முகப்பு /செய்தி /ஆன்மிகம் / கடக ராசிக்கு குருப்பெயர்ச்சி 2022 - 23 எப்படி இருக்கும்? - ஜோதிடர் காழியூர் நாராயணன்

கடக ராசிக்கு குருப்பெயர்ச்சி 2022 - 23 எப்படி இருக்கும்? - ஜோதிடர் காழியூர் நாராயணன்

கடகம்

கடகம்

gurupeyarchi 2022- 2023 kazhiyur narayanan | கடகம் ராசிக்கான குருப்பெயர்ச்சி பலன்களை கணித்தவர் பிரபல ஜோதிடர் காழியூர் நாராயணன்

  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :

சாமர்த்தியமாக பேசும்‌ வல்லமை படைத்த கடக ராசி அன்பர்களே! குழந்தைகளிடம்‌ நீஙகள்‌ காட்டும்‌ அன்பு அபரீதமானதாக இருக்கும்‌. தாய்‌ தந்தையரிடமும்‌ நல்ல அன்பு கொண்டிருப்பிகள்‌. உங்களுக்கு இந்த குரு பெயர்ச்சி சிறப்பாக அமையும்‌. குருபகவான்‌ இதுவரை உங்கள்‌ ராசிக்கு 8-ம்‌ இடத்தில்‌ இருந்து வந்தார்‌. இது சிறப்பான நிலை அல்ல என்று சொல்வதை விட கொடூரமான நிலை என்றே சொல்லலாம்‌. 8-ல்‌ குரு இருக்கும்‌ போது பல்வேறு இன்னல்களை தந்திருப்பார்‌. குறிப்பாக மனவேதனை அதிகமாக உங்களை வாட்டியிருக்கும்‌. பொருளாதாரத்தில்‌ திடீர்‌ சரிவுகள்‌ ஏற்பட்டிருக்கும்‌. உறவினர்கள்‌, நண்பர்கள்‌ அனுகூலமாக இருந்திருக்க மாட்டார்கள்‌.  வீண்‌ விரோதம்‌ உருவாகியிருக்கலாம்‌. இந்த நிலையில்‌ குருபகவான்‌ 9-ம்‌ இடமான மீன ராசிக்கு செல்கிறார்‌. இது மிகச்சிறப்பான இடம்‌.

இதுவரை அவரால்‌ பட்ட இன்னல்களில்‌ இருந்து விடுபடுவீர்‌ கள்‌. அவரால்‌ மனமகிழ்ச்சி அதிகரிக்கும்‌. உற்சாகம்‌ பிறக்கும்‌. நினைத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிக்கலாம்‌. பணப்புழக்கம்‌ அதிகரிக்கும்‌. தேவைகள்‌ பூர்த்தி ஆகும்‌. குடும்பத்தில்‌ இருந்து வந்த பின்னடைவுகள்‌ மறையும்‌. தம்பதியினர்‌ இடையே ஒற்றுமை மேம்படும்‌. உறவினர்கள்‌ உதவிகரமாக இருப்பர்‌. உங்களை புரிந்து கொள்ளாமல்‌ இருந்தவர்கள்‌ உங்கள்‌ மேன்மையை அறிந்து சரணடையும்‌ நிலை வரலாம்‌. தடைபட்டு வந்த திருமணம்‌ நடக்க வாய்ப்பு உண்டு. இவை அனைத்தும்‌ குருவால்‌ கிடைக்கும்‌ நற்பலன்கள்‌. இது தவிர குருவின்‌ 9-ம்‌ இடத்துப்‌ பார்வையும்‌ சிறப்பாக இருக்கும்‌. இதன்‌ மூலமும்‌ நற்பலன்கள்‌ கிடைக்கும்‌.

குருபகவான்‌ ஜுன்‌ 20-ந்‌ தேதி முதல்‌ நவம்பர்‌ 16-ந்‌ தேதி வரை வக்கிரம்‌ அடைகிறார்‌. அவர்‌ வக்கிரம்‌ அடைந்தாலும்‌, அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும்‌ மீன ராசிக்குள்ளேயே இருக்கிறார்‌. தற்போது சனிபகவான்‌ 7-ம்‌ இடமான மகர ராசியில்‌ உள்ளார்‌. இது சிறப்பான இடம்‌ அல்ல. பொதுவாக இந்த இடத்தில்‌ இருக்கும்‌ போது சனி குடும்பத்தில்‌ பல்வேறு பிரச்சினையை உருவாக்குவார்‌. அலைச்சல் அதிகரிக்கும்‌ வெளியூர்‌ வாசம்‌ நிகழும்‌. தீயோர்‌ சேர்க்கையால்‌ அவதியுறலாம்‌ என்பது பொதுவான பலன்கள்‌. இதைக்‌ கண்டு அஞ்ச வேண்டாம்‌. சனிபகவான்‌ மே 25-ந்‌ தேதி முதல்‌ அக்டோபர்‌ 9-ந்‌ தேதி சுபநிகழ்ச்சிகள்‌ கைகூடும்‌. குருபகலான்‌ மீன ராசியில்‌ இருப்பது சிறப்புதான்.

உத்தியொகத்தில்‌ முன்னேற்றத்தைக்‌ கொடுப்பார். இந்த காலங்களில்‌ வக்கிரம்‌ அடைந்தாலும்‌ மகர ராசியில்தான்‌ இருக்கிறார்‌. பொதுவாக சனிபகவானால்‌ நன்மைதர இயலாது ஆனால்‌ வக்கிரத்தில்‌ சிக்கும்‌ கிரகத்தால்‌ சிறப்பாக செயல்பட முடியாது. அந்த வகையில்‌ சனிபகவான்‌ வக்ரத்தில்‌ சிக்கும்‌ போது கெடுபலன்களை தரமாட்டார்‌ மாறக நன்மையே தர ஆயத்தமாவார்‌.

தற்போது ராகு 10-ம்‌ இடமான மேஷத்திதில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பான இடம்‌ இல்லை. அவரால்‌ சிலர்‌ பொல்லாப்பை சந்திக்க நேரிடலாம்‌. பெண்கள்‌ வகையில்‌ இடையூறுகள்‌ வரலாம்‌. அவர்‌ பொருள்‌ இழப்பையும்‌, சிறுசிறு உடல்‌ உபாதைகளையும்‌ கொடுப்பார்‌.

கேது தற்போது 4-ம்‌ இடமான துலாம்‌ ராசியில்‌ இருக்கிறார்‌. இது சிறப்பான இடம்‌ இல்லை. அவரால்‌ சிலர்‌ தீயோர்‌ சேர்க்கைக்கு ஆளாகி அவதியுறலாம்‌. உடல்நலம்‌ பாதிப்பு வரலாம்‌. வயிறு பிரச்சினை வரும்‌. ஆனால்‌ அவரது பின்னோக்கிய 11-ம்‌ இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்து உள்ளதால்‌ எந்த பிரச்சினையையும்‌ முறியடிக்கும்‌ வல்லமையை பெறலாம்‌.

இனி விரிவான பலனை காணலாம்

குருவின்‌ பலத்தால்‌ எந்த ஒரு காரியங்களையும்‌ வெற்றிகரமாக நிறைவேற்றலாம்‌. இது வரை இருந்து வந்த தடைகள்‌ அனைத்தும்‌ அகலும்‌. பொருளாதார வளம்‌ சிறப்பாக இருக்கும்‌. உங்கள்‌ மீதான அவப்பெயர்‌ மறையும்‌. செல்வாக்கு மேலோங்கும்‌. அக்கம்‌ பக்கத்தினர்‌ உங்களை புகழ்வர்‌. குரு குடும்பத்தில்‌ குதூகலத்தைக்‌ கொடுப்பார்‌. திருமணம்‌ போன்ற சுபநிகழ்ச்சிகளை நடத்தி வைப்பார்‌. குழந்தை பாக்கியம்‌ கிடைக்கும்‌. இதனால்‌ வாழ்க்கையில்‌ வளம்‌ காணலாம்‌. சகோதரிகளால்‌ பண உதவி கிடைக்கும்‌. மதிப்பூமரியாதை இருக்கும்‌.

வேலையில்‌ திருப்தியும்‌, நிம்மதியும்‌ காண்பீர்கள்‌. கோரிக்கைகள்‌ நிறைவேறும்‌. அரசு வகையில்‌ எதிர்பார்த்த லோன்‌ எளிதில்‌ கிடைக்கும்‌. வேலையில்‌ ஆர்வம்‌ பிறக்கும்‌. வேலைப்பளு குறையும்‌. தடைபட்டு வந்த பதவி உயர்வு, சம்பள உயாவு கிடைக்கும்‌. மேல்‌ அதிகாரிகளிடம்‌ நன்மதிப்பை பெறலாம்‌. உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள்‌ இனி உங்கள்‌ திறமைக்கு அங்கீகாரம்‌ கொடுப்பர்‌. விரும்பிய இடத்துக்கு மாற்றம்‌ கிடைக்க பெறுவீர்கள்‌. அதனால்‌ சிலர்‌ அதிக செலவை சந்திக்க வேண்டியதிருக்கும்‌. சக ஊழியர்கள்‌ உதவிகரமாக இருப்பர்‌. சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும்‌. வேலையின்றி இருக்கும்‌ படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும்‌. ஆசிரியாளுக்கு தேவைகள்‌ பூர்த்தி ஆகும்‌.

உங்கள்‌ அதிகாரம்‌ கொடிகட்டி பறக்கும்‌. முக்கிய கோரிக்கைகளை வைக்கலாம்‌. குருவால்‌ கோரிக்கைகள்‌ நிறைவேறி மகிழ்ச்சியுடன்‌ காணப்‌படுவீர்கள்‌. மருத்துவர்கள்‌ உங்கள்‌ பொறுப்புகளை தட்டிகழிக்காமல்‌ செய்யவும்‌. மேல்‌ அதிகாரிகளிடம்‌ அனுசரித்து போகவும்‌. வக்கீல்கள்‌ வேலையில்‌ பொறுமையும்‌ நிதானமும்‌ தேவை. போலீஸ்‌, ராணுவத்தில்‌ பணிபுரிபவர்கள்‌ உங்கள்‌ வேலைக்கு ஏற்ற மரியாதை கிடைக்கும்‌. வேலையில்‌ கவனமுடன்‌ இருக்கவும்‌. மேல அதிகாரிகளிடம்‌ அனுசரித்து போவது நல்லது.

வியாபாரம்‌

பகைவர்களின்‌ தொல்லைகள்‌ உங்களுக்கு தடையைத்‌ தந்தாலும்‌ பொருளாதார வகையில்‌ எந்த பின்தங்கிய நிலையும்‌ வராது. அதிக முதலீடு செய்ய வேண்டாம்‌. தொழில்‌ ரீதியாக வெளியூர்‌ பயணம்‌ ஏற்படலாம்‌. குருவின்‌ பலத்தால்‌ போதிய வருமானம்‌ கிடைக்கும்‌. அறிவைபயன்படுத்தி தொழிலை வளர்ச்சி அடைய வைக்கலாம்‌. பத்திரிகை தொழில்‌, தானிய வியாபாரம்‌, தங்கம்‌, மற்றும்‌ உலோக வியாபாரம்‌ சிறப்பாக அமையும்‌. தங்கம்‌, வெள்ளி, வைரம்‌ நகைகள்‌ வியாபாரம்‌ செய்பவர்கள்‌ நல்ல வருமானத்தைப்‌ பெறுவர்‌. சனிபகவான்‌ சாதகமற்ற நிலையில்‌ இருப்பதால்‌ அலைச்சல்‌ அதிகரிக்கும்‌. சிலர்‌ தீயோர்‌ சேர்க்கைக்கு ஆளாகலாம்‌. எனவே யாரிடமும்‌ பார்த்து எச்சரிக்கையுடன்‌ பழகவும்‌.

கலைஞர்களுக்கு

புதிய ஒப்பந்தங்கள்‌ கிடைக்கும்‌. சமூகந சேவகர்கள்‌ பின்தங்கிய நிலையில்‌ இருந்து விடுபடுவர்‌. எதிர்பார்த்த பாராட்டு கிடைக்கும்‌. அரசியல்வாதிகள்‌ பிரதிபலனை எதிர்பாராமல்‌ உழைக்க வேண்டியதிருக்கும்‌. நல்ல பணப்‌ புழக்கத்தில்‌ இருப்பர்‌.

மாணவர்களுக்கு

ஆசிரியர்கள்‌ ஆலோசனை கிடைக்கும்‌. நற்பெயர்‌ நகை ஆபரணங்கள்‌ வாங்கலாம்‌ கேதுவின்‌ பின்னோக்கிய 11-ம்‌ இடத்துப்‌ பார்வையால்‌ உங்களுக்கு அபார ஆற்றல்‌ 1 அறண்கவ்‌ பிறக்கும்‌. பொருளாதார வளம்‌ அதிகரிக்கும்‌. எதிரிகளின்‌ இடையூறை முறியடிக்கும்‌. வல்லமை பெறுவீர்கள்‌. நகை-ஆபரணங்கள் வாங்கலாம்‌. கல்வியில்‌ சிறப்படைவர்‌. பல்வேறு போட்டிகளில்‌ வெற்றி காணலாம்‌. காலர்ஷிப்‌ போன்றவை கிடைக்கும்‌.

விவசாயம்‌

சிறப்படையும்‌. வருமானத்திற்கு குறை இருக்காது. கீரை வகைகள்‌, காய்கறிகள்‌, பயறுவகைகள்‌, நெல்‌, கொள்ளு, கொண்டைக்‌ கடலை , மஞ்சள்‌, தக்காளி. பழவகைகள்‌ போன்றவைகள்‌ நல்ல மகசூலை கொடுக்கும்‌ கால்நடை செல்வம்‌ பெருகும்‌. பசுவளர்ப்பிலும்‌ போதிய வருவாயை பெறலாம்‌. பால்பண்ணை மூலமும்‌ நல்ல வருவாய்‌ கிடைக்கும்‌. ஆடுகள்‌, கோழி வகையில்‌ எதிர்பார்த்த பபனை பெற இயலாது. வழக்கு கார்களில்‌ மெத்தனமாக இருக்க வேண்டாம்‌

பெண்கள்‌

குடும்பத்தில்‌ முக்கிய அங்கம்‌ வகிப்பர்‌. பண வரவு இருக்கும்‌. சொந்தபந்தங்கள்‌ வருகை இருக்கும்‌. பொருள்‌ கிடைக்கும்‌. மகிழ்ச்சியும்‌ ஆனந்தமும்‌ அதிகரிக்கும்‌. சகோதரர்கள்‌ மிக உறுதுணையா இருப்பர்‌. திருமணம்‌ ஆகாமல்‌ இருக்கும்‌ பெண்களுக்கு திருமணம்‌ கைகூடும்‌ அதுவும்‌ நல்ல வரனாக அமையும்‌. குடும்பத்தாரின்‌ அன்பு கிடைக்கும்‌. பிள்ளைகளால்‌ பெருமை அடைவர்‌. ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள்‌. வேலைக்கு செல்லும்‌ பெண்களுக்கு வேலையில்‌ நிம்மதியும்‌ திருப்தி கிடைக்கும்‌. புதிய பதவி தேடி வரும்‌. சகஊழியர்கள்‌ மிகவும்‌ ஆதரவுடன்‌ இருப்பர்‌. சுயதொழில்‌ செய்து வரும்‌ பெண்களுக்கு மனவேதனையும்‌, நிலையற்ற தன்மையும்‌ மறையும்‌. சகோதரர்களால்‌ பண உதவி கிடைக்கும்‌. உடல்நலம்‌-கேதுவால்‌ வயிறு பிரச்சினை வரும்‌. பயணத்தின்‌ போது சற்று கவனம்‌ தேவை.

பரிகாரம்‌

அஞ்சநேயர்‌ வழிபாடு நன்மையையும்‌. மன கைரியத்தையும்‌ உங்களுக்கு கொடுக்கும்‌. சாப்பிடும்‌ முன்பு காக்கைக்கு அன்னமிநிங்கன்‌. ராகு- கேதுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். தினமும் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபடுங்கள்‌.

First published:

Tags: Gurupeyarchi