முகப்பு /செய்தி /ஆன்மிகம் / வியாழன் கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஜனவரி 26, 2023) பழைய கடன்களை கொடுத்து முடிப்பீர்கள்

வியாழன் கிழமை ராசிபலன் | இந்த ராசியினர் இன்று (ஜனவரி 26, 2023) பழைய கடன்களை கொடுத்து முடிப்பீர்கள்

ராசி பலன்

ராசி பலன்

Money Mantra | மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய (ஜனவரி 26) பணவரவு எப்படி இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம்.

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

இன்றைய தினம் உங்களை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பீர்கள். எதிர் தரப்பினரின் விமர்சனங்களை காது கொடுத்து கேட்க வேண்டாம். வெற்றி உங்கள் காலடியை முத்தமிடும். சமூக தொடர்புகளை அதிகரித்துக் கொள்வீர்கள். உங்களுக்கான மரியாதை அதிகரிக்கும்.

பரிகாரம் - கிருஷ்ணர் கோவிலில் மயிலிறகு கொடுக்கவும்.

ரிஷபம்:

இன்றைய தினம் பண லாபம் கிடைக்க வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் அதிகாரிகள் உடனான பந்தம் அதிகரிக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைக்கும். தொழில்துறையினருக்கு இயல்பான நாளாக அமையும்; எதையும் எதிர்பார்க்க முடியாது.

பரிகாரம் - உணவில் மிளகு சேர்த்துக் கொள்ளவும்.

மிதுனம்:

இன்றைய தினம் ஆற்றல் மற்றும் வலிமை ஆகியவற்றை உணருவீர்கள். காதல் உறவுகளை ஆச்சரியத்துடன் கொண்டாடுவீர்கள். அலுவலகத்தில் உங்களுக்கான பதவி உயர்வு அல்லது ஊதிய உயர்வு குறித்து பேசலாம். ஆர்வத்தை கட்டுப்படுத்தவும்.

பரிகாரம் - ராமரக்‌ஷ மந்திரம் உச்சரிக்கவும்.

கடகம்:

இன்றைய தினம் அலுவலகத்தில் உங்களுக்கு சிறப்புரிமைகள் கிடைக்கும். புத்தாக்க வேலையை செய்வதில் பிஸியாக இருப்பீர்கள். தொழிலதிபர்களுக்கு இன்றைய தினம் இயல்பானதாக இருக்கும். வேலையற்றவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும்.

பரிகாரம் - ஏழைகளுக்கு உணவளிக்கவும்.

சிம்மம்:

அலுவலக வேலையில் பிஸியாக இருப்பீர்கள். இன்றைய உழைப்புக்கு எதிர்காலத்தில் பணப்பலன் கிடைக்கும். சேமிப்புக்கு தகுந்தவாறு கடன் வாங்க வேண்டும். தொழிலதிபர்களுக்கு இன்றைய தினம் சிறப்பு மிகுந்ததாக அமையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

பரிகாரம் - மீன்களுக்கு உணவளிக்கவும்.

கன்னி:

இன்றைய தினம் உங்கள் பழைய கடன்களை கொடுத்து முடிப்பீர்கள். அத்தியாவசிய பொருட்களை வாங்குவீர்கள். தற்போது உங்கள் பையில் உள்ள பணத்தின் மீது கவனம் வைக்கவும். ஏனென்றால் பட்ஜெட் மீறி செலவு சென்று கொண்டிருக்கிறது.

பரிகாரம் - அனுமனை வணங்கவும்.

துலாம்:

பணியிடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்களுக்கான பொறுப்புகளும் கூடுதலாக இருக்கும். தொழிலதிபர்களுக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள பணிகள் முடிவடையும். வணிகத்தில் சவால்களை எதிர்கொள்ள வேண்டாம். முதலீடுகளுக்கு ஆவணங்களை கவனமாக படிக்கவும்.

பரிகாரம் - சிறுமிகளுக்கு இனிப்பு வழங்கவும்.

விருச்சிகம்:

இன்றைய தினம் மகிழ்ச்சி நிரம்பியதாக இருக்கும். வணிகத்தில் சிலரின் ஆலோசனையை கேட்க வேண்டியிருக்கலாம். புதிய வேலைவாய்ப்புகள் குறித்த சட்ட விவகாரங்களை ஆய்வு செய்து கொள்ளவும். நிலம் தொடர்பான ஒப்பந்தங்களில் கவனம் தேவை.

பரிகாரம் - பசுவுக்கு பசும்புல் வைக்கவும்.

தனுசு:

பணியிடத்தில் உங்கள் திறனை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் இன்று உங்களுக்கு கிடைக்கும். அந்த வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவும். வர்த்தகர்கள் முன்பின் தெரியாத நபர்களிடம் வர்த்தகம் செய்யும் முன்பு விசாரிக்கவும்.

பரிகாரம் - எறும்புகளுக்கு மாவு வைக்கவும்.

மகரம்:

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்ளவும். அலுவலகத்தில் குழுவாக பணியாற்றுவதன் மூலமாக கடினமான பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். தொழிலதிபர்களுக்கு இது கடினமான சூழலாக அமையும்.

பரிகாரம் - அரசமரத்தடியில் நெய்விளக்கு ஏற்றவும்.

கும்பம்:

வணிக ரீதியிலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அலுவலகத்தில் எதிரிகளை வீழ்த்துவீர்கள். அதிகாரிகள் உடனான பந்தம் இனிமையானதாக இருக்கும். புதிதாக வாகனம், நிலம் அல்லது மதிப்புமிக்க பொருள் வாங்குவதற்கு திட்டமிடுவீர்கள்.

பரிகாரம் - அனுமன் கோவிலில் கொடி வழங்கவும்.

மீனம்:

பொருளாதாரம் சார்ந்த விஷயத்தில் கவனமுடன் இருக்கவும். யாருடனும் பணம் சார்ந்த பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம். முதலீடு என்ற பெயரில் மோசடி நடைபெறலாம். அலுவலகத்தில் சிக்கலான பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

பரிகாரம் - சூரியணுக்கு தண்ணீர் படையல் வைக்கவும்.

First published:

Tags: Rasi Palan