ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 19, 2022) திருமண உறவுகள் கைக்கூடும் நாளாக அமையும்..!

தெய்வீக வாக்கு: இந்த ராசியினருக்கு இன்று (அக்டோபர் 19, 2022) திருமண உறவுகள் கைக்கூடும் நாளாக அமையும்..!

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Rasi Palan | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைய நாளில் கவலைகள் ஏற்பட்டாலும் கடந்து வரக்கூடிய மனப்பக்குவம் ஏற்படும். குடும்பம் மற்றும் அலுவலகத்தில் கவலையளிக்கும் விஷயங்கள் இருந்தாலும் அப்படியே கடந்துச் சென்று விடுங்கள். எதிலும் அவசரம் வேண்டாம். நீங்கள் மெதுவாகக்கூட எந்தப் பணிகளையும் தொடங்கினாலும் வெற்றி இலக்கை அடைவீர்கள். எதிர்கால நலன் கருதி மற்றவர்களுடன் நல்லுறவை மேற்கொள்ளுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம்- இலவங்கப்பட்டை

ரிஷபம்:

இன்றைய நாளில் நிதானமாக செயல்படுங்கள். உங்களது வாழ்க்கையில் தற்காலிகமாக இணைந்த உறவுகள் இனி தொடராது. உங்கள் எதிர்கால நலன்களைக் கருதி கடந்த கால நினைவுகளை விட்டு விடுங்கள். புதிய பயணத்திட்டங்கள் ஏற்படக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு கூடாரம்.

மிதுனம்:

அலுவலகத்தில் உங்களது மூத்த அதிகாரிகளிடம் ஏற்படும் வாக்குவாதம் மனக்கசப்பை ஏற்படுத்தும். மனதில் எதையும் வைத்துக் கொள்ளாமல் உங்களது தொழில் திறனை மேம்படுத்த ஆர்வம் காட்டுங்கள். நிதானமான மனப்பான்மை உங்களது அன்றாட வழக்கத்திற்கு இடையூறாக இருக்கலாம்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – வானவில்

கடகம்:

இன்றைய நாளில் எத்தனை சவால்கள் ஏற்பட்டாலும் நம்பிக்கையுடன் இருக்கவும். எதிர்பாராத பிரச்சனைகள் வந்தாலும் அதை விட்டு கடந்துச் செல்லுங்கள். முடிவுகளை நிதானமாக எடுக்கவும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு படிகம்.

சிம்மம்:

இன்றைக்கு சிறப்பான நாளாக அமையக்கூடும். நேர்காணல் அல்லது தேர்வு முடிவுகள் உங்களுக்கு சாதகமாக இருக்கலாம். உங்களது வாழ்வில் ஏற்பட்ட சிறு பதட்ட உணர்வு நீங்கக்கூடும்.வெளியில் சென்றால் தேவையற்ற உணவுகளை அதிகமாக உட்கொள்ளாதீர்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு படகு

கன்னி:

புதிய செலவுகள் ஏற்படும் நாளாக அமையும். இனி வரவிருக்கும் வாரங்களில் சில வலுவான திட்டங்களை மேற்கொள்ள நேரிடும். நீங்கள் பணியாற்றும் துறையில் புதிய வாய்ப்புகள் விரைவில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – ஒரு தலைப்பாகை

துலாம்:

உங்களது வாழ்க்கையில் பணப்புழக்கம் குறைவாக இருக்கக்கூடும். உங்களது பணியை முடிக்க நீங்கள் மேற்கொள்ளும் வழிகள் சரிவரவில்லை என்றால், வேறு வழியைப் பின்பற்றி பணியை நிறைவேற்ற முயற்சி செய்யுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - நீல நிற கல்

விருச்சிகம்:

புதிய தொழில் தொடங்குபவர்களாக இருந்தால், தற்காலிக நிதிப்பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். கவலை வேண்டாம். வெற்றி வெகுதூரத்தில் இல்லை. மனம் நிம்மதிய இல்லாமல் இருக்கும் உங்களுக்கு ஆறுதல் தெரிவிக்கப் பழைய நண்பர்கள் வரக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ஒரு கடல் ஓடு

தனுசு:

திருமண உறவுகள் கைக்கூடும் நாளாக அமையும். உங்களது குடும்பத்தாரிடமிருந்தோ அல்லது நெருங்கிய நண்பர்களிடமிருந்து நல்ல விஷயங்கள் வரக்கூடும். விருப்பங்கள் நிறைவேற காத்திருக்க வேண்டும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - பேஷன் ப்ரூட்

மகரம்:

புதிய பணியைத் தொடங்வதற்கான சில யோசனைகளை உங்களது நண்பர்கள் வழங்கக்கூடும். முற்றிலும் நம்பிக்கை வைக்காமல் நிதானமாகச் செயல்படுங்கள். உங்களது சாலைப் பயணத்தில் கவனம் தேவை. அரசாங்க அதிகாரிகள் சில சவாலான நேரங்களைச் சந்திக்கக்கூடும்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - படிகக்கல்

கும்பம்:

இன்றைக்கு நிதானம் தேவை. உங்கள் மீது எழும் தேவையில்லாத குற்றச்சாட்டுக்களை எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். குடும்பத்தில் போதிய ஆதரவு கிடைக்காத நிலை ஏற்படும். உங்களது வாழ்க்கையில் அதிகமாகச் செலவழிக்கும் பழக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு சேமிக்கும் பழக்கத்தை தொடங்குங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் – மல்லிகை

மீனம்:

இன்றைக்கு வீண் விவாதத்தைத் தவிர்க்க வேண்டும். உங்களது பணி அல்லது குடும்பத்தைப் பாதிக்கும் சூழல்கள் ஏற்பட்டால், இதைச் சரி செய்வதற்கு பழைய விஷயங்களை நினைவு கூருங்கள். இக்கட்டான சூழலில், அலுவலகத்தில் உள்ள உங்களது சீனியர்கள் மூலம் சரியான ஆலோசனையைப் பெறுவீர்கள். எப்போதும் நிதானமுடன் செயல்படுங்கள்.

உங்களுக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கூழாங்கல்

Published by:Selvi M
First published:

Tags: Oracle Speaks