கூர்மையான மதிநுட்பம் நிறைந்த தனுசு ராசி அன்பர்களே! சமூக விரோதிகளை இனங்கண்டு அவர்களிடமிருந்து ஒதுங்கி நிற்பீர்கள். நல்லொழுக்கத்தை கடைப்பிடிப்பீர்கள். பெரியோர்களிடமும், சான்றோர்களிடமும், செல்வாக்கு படைத்தவர்களிடமும் விசுவாசிகளாகவும், நண்பர் -களாகவும் இருப்பீர்கள். இதுவரை 3-ம் இடமான கும்ப ராசியில் இருந்தார். அது அவ்வளவு சிறப்பான நிலை அல்ல. உங்கள் முயற்சியில் அவ்வப்போது தடைகள் ஏற்பட்டு இருக்கும். சிலர் வேலையை இழக்கும் நிலைகூட ஏற்பட்டு இருக்கலாம். இந்த நிலையில் குரு 4-ம் இடமான மீன ராசிக்கு செல்கிறார். இந்த இடமும் அவ்வளவு சிறப்பானது என்று சொல்ல முடியாது.
ஆனால் கடந்த கால பலன்களில் இருந்து இது மாறுபடும். பொதுவாக குருபகவான் 4-ல் இருக்கும் போது மனஉளச்சலையும், உறவினர் வகையில் வீண் பகையையும் உருவாக்குவார் என்பது ஜோதிட வாக்கு. ஆனால் அதைகண்டு கவலை கொள்ள வேண்டாம். குரு ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை வக்கிரம் அடைகிறார். அவர் வக்கிரத்தில் சிக்கும் போது கெடுபலனை தரமாட்டார் மாறாக நன்மையே தருவார்.
குருபகவான் வக்கிரம் அடைந்தாலும், அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மீன ராசிக்குள்ளேயே இருக்கிறார். சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தில் இருக்கிறார் இது சிறப்பான இடம் அல்ல. பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும். இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த
காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தரதயங்க மாட்டார். மேலும் சனி பகவான் தான் நின்ற ராசியில் இருந்து 3,7,10-ம் இடங்களை பார்ப்பார்..
அவரது 10-ம் இடத்துப்பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. மேலும் மே 25-ந் தேதி முதல் அக்டோபர் 9-ந் தேதி வரை சனிபகவான் வக்ரத்தில் உள்ளார். சனி வக்கிரம் அடைந்தாலும் அதாவது பின்னோக்கி நகர்ந்தாலும் மகர ராசிக்குள்ளேயே இருக்கிறார். இந்த காலக்கட்டத்தில் சனியின்பலம்சற்று குறையும்.அவரால் கெடுபலன்கள் நடக்காது.
அவர்2023மார்ச் 29-ந் தேதி அன்று 3-ம் இடத்திற்கு செல்வதால் நன்மைகள் தருவார். ராகு தற்போது 5-ம் இடமான மேஷத்தில் இருக்கிறார்.இது சிறப்பான இடம் அல்ல. இன்னல் களையும், இடையூறுகளையும் அவர் தரலாம். மனைவி, மக்கள் மத்தியில் குழப்பத்தை உருவாக்கலாம். மனதில் இனம் புரியாத வேதனை ஆட்டிப் படைக்கலாம்.ஆனால் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான துலாம் ராசியில் விழுகிறது.
இது சிறப்பான அம்சமாகும். இதன் மூலம் பொன், பொருள் கிடைக்கும். பெண்கள் மிகஉறுதுணையாக இருப்பர். கேது தற்போது 11-ம் இடமான துலாம் ராசியில் இருக்கிறார். இது சிறப்பான இடம். அவர் நல்ல வளத்தை கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை கொடுப்பார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் கொடுப்பார். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இனி விரிவான பலனை காணலாம்
பொதுவாக எந்த ஒரு செயலையும் ஒன்றுக்கு பத்து முறை சிந்தித்து செயல்படுத்துங்கள். குடும்ப பெரியோர்களின் ஆலோசனையும், அறிவுரையும் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. கேதுவால் எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம். இதனால் துணிச்சல் பிறகும். பண வரவுகூடும். புதிய வீடு-மனை வாகனம் வாங்க அனுகூலம் உண்டு. குடும்பம்-வீட்டினுள் சிற்சில பிரச்சினை வரலாம்.
கணவன்- மனைவி இடையே அன்னியோன்யமான சூழ்நிலை இருக்காது. சிறு சிறு பிரச்சினை வந்து மறையும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துப் போகவும். உறவினர்கள் வகையில் வாக்கு வாதத்தை தவிர்க்கவும். ராகுவின் பின்னோக்கிய 7-ம் இடத்துப்பார்வையால் பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும். சகோதரிகள் மூலம் உதவிகள் அதிகமாக கிடைக்கும். பண வரவு இருக்கும்.
உத்தியோகம் அதிக உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். ஆனாலும் அதற்கான பலன் கிடைக்காமல் போகாது. வேலைப்பளு அதிகரிக்கும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போவது நல்லது. சிலர் வேலையில் அதிக ஆர்வம் இல்லாமல் இருக்கலாம். அவர்கள் குருப்பிரீத்தி செய்தால் சிறப்பான பலனை பெறலாம். பாதுகாப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். சகபெண் ஊழியர்கள் மிகவும் ஆதரவுடன் இருப்பர்.
ஆசிரியர்கள் கடுமையாக உழைக்க வேண்டியதிருக்கும். சுதந்திரமற்ற நிலையில் இருப்பீர்கள்.ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை வழக்கமாக கிடைக்க வேண்டிய சம்பளஉயர்வு, பதவிஉயர்வுக்கு தடையேதும் இல்லை. வக்கீல்களுக்கு செல்வாக்குக்கு பாதிப்பு ஏற்படலாம். சற்று ஒதுங்கி இருக்கவும். சிலருக்கு வீண் மனக்கவலை வரலாம். உங்களுக்கு வரும் பிரச்சினைகள் அனைத்தும் சனிபகவானின் பார்வையால் இருக்கும் இடம் தெரியாமல் போகும். 2023 மார்ச் 29-ந் தேதிக்கு பிறகு எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். தாங்கள் நடத்தும் வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும்.
மருத்துவர்களுக்கு வேலையில் பொறுமையும் நிதானமும் தேவை. உங்கள் பொறுப்புகளை தட்டிகழிக்காமல் செய்யவும் .
வியாபாரத்தில் முன்னேற்றம் காணலாம். மனைவி பெயரில் உள்ள தொழில் சிறப்படையும். கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் சிறந்து விளங்கும். புதிய வியாபாரம் தொடங்குவதோ, அதிகமுதலீடு போடுவதோ இப்போது வேண்டாம். அதைவிட இருப்பதை சிறப்பாக நடத்துவதே சிறப்பு. பொதுவாக பணமுதலீட்டை விட அறிவு முதலீடே முக்கியம். ஆம் உங்கள் அறிவை பயன்படுத்தி முன்னேறலாம். சிலர் பொருட்களை களவு கொடுக்க நேரிடும்.கவனம் தேவை. இருப்பினும் சனி பகவானின் 10-ம் இடத்துப் பார்வையால் சீரான வளர்ச்சியை காணலாம்.
பெண்களை பங்குதாரராக கொண்ட நிறுவனம் நல்ல முன்னேற்றம் அடையும். தரகு,கமிஷன் தொழிலில் பணவரவு இருக்கும். கலைஞர்கள்: முயற்சிகளில் தடையும், மனதில் சோர்வும் ஏற்படும். பொதுநல சேவகர்களுக்கு மதிப்பு, மரியாதை கூடும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவியை பெறலாம். முக்கிய பொறுப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாணவர்கள்: அசட்டையாக இருந்து விட வேண்டாம். கல்வியில் சிறக்க அதிக சிரத்தை எடுக்க வேண்டியதிருக்கும். ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை கல்வியில் சிறப்பு அடைவீர்கள். ஆசிரியர்கள், ஆன்றோர்களின் ஆதரவு கிடைக்கும்.
விவசாயம் பயறு வகைகளில் நல்ல வருமானம் இருக்கும். கோழி,ஆடு வளர்ப்பில் எதிர்பார்த்த பலனைப் பெறலாம். பசு வளர்ப்பவர்கள் அதில் அதிக அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். புதிய சொத்து வாங்கும் எண்ணம் நிறைவேறும். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். வழக்கு, விவகாரங்கள் சுமாராக இருக்கும்.
பெண்கள்- உங்களுக்கு அபார ஆற்றல் பிறக்கும். புத்தாடை அணிகலன்கள் வாங்கலாம்.அக்கம் பக்கத்தினர் வகையில் சற்று ஒதுங்கி இருக்கவும். அவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். சகோதரர்கள் மிக உறுதுணையாக இருப்பர். சுய தொழில்செய்து வரும் பெண்களுக்கு பொருளாதார வளம் மேம்படும். வேலைக்கு செல்லும் பெண்கள் அதிகமாக உழைக்க வேண்டியது இருக்கும். ஜுன் 20-ந் தேதி முதல் நவம்பர் 16-ந் தேதி வரை சிறப்பான முன்னேற்றம் காணலாம். வேலைபளு குறையும். உங்கள் திறமைக்கு ஏற்ற நல்ல பெயரும். மதிப்பும் கிட்டும்.
உடல்நலம் சிறப்படையும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகளால் அவதிப்பட்டவர்கள் பூரண குணம் அடைவர். நீண்ட காலமாக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவர்.
பரிகாரம்: சனிக்கிழமை பெருமாள் வழிபாடு ந ட த் து ங் க ள் . சாப்பிடும் முன் காக்கைக்கு அன்னமிடுங்கள் . பத்திரகாளி அம்மனை தொடர்ந்து வணங்கி வாருங்கள். வசதி படைத்த தொழில் அதிபர்கள் முதியோர் இல்லத்துக்கு உதவி செய்யலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Gurupeyarchi