‌ இடமான கும்பத்திற்கு மாறுகிறார்‌. இது சிறப்பான இடம்‌.மேலும்‌ அவரது 10-ம்‌ இடத்துப்‌ பார்வையும்‌ சிறப்பாக அமைந்து உள்ளது

ராகு தற்போது 8-ம்‌ இடமான மேஷத்தில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பான இடம்‌ என்று சொல்ல முடியாது. அவர்‌ உறவினர்கள்‌ வகையில்‌ சிற்சில பிரச்சினைகளை உருவாக்கலாம்‌. சிலர்‌ ஊர்விட்டு ஊர்‌ செல்லும்‌ நிலை உருவாகும்‌. உங்கள்‌ முயற்சிகளில்‌ தடைகளையும்‌ உருவாக்கலாம்‌. ஆனால்‌ உங்கள்‌ திறமையில்‌ இருந்த பின்தங்கிய நிலை இருக்காது. கேது தற்போது 2-ம்‌ இடமான துலாம்‌ ராசியில்‌ உள்ளார்‌. இது சிறப்பான இடம்‌ அல்ல. அரசு வகையில்‌ அனுகூலமான போக்கு இருக்காது. அரசின்‌ வகையில்‌ சிக்கல்‌ வரலாம்‌.கேது சாதகமற்ற இடத்தில்‌ இருக்கிறார்‌ என்று கவலை கொள்ள தேவை இல்லை. காரணம்‌ அவரது பின்னோக்கிய 4-ம்‌ இடத்துப்பார்வை உங்கள்‌ ராசிக்கு 11-இடமான கடகத்தில்‌ விழுகிறது.

இது சிறப்பான அம்சமாகும்‌. இதன்‌ மூலம்‌ காரிய அனுகூலம்‌ ஏற்படும்‌. குடும்பத்தில்‌ மகிழ்ச்சி அதிகரிக்கும்‌. வசதிகள்‌ பெருகும்‌ கேதுவின்‌ பின்னோக்கிய இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உன்னகால்‌ உற்சாகம்‌ பிறக்கும்‌. மனமகிழ்ச்சி அதிகரிக்கும்‌. வசதிகள்‌ பெருகும்‌. பொருள்‌ செரும்‌.தேவைகள்‌ பூர்த்தியாகும்‌.

இனி விரிவான பலனை காணலாம்‌

குருபகவானின்‌ பலத்தாலும்‌, சனிபகவானின்‌ பார்வையாலும்‌ சிறப்பான பணப்புழக்கம்‌ இருக்கும்‌. தேவைகள்‌ அனைத்தும்‌ பூர்த்தியாகும்‌. எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிக்கலாம்‌. உங்கள்‌ மீதான பொல்லாப்பு மறையும்‌. மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும்‌ செல்வாக்கு அதிகரிக்கும்‌. சனிபகவானின்‌?7-ம்‌ இடத்துப்‌ பார்வையால்‌ பொன்‌, பொருள்‌ கிடைக்கும்‌. மகிழ்ச்சியும்‌, ஆனந்தமும்‌ அதிகரிக்கும்‌. பெண்கள்‌ மிக உறுதுணையாக இருப்பர்‌. குடும்பத்தில்‌இதுவரைஇருந்து வந்த இருக்கமான நிலை மாறும்‌.

நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம்‌ போன்ற சுபநிகழ்ச்சிகள்‌ கைகூடும்‌ கணவன்‌-மனைவி இடையே துன்பு பெருகும்‌.குழந்தை பாக்கியம்‌ கிடைக்கும்‌ .வீடுமனை வாங்கும்‌ யோகம்‌ கூடி வரும்‌. பெண்களுக்கு சாதகமான திசையில்‌ காற்று வீசுவதால்‌ முக்கிய பொறுப்புகளை அவர்கள்‌ வசம்‌ ஒப்படையுங்கள்‌. சகோதரிகள்‌ மூலம்‌ உதவி கிடைக்கும்‌.உறவினர்கள்‌ வருகையும்‌ அவர்களால்‌ நன்மையும்‌ கிடைக்கும்‌.

தனியார்‌ துறையில்‌ வேலை பார்ப்பவர்களுக்கு மேல்‌ அதிகாரிகளின்‌ ஆதரவு கிடைக்கும்‌. பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்பு உண்டு. சகஊழியர்களின்‌ ஒத்துழைப்பு இருக்கும்‌. கோரிக்கைகள்‌ நிறைவேறும்‌. விரும்பிய இடத்துக்கு மாற்றம்‌ கிடைக்கும்‌. அரசு ஊழியர்கள்‌ வேலையில்‌ கவனமாக இருக்கவும்‌. வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து செல்ல நேரிடலாம்‌. நெருப்பு தொடர்பான வேலையில்‌ இருப்பவர்கள்‌ சற்று கவனமாக இருக்க வேண்டும்‌.

ஆசிரியர்கள்‌ மேன்மை காண்பர்‌. எந்த பிரச்சினையையும்‌ முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்‌. முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம்‌. மருத்துவர்கள்‌ கூடுதல்‌ பலன்களை காணலாம்‌. வேலைப்பளு குறையும்‌. உங்கள்‌ திறமை பளிச்சிடும்‌. அதற்குரிய வருமானமும்‌ வரும்‌. வக்கீல்களுக்கு சனிபகவானின்‌ பார்வையால்‌ வழக்குகள்‌ சிறப்பாக இருக்கும்‌. 2023 மார்ச்‌ 29-ந்‌ தேதிக்கு பிறகு யாருடைய உதவியையும்‌ நாடாமல்‌ தானே காரியத்தை சாதிக்கலாம்‌. தாங்கள்‌ நடத்தும்‌ வழக்குகளில்‌ சாதகமான தீர்ப்பு கிடைக்கும்‌.

வியாபாரத்தில்‌ நம்பிக்கையுள்ள நண்பாகள்‌, பெரியோர்கள்‌ ஆலோசனையுடன்‌ முன்னேற்றம்‌ காணலாம்‌. அச்சகம்‌, பத்திரிகை, பப்ளிகேசன்‌, கட்டுமான ஆலோசகர்‌ போன்ற தொழில்‌ நல்ல வளர்ச்சியை அடையும்‌. தங்கம்‌, வெள்ளி, வைர நகைகள்‌ வியாபாரம்‌ செய்பவர்கள்‌ அதிக லாபத்தைப்‌ பெறுவர்‌. வாடிக்கையாளர்‌ மத்தியில்‌ நற்பெயர்‌ கிடைக்கும்‌. நல்ல வளர்ச்சி இருக்கும்‌. பெண்களை பங்குதாரராக கொண்ட பொன்னும்‌, பொருளும்‌ கிடைக்கும்‌.

நிறுவனம்‌ நல்ல முன்னேற்றம்‌ அடையும்‌. அலைச்சல்‌ அதிகரிக்கும்‌. அரசு வகையில்‌ அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு- செலவு கணக்கை சரியாக வைத்துக்‌ கொள்ளவும்‌. 2023 மார்ச்‌ 29-ந்‌ தேதிக்கு பிறகு உங்கள்‌ ஆற்றல்‌ மேம்படும்‌ பகைவர்களின்‌ சதி உங்களிடம்‌ எடுபடாது. அவர்கள்‌ சரண அடையும்‌ நிலை ஏற்படும்‌.

மாணவர்களுக்கு ஆசிரியர்களின்‌ அறிவுரை கிடைக்கும்‌. அதிக வளர்ச்சியை எதிர்நோக்கலாம்‌. காலர்ஷிப்‌ போன்றவை கிடைக்கும்‌.

விவசாயிகள்‌: அதிகமாக உழைக்க வேண்டும்‌. மஞ்சள்‌, பயறு வகைகள்‌, துவரை, கொண்டைக்‌ கடலை சோளம்‌, தக்காளி, பழவகைகள்‌ மூலம்‌ நல்ல வருவாய்‌ காணலாம்‌. கால்நடை செல்வம்‌ பெருகும்‌. பசுவளர்ப்பிலும்‌ போதிய வருவாயை பெறலாம்‌. பால்பண்ணை மூலமும்‌ நல்ல வருவாய்‌ கிடைக்கும்‌. விவகாரங்கள்‌ சுமாராக இருக்கும்‌. 2023 மார்ச்‌ 29-ந்‌ தேதிக்கு பிறகு வழக்கு, விவகாரங்கள்‌ சிறப்பாக இருக்கும்‌. கைவிட்டு போன பொருட்கள்‌ மீண்டும்‌ கிடைக்கும்‌.

பெண்கள்‌ நல்ல வசதியோடு காணப்படுவர்‌. சுற்றுலா, விருந்து, விழா என சென்று வருவீர்கள்‌. திருமணம்‌ ஆகாமல்‌ இருக்கும்‌ பெண்களுக்கு திருமணம்‌ கைகூடும்‌ அதுவும்‌ நல்ல வரனாக அமையும்‌. குழந்தைகளால்‌ மகிழ்ச்சி காண்பீர்கள்‌. புதிய நகை, ஆடைகள்‌ போன்றவை கிடைக்கும்‌. சிலருக்கு பிறந்த வீட்டில்‌ இருந்து பொருட்கள்‌ வந்து சேரும்‌. சகோதரிகளால்‌ பணஉதவி கிடைக்கும்‌. சுபநிகழ்ச்சிகளில்‌ கலந்து கொள்வீர்கள்‌. உங்களை புரிந்து கொள்ளாமல்‌ இருந்தவர்கள்‌ உங்கள்‌ மேன்மையை அறிந்து சரணடையும்‌ நிலை வரலாம்‌.

சிலரது வீட்டில்‌ பொருட்கள்‌ திருட்டு போகலாம்‌. கவனம்‌ தேவை.வேலைக்கு செல்லும்‌ பெண்கள்‌ சிறப்பான பலனை பெறுவர்‌. வேலையில்‌ நிம்மதியும்‌ திருப்தி கிடைக்கும்‌. பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைப்பதில்‌ தடை ஏதும்‌ இல்லை. சுயதொழில்‌ செய்து வரும்‌ பெண்களுக்கு சகோதரர்‌களின்‌ ஆதரவு இருக்கும்‌. அவர்களால்‌ பொருள்‌ சேரும்‌.

உடல்நலம்‌: சிறப்பாக இருக்கும்‌. மனதில்‌ ஏற்பட்ட கஷ்டங்கள் மறையும்‌.

பரிகாரம்‌: சனி பகவானுக்கு வணங்கினால் நல்லது எள்சோறு படைத்து வணங்குங்கள்‌. தினமும் விநாயகரை வணங்கி வாருங்கள்‌:  சனிக்கிழமை தோறும்‌ பெருமான்‌  கோவிலுக்கு சென்று வாருங்கள்‌. துர்க்கைக்கு எலுமிச்சை பழ விளக்கு தினமும் ஏற்றுங்கள்‌. ராகு காலத்தில்‌ பைரவருக்கு தயிர்‌ சாதம்‌ படைத்து வழிபடலாம்.

First published:

Tags: Gurupeyarchi, Rasi Palan