முகப்பு /செய்தி /ஆன்மிகம் / தெய்வீக வாக்கு : இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 27, 2023) எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்

தெய்வீக வாக்கு : இந்த ராசியினருக்கு இன்று (ஜனவரி 27, 2023) எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும்

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

Oracle Speaks | மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான தினசரி ராசி பலன் இதோ...

  • Trending Desk
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

மேஷம்:

தொழிலை விருத்தி செய்ய வாய்ப்புகள் உண்டாகும். உங்கள் பெற்றோர்களை நீண்ட நாட்களாக உறுத்தி கொண்டிருக்கும் பிரச்சனை ஒன்று இன்று சரியாகும். சற்று நிம்மதியாக உணர்வீர்கள். இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திகான குறியீடு – டாட்டூ

ரிஷபம்:

புதிய மனிதர்களின் தொடர்புகள் மூலம் நாள் நன்றாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் உங்களை வந்து சேரும். நீங்கள் தொழில் நடத்தி வருபவராக இருந்தால் பணியாளர்கள் சம்பந்தமாக சில பிரச்சினைகள் உண்டாக்கலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திகான குறியீடு – உப்பு விளக்கு

மிதுனம்:

நீங்கள் நீண்ட நாட்களாக வேலை செய்து வந்து ஒன்றின் முடிவுகள் இன்று சிறப்பாக இருக்கும். உற்பத்தி துறையில் இருப்பவராக இருந்தால் தொழிலை விருத்தி செய்ய புதிய வாய்ப்புகள் வந்து சேரும். சிறு தொழில் செய்பவர்களுக்கு தொழில் சம்பந்தமாக கடன் கிடைக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திகான குறியீடு – விளக்கு

கடகம்:

ஆன்மீக சம்பந்தமாக சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உண்டு. ஒரு சாதுவை சந்தித்து அதன் மூலம் பல நன்மைகளை பெறுவீர்கள். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பேச்சை குறைப்பதன் மூலம் பல்வேறு பிரச்சனைகள் வராமல் பாதுகாத்து கொள்ளலாம்.

உங்கள் அதிர்ஷ்டத்திகான குறியீடு – கயிற்று பாதை

சிம்மம்:

தேர்வுகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் உண்டு. இன்று அதிர்ஷ்டம் நிறைந்திருக்கும். வீட்டில் உள்ள சில பிரச்சனைகள் மீண்டும் துளிர் விட வாய்ப்புகள் உண்டு. எனவே கவனம் தேவை.

உங்கள் அதிர்ஷ்டத்திகான குறியீடு – தங்கத் தட்டு

கன்னி:

உங்களது நடத்தையில் கவனம் தேவை. உங்கள் வாழ்க்கையில் முன்னேற புதிய வாய்ப்புகள் உங்களை வந்து சேரும். நீங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி இல்லை என்றாலும் உங்களது கடின உழைப்பின் மூலம் உங்கள் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி பெற முடியும்.

உங்கள் அதிர்ஷ்டத்திகான குறியீடு – வெள்ளிக் கம்பி

துலாம்:

உங்களது நோக்கங்களை சரியாக வகுத்துக் கொள்வது நல்லது. நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதனை கடினமாக உழைப்பதன் மூலம் வெற்றி பெறுவீர்கள். உங்களை சுற்றி உள்ள மனிதர்கள் மீது சந்தேகம் உண்டாகும். அண்டை வீட்டாருடன் வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திகான குறியீடு – கண்ணாடி டம்ளர்

விருச்சிகம்:

முக்கிய விஷயங்களில் கவனத்தை செலுத்துவீர்கள். உங்களது செயல் திறனை பார்த்து உங்களை சுற்றி உள்ளவர்கள் உயர்ந்து பாராட்டுவார்கள். நேரம் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இப்போதே பல செயல்களை செய்து முடித்துக் கொள்வது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திகான குறியீடு – கிரீன் அவெண்டுரின்

தனுசு:

உங்களை சுற்றி உள்ள மனிதர்களைப் பற்றி கவலை கொள்வதை நிறுத்த வேண்டும். உங்களது எண்ணங்களையும் மற்றவர்கள் மீது திணிப்பதை நிறுத்த வேண்டும். புதிய வேலைகள் எதையும் துவங்காமல் சற்று ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது.

உங்கள் அதிர்ஷ்டத்திகான குறியீடு – ஏரி

மகரம்:

கடினமான உழைப்பின் மூலம் சுற்றியுள்ளவர்களின் நம்பிக்கை பெறுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்வது உங்கள் கையில் உள்ளது.

உங்கள் அதிர்ஷ்டத்திகான குறியீடு – வெள்ளை மெழுகுவர்த்தி

கும்பம்:

இன்றைய நாளில் மன உறுதி அதிகரித்திருக்கும். பல்வேறு எண்ணங்கள் உங்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும். எனவே ஒரு குறிப்பிட்ட செயலில் மனதை ஒருநிலைப்படுத்தி செய்வதன் மூலம் வெற்றியை ஈட்டுவீர்கள். கோபத்தை கட்டுப்படுத்த தியானம் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

உங்கள் அதிர்ஷ்டத்திகான குறியீடு – பிளாக் டோர் மாடல்

மீனம்:

குடும்பத்தாரிடம் உள்ள பிரச்சினைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. சிறு சிறு விஷயங்களைக் எல்லாம் சண்டை போடாமல் இருப்பது நல்லது. அனுபவசாலி ஒருவரிடம் அறிவுரை பெறுவது வெற்றியை கொடுக்கும்.

உங்கள் அதிர்ஷ்டத்திகான குறியீடு – ரெட் ஸ்கார்ஃப்

First published:

Tags: Oracle Speaks, Rasi Palan