ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

தெய்வீக வாக்கு: இன்று அவசரத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்

தெய்வீக வாக்கு: இன்று அவசரத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம்

தெய்வீக வாக்கு

தெய்வீக வாக்கு

April 24 , Rasipalan | உங்கள் கருத்துகளில் கொஞ்சம் பழமைவாதம் இருக்கலாம். ஆனாலும், உங்களின் சில கருத்துகள் பிறரின் கவனத்தை ஈர்க்கும்.

 • Trending Desk
 • 3 minute read
 • Last Updated :

  மேஷம்:

  உங்கள் கருத்துகளில் கொஞ்சம் பழமைவாதம் இருக்கலாம். ஆனாலும், உங்களின் சில கருத்துகள் பிறரின் கவனத்தை ஈர்க்கும். மிக எளிமையான கண்ணோட்டத்துடன் உங்கள் திட்டப் பணிகளை நிறைவு செய்வீர்கள். மிக முக்கியமான நபர்களை சந்திக்க இருக்கிறீர்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - வானவில்

  ரிஷபம்:

  பிறரது கவனத்தை ஈர்ப்பது ஒன்றும் பெரிய காரியம் அல்ல. ஆனாலும், நீங்கள் ரிஸ்க் எடுக்கிறீர்கள். இது மட்டுமல்லாமல் பிறர் மீது நம்பிக்கை வைப்பதும் உங்களுக்கு எளிமையானது. விரைவில் பயணங்கள் ஏற்படலாம். நீங்கள் புறக்கணிக்க நினைக்கும் ஒருவர் திடீரென்று உங்கள் முன்னால் வரலாம். நண்பர்களை கவனமாக தேர்வு செய்யுங்கள்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சூரியகாந்தி பூ

  மிதுனம்:

  ஒத்த கருத்துடைய மக்களிடம் நல்லெண்ணத்தை நீங்கள் ஏற்படுத்தக் கூடும். உங்களை கண்காணித்து வரும் ஒருவர் இப்போது நேரடியாக அணுகக் கூடும். நீங்கள் ஏதேனும் முதலீடு செய்திருந்தால் அவை தற்போது ஏற்றம் காணும். பழைய உறவுகளில் புத்துணர்ச்சியை புகுத்த முயற்சி செய்யவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - செராமிக் பாத்திரம்

  கடகம்:

  உங்கள் மனதிற்கு அமைதி தேவை என்பதால் உங்கள் உணர்வுகளை கொஞ்சம் அடக்கி வையுங்கள். எந்த வகையில் ரிலாக்ஸ் கிடைத்தாலும், இனி வரும் நாட்களை சிறப்பாக திட்டமிடுவதற்கு அது உதவிகரமாக இருக்கும். உங்கள் நண்பர்களுடன் நேரத்தை செலவழிக்க நீங்கள் விரும்பலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - ரோஜா கொத்து

  சிம்மம்:

  பொது இடத்தில் தனிப்பட்ட விஷயங்கள் குறித்து பேசுவதை கட்டாயம் தவிர்க்கவும். உங்களுக்கு தெரியாமலேயே சில விஷயங்களில் நீங்கள் தலையிட வேண்டியிருக்கும். அவசரத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். குழப்பமாக இருந்தால், அதை பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என ஒத்தி வைக்கவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - எமரால்டு

  கன்னி:

  நீங்கள் ஒரு திட்டம் தீட்டியிருந்தாலும் அதை செய்வது கடினமாக இருக்கக் கூடும். தினசரி வேலைகளை செய்வதற்கே உங்கள் நேரம் சரியாக இருக்கும். கடந்த காலத்தில் செய்த உழைப்புக்கான பலனை பெற இருக்கிறீர்கள். பல விஷயங்களை மனதில் போட்டு குழப்புவதால் தேவையற்ற மன அழுத்தமே மிஞ்சும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கொட்டகை

  துலாம்:

  சிலர் வேண்டுமென்றே உங்களிடம் வாக்குவாதம் செய்ய விரும்புவார்கள். உங்கள் புத்திக்கூர்மையை பயன்படுத்தி நீங்கள் தான் அதை தவிர்க்க வேண்டும். கடந்த காலத்தில் உங்களுக்கு சிக்கல் தந்து கொண்டிருந்த ஒரு பிரச்சினைக்கு தீர்வு காணும் வாய்ப்பு கிடைக்கும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - மண் பானை

  விருச்சிகம்:

  யாரையேனும் சந்திக்க அனுமதி வாங்கியுள்ளீர்கள் என்றால் சரியான நேரத்தை கடைப்பிடிக்கவும். உங்களால் செய்ய முடியாத யோசனைகள் குறித்து பேசுவதை தவிர்ப்பது நல்லது. பணம் சார்ந்த பிரச்சினை இருந்தாலும், அது வெகு விரைவில் முடிவுக்கு வரும். பெண் ஒருவருக்கு உங்கள் உதவி தேவைப்படலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - விளக்குகள்

  தனுசு:

  ஏதோ ஒன்று நடக்கப் போவதாக நீங்கள் அச்சம் கொண்டிருந்த ஒன்று உண்மையாகவே நடக்கப் போகிறது. பிறரிடம் அதிகாரம் கொடுப்பதை தவிர்ப்பதே இதைத் தடுப்பதற்கான வழிமுறை ஆகும். சில நண்பர்கள் உங்களை சந்திக்க நினைத்தாலும் உங்களுக்கு அதில் விருப்பம் இருக்காது.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - கிளி

  மகரம்:

  உங்கள் தேவைகள் மற்றும் ஆசைகளுக்கு தகுந்தாற்போல உங்களைச் சுற்றியுள்ள உலகம் மாற இருக்கிறது. சாதாரண ஒரு பிரச்சினைக்காக சண்டை அல்லது வாக்குவாதம் ஏற்படக் கூடும். உங்கள் வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், முற்றிலும் உங்கள் கருத்துக்கு புறம்பான ஒன்றை முன்வைக்கலாம்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - உதயசூரியண்

  கும்பம்:

  சாதாரண வாழ்க்கை உங்களுக்கு போர் அடித்திருக்கக் கூடும். இப்போது நீங்கள் பறப்பதற்கு விரும்புவீர்கள். உங்கள் பழைய பாஸ், ஏதேனும் வேலை செய்து தருமாறு கேட்டு உங்களை அணுகலாம். வாய்ப்புகள் குறைவாக இருக்கிறது என்றாலும், அதில் உங்களுக்கு தகுந்த ஒன்றை தேர்வு செய்து கொள்ளவும்.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சிட்டுக்குருவி

  மீனம்:

  நீங்கள் எந்த அளவுக்கு பணிந்து செல்கிறீர்களோ, அந்த அளவுக்கு லாபம் கிடைக்கும். உங்கள் மகிழ்ச்சிக்கான அடிப்படை காரணமாக உங்கள் தாய் இருக்கக் கூடும். குடும்பம் ஒன்றிணைவதற்கான சூழல் உருவாகி வருகிறது. பண வரவு போதுமான அளவுக்கு இருக்கிறது. உங்களுக்கு சாதகமான நாட்கள் காத்திருக்கின்றன.

  உங்கள் ராசிக்கான அதிர்ஷ்ட அடையாளம் - சில்வர் ஸ்பூன்

  Published by:Yuvaraj V
  First published:

  Tags: Oracle Speaks, Rasi Palan