• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • Rasi Palan : தனுசு - இந்த வார ராசிபலன் (ஜுலை 25முதல் ஜுலை 31வரை)

Rasi Palan : தனுசு - இந்த வார ராசிபலன் (ஜுலை 25முதல் ஜுலை 31வரை)

தனுசு

தனுசு

தனுசு ராசிக்கான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Share this:
    தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1-ம் பாதம்): வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடவும், உழைக்கவும் தயங்காத தனுசு ராசி அன்பர்களே, இந்த வாரம் வீண் அலைச்சல் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். மனதில் தெளிவு உண்டாகும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் எண்ணம் தோன்றும்.

    குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் நீங்கும். தெளிவான முடிவுகள் மூலம் நன்மை உண்டாகும். கணவன் மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து எதையும் மனம்விட்டு பேசி செய்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்ப வருமானம் அதிகரிக்கும்.

    அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. பணம் வரும் வாய்ப்பு உள்ளது. தொழில் வியாபாரம் தொடர்பான கடிதப் போக்குவரத்தால் அனுகூலம் உண்டாகும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்துவது தொடர்பான திட்டங்கள் தோன்றும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் பயணங்களால் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை மறுத்து பேசாமல் அனுசரித்து செல்வது நன்மையை தரும்.

    மாணவர்கள் ஆசிரியர்கள் கூறுவதை கேட்டு அதன்படி நடப்பதும், பாடங்களில் இருக்கும் சந்தேகங்களை உடனுக்குடன் கேட்டு தெரிந்து கொள்வதும் வெற்றிக்கு உதவும்.

    பரிகாரம்: குரு பகவானை வணங்கி வர செல்வம் சேரும். வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: