Home /News /spiritual /

செல்வ வாக்கு: இந்த ராசிகாரர்களுக்கு இன்று (31 ஜூலை 2022) வருவாய் அதிகரிக்கும்

செல்வ வாக்கு: இந்த ராசிகாரர்களுக்கு இன்று (31 ஜூலை 2022) வருவாய் அதிகரிக்கும்

செல்வ வாக்கு

செல்வ வாக்கு

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஜூலை 30) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

    மேஷம்:

    நீங்கள் இன்று உங்கள் செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். மேலும் தேவையான விஷயங்களுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருங்கள். உங்கள் மதிப்புமிக்க பொருட்களில் கவனம் தேவை. இன்று உங்களுடைய தினசரி வருமானம் சீராக இருக்கும். வியாபாரத்தில் பார்ட்னர்ஷிப் மூலம் லாபம் கிடைக்கும்.

    ரிஷபம்:

    பணவரவு மற்றும் லாபம் வேண்டும் என்று நினைத்து நீங்கள் இன்று துவக்கும் புதிய பணிகள் சாதகமான பலன்களை தரும். அலுவலக வேலையில் குழப்பங்கள் ஏற்படலாம் , மேலதிகாரியுடன் கருத்து வேறுபாடுகள் வரலாம். எனவே உங்கள் பேச்சு மற்றும் கோபத்தை கட்டுப்படுத்த நினைவில் கொள்ளுங்கள்.

    மிதுனம்:

    வீட்டில் உபயோக பொருட்களால் வீட்டு செலவுகள் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். நீங்கள் பயன்படுத்தும் அல்லது செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கலாம். மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சரியான ஆலோசனை இல்லாமல் உங்கள் பணத்தை இன்று எதிலும் முதலீடு செய்யாதீர்கள்.

    கடகம்:

    இன்று பயணங்களால் உங்களுக்கு நிதி ஆதாயங்கள் கிடைக்க கூடும். ஆனால் எல்லா பயணங்களும் பலனளிக்காது. வழக்கத்தை விட இன்று நீங்கள் சற்று கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். உழைப்பிற்கான பண பலன்களை நீங்கள் பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.

    சிம்மம்:

    உங்களின் தினசரி வருமானம் அதிகரிக்க கூடும், எனவே இன்று நல்ல பொருளாதார வளர்ச்சியை அனுபவிப்பீர்கள். உங்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உள்ளது. கல்வித் துறையுடன் தொடர்புடைய நபர்களுக்கு இன்று மிகவும் அதிர்ஷ்டமான நாள்.

    கன்னி:

    இன்று உங்களுக்கு செலவுகள் குறையும். வழக்குகள் தீர்க்கப்படும். சேமிப்பு மற்றும் முதலீடுகள் பற்றி இன்று யோசிப்பீர்கள். சிறிய கடன்கள் ஏதேனும் இருந்தால் அதை நீங்கள் திருப்பி செலுத்த கூடிய அளவிற்கு உங்கள் நிதி நிலைமை இருக்கும்.

    துலாம்:

    இன்று வியாபாரிகளுக்கு மற்ற நாட்களை விட நல்ல லாபம் கிடைக்கும், வருமானம் சிறப்பாக இருக்கும். இதனால் நிதி நிலைமைகள் மேம்படும். இருப்பினும் போட்டியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

    விருச்சிகம்:

    தனிநபர்கள் நெருங்கிய நபருடன் புதிய முயற்சியை தொடங்க இன்று நல்ல நாள். பணியிடத்தில் உங்கள் நற்பெயர் மேலும் மேம்படும். இன்று உங்களது நிதி நிலை சீராக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். சமூகத்தில் உங்களுக்கான மதிப்பை நீங்கள் பெறுவீர்கள்.

    தனுசு:

    இன்று உங்களுடைய வருமானம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக குழந்தைகளுக்காக இன்று சற்று அதிக தொகையை செலவிட வேண்டியிருக்கும். நீங்கள் செலவுகளை ஏற்படுத்த கூடிய மத நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள்.

    மகரம்:

    உடல்நலம் குன்றிய ஒருவரின் ஆரோக்கியத்திற்காக நீங்கள் இன்று பணம் செலவழிக்க வேண்டியிருக்கும். இன்றைக்கு நீங்கள் நிதியை கொடுத்து ஏழைகளுக்கு உதவும் சூழல் ஏற்படலாம். தயங்காமல் உதவி செய்யுங்கள், அதற்கான பலன் வேறொருவரின் உதவியாக உங்களுக்கு கிடைக்கும்.

    கும்பம்:

    நீங்கள் உங்கள் நிதி நிலையை மேம்படுத்த புதிய வாய்ப்பை தேடி கொண்டிருந்தால் இன்று உங்களுக்கு ஒரு சிறப்பான வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் போட்டியாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும்.

    மீனம்:

    இன்று உங்களது வருமானம் பெருகும், இதனால் வாழ்க்கை தரமும் உயரும். நீங்கள் ஈடுபடும் சமூகப் பணி உங்கள் மீதான மரியாதையை அதிகரிக்கும். எதிர்பார்த்து காத்திருந்த பணியிட மாற்றம் கிடைக்க கூடும்.
    Published by:Murugesh M
    First published:

    Tags: Rasi Palan

    அடுத்த செய்தி