முகப்பு /செய்தி /ஆன்மிகம் / Rasi Palan : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | மே 17 முதல் மே 23 வரை

Rasi Palan : தனுசு ராசிக்கான இந்த வார ராசி பலன் | மே 17 முதல் மே 23 வரை

தனுசு

தனுசு

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்குமான இந்த வார ராசிபலன். கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542)

  • Last Updated :

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சாதகமாக செய்து முடிப்பீர்கள். திறமை அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றுவதில் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் எச்சரிக்கை தேவை.

தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் சாதுரியமான பேச்சினால் எதிலும் லாபம் காண்பார்கள். வர்த்தக திறமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையால் முன்னேற்றமடைவார்கள். இழுபறியாக இருந்த வேலையை துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்து வந்த பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்தினர் வருகை இருக்கும்.

குடும்ப பிரச்சனைகளில் சாதகமான முடிவே உண்டாகும். பெண்களுக்கு துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கலைத்துறையினருக்கு பயணத்தால் அனுகூலம் உண்டு. அதிக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். மாணவர்களுக்கு திறமையால் முன்னேற்றம் உண்டாகும். கஷ்டமான பாடங்களையும் துணிச்சலாக படித்து முடிப்பீர்கள். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன், வெள்ளி

பரிகாரம்: தினமும் நந்தியம்பெருமானை வணங்கி வர அரசாங்க அனுகூலம் ஏற்படும். எடுத்த முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.

top videos

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    First published:

    Tags: Horoscope 2021, Rasi Palan