மேஷம்:
இன்றைய நாளில் நீங்கள் திட்டமிட்டதை விட வேலைகள் சற்று கூடுதலாக இருக்கும். முக்கிய வேலைகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டிய நிலை ஏற்படலாம். உணவில் அதிகம் கவனம் தேவை.
உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - மல்லி பூ
ரிஷபம்:
இன்றைய நாளின் முதல் பாதியில் முடிந்த அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டாம் பாதியில் இருந்து வேலை பளு அதிகரிக்கும் நெருங்கிய நண்பர் ஒருவரிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். வேலைகளை தள்ளிப் போடுவதை தவிர்க்க வேண்டும்.
உங்கள அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - எலுமிச்சை புல்
மிதுனம் :
பொருளாதார ரீதியாக மிக வலுவான நிலையை அடைவீர்கள். லாபம் அதிகரிக்கும்.. உங்களுக்கு வரவேண்டிய பணம் வந்து சேரும். உங்கள் குழந்தைகளின் நண்பர்களை பற்றி சற்று ஆராய வேண்டிய நாள். வேலையில் இருந்து சற்று ஓய்வெடுத்துக் கொள்வது நல்லது.
உங்கள் அதிர்ஷ்டத்திற்கான குறியீடு - இரண்டு அணில்கள்
கடகம்:
நீங்கள் ஏற்கனவே தீட்டி வைத்த திட்டங்கள் அனைத்தும் நடந்தேறும். ஒரு தலைப்பட்சமான உறவுகளில் இருந்துவெளி வருவது நல்லது. இன்றைய நாள் சற்று பரபரப்பாக இருந்தாலும் அர்த்தமுள்ள நாளாக இருக்கும்.
உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - கழுகு
சிம்மம்:
உங்களது உள்ளுணர்வை கேட்டு செயல்படுவது நல்லது இதன் மூலம் நீங்கள் எதிர்பார்த்த வெற்றி உங்களை வந்தடையும். ஏற்கனவே தள்ளி போட்ட வேலைகளை இன்று செய்து முடிக்க ஏற்ற நாள். உங்கள் வாழ்க்கை துணைக்கு உங்களது உதவி தேவைப்படலாம்.
உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - அறிவிப்பு பலகை
கன்னி:
உங்களது ஆசைகளை தெளிவாக மனதில் நிலை நிறுத்தி அதற்கேற்ற வகையில் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டும். உங்களது செயல்களின் அடிப்படையில் உங்களை யாரேனும் எடை போடலாம். நேர்மறை எண்ணம் உடைய ஒருவரின் தொடர்பு இன்று கிடைக்கும். பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு.
உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - மஞ்சள் நீலமாணிக்கம்
துலாம்:
இன்று நாள் மிகவும் சிறப்பாக இருக்கும். இன்றைய நாளை நன்றாக அனுபவித்து வாழ வேண்டும். அனைத்து விஷயங்களையும் சரியாக திட்டம் தீட்டி செயல்படுத்துவது நல்லது. குடும்பத்துடன் பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் உண்டு.
உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - புதிய கேட்ஜெட்
விருச்சிகம்:
புதியதொரு பழக்கத்தை நீங்கள் கற்றுக் கொள்வீர்கள். புதிதாக சந்தித்த ஒருவரின் மீது அதீத நம்பிக்கை வைப்பீர்கள். சிறிது குழப்பங்களும் உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு. புதிய தினசரி பழக்கத்தை உருவாக்கிக் கொள்வதன் மூலம் நன்மை கிடைக்கும்.
உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - விளக்கு சரம்
தனுசு:
தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். பொறுமையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். நீங்கள் ஒன்று நினைக்க உங்களது பேச்சு வேறொரு விதமாக புரிந்து கொள்ளப்படும். அண்டை வீட்டில் உள்ளோரால் சில பிரச்சனைகள் உண்டாகும்.
உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - வெண்ணிலா வாசனை
மகரம்:
உங்களது உள்ளுணர்வு உங்களை சரியாக வழி நடத்தும். நீண்ட நாட்களாக திட்டம் தீட்டி வந்த செயல்களை இன்று நிறைவேற்றுவீர்கள். உங்களது பயத்தை ஒதுக்கி விட்டு புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டிய நேரம்.
உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - காளான்
கும்பம்:
இன்றைக்கு உங்களின் புகழ் அதிகரிக்கும். புதிய எண்ணங்களுக்கு வரவேற்பு கொடுப்பதன் மூலம் வெற்றி கிடைக்கும். உங்களது தினசரி பழக்க வழக்கங்களில் சில தடங்கல்கள் ஏற்படலாம். புதிய வேலையாட்களை பணியமர்த்துவது பரிந்துரைக்கப்படுகிறது.
உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - தெளிவான வானம்
மீனம்:
நீங்கள் பயந்து கொண்டிருந்த விஷயம் ஒன்று நடந்தேறும். ஆனாலும் உங்கள் திறமையால் நிலைமையை சரியாக கையாளுவீர்கள். வேலையில் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். புதிய வாய்ப்புகள் உண்டாகும்.
உங்கள் அதிர்ஷ்டத்துக்கான குறியீடு - ஊதா நிற பூக்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Oracle Speaks, Rasi Palan