புதியதாக வீடு கட்டும் போது ஏதாவது சில காரணங்களால் சிலருக்கு தடைபட்டு நிற்கும். வீடு கட்ட இருக்கும் இடம் முன்பு ஒரு வேளை இடுகாடாகவோ, நரபலி கொடுத்த இடமாகவோ, புற்றுகள் இருந்து அகற்று பட்டோ அல்லது பில்லி, சூனியம், பேய் பிசாசுகள், கண் திருஷ்டிகளினால் தடை, கொரூரமாக தற்கொலை செய்துக் கொண்டவர்கள் என பலவிதமாக சம்பவங்கள் ஏற்படலாம். ஆனால் இதற்காக பயப்பட வேண்டாம். வாஸ்து சாஸ்திரப்படி சில விஷயங்களை முறையாக செய்தாலே போதுமானது... அவைகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்...
பூஜை முறை
வீடு கட்டும் போது தடை ஏற்படாமல் இருக்க வீடு கட்ட வாங்கிய கட்டுமான கற்களில் சிறிய ஜல்லிகல் ஒன்றை எடுத்து கொண்டு ஐய்யப்பன் கோவிலுக்கு சென்று நம்பூதிரிகளிடம் கொடுத்தால் சுவாமி ஐய்யப்பன் பாதத்தில் வைத்து ரிக் வேதத்தின் சுருக்கத்தை ஓதி பூஜை செய்து கொடுப்பார்கள்.
அந்த ஜல்லிகல்லை அஸ்திவாரத்தின் ஈசானிய மூலையில் போட்டு மூடி கட்டிடம் கட்டினால் எவ்வித பிரச்சனைகளும் இன்றியும் தீய சக்திகளின் தாக்குதல் இன்றியும் வீடு கட்டும் பனி நன்றாக தொடங்கி முழுமையாக நிறைவேறும்.
மேற்கூறிய இம்முறை சுவாமி ஐய்யப்பன் கோவிலில் இன்றும் நடை முறையில் உள்ளது. சரியான தேவஸ்தான நபரின் உதவியுடன் கட்டணம் செலுத்தி பூஜை செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க... மாசி மகம் 2022 எப்போது? நேரம், தேதி குறித்த தகவல்கள்....
முக்கியமான வாஸ்து குறிப்புகள்
1. வீட்டுத் திண்ணைகள் வடக்கேயும், கிழக்கேயும் உயரமாக அமைக்கக் கூடாது.
2. வடக்கு, கிழக்கு காம்பவுண்டு சுவரின் மேல் பூந்தொட்டி வைக்கக் கூடாது.
3. வீட்டின் தென்மேற்கு மூலையின் மெயின்கேட், போர்டிகோ தலைவாசல் மற்றும் கிணறு அமைந்திருந்தால் வேதனைகளும் சோதனைகளுமே வரும்.
மேலும் படிக்க... இன்று வாஸ்துநாள்... இல்லத்தின் திருஷ்டியைப் போக்க வாஸ்து பகவானை வழிபட உகந்தநாள்...
4. வாசலுக்கு எதிரே கிணறோ, குழியோ இருக்கலாகாது.
5. வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை வாங்கலாம்.
6. வீட்டின் தெற்கு, மேற்கு பகுதியில் உள்ள காலிமனை நிலங்களை இனாமாகக் கூட வாங்கி சேர்க்கக் கூடாது.
7. ஒரு வீட்டினை இருவருக்கு பங்கிட்டு பாகப்பிரிவினைச் செய்ய கூடாது.
8. ஒரே மனையில் 2 வீடுகள் கட்ட விரும்பினால் முதலில் தெற்கு அல்லது மேற்கு பகுதியில் கட்ட வேண்டும். பிறகு தான் வடக்கு அல்லது கிழக்கிலுள்ள காலி மனையில் வீடு கட்டலாம்.
9. ஓரே மனையில் 2 வீடுகள் கட்டினால் தெற்கிலுள்ள வீட்டை விட வடக்கில் உள்ள வீடு தாழ்வாகவும், மேற்கில் உள்ள வீட்டை விட கிழக்கில் உள்ள வீடு தாழ்வாகவும் இருக்க வேண்டும்.
மேலும் படிக்க... Vastu: இந்த 7 வாஸ்து குறிப்புகள் உங்கள் வீட்டுக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும்...
10. ஒரு மனைக்கு வடக்கிலும் கிழக்கிலும் பாதை இருந்தாலும், 4 திசைகளிலும் பாதை இருந்தாலும் சிறப்புடையது.
11. வீடு பழுது பார்க்கும் பணிகளை மெதுவாகச் செய்தாலும் பரவாயில்லை. பாதியில் நிறுத்தவேக் கூடாது.
12. வீடு கட்ட ஆரம்பிக்கும் முன் அல்லது செப்பனிட ஆரம்பிக்கும் முன் சரியான நேரத்தில் அருகம்புல், துளசி கொண்டு மனையின் ஈசானியத்தில் வாஸ்து பூஜை (பூமி பூஜை) செய்தல் மிக நல்லது.
13. வீட்டை செப்பனிடும் முன் வாஸ்து நிபுணர்களைக் கொண்டு தீர நிதானமாக ஆராய்ந்த பின் பழுது பார்க்கும் பணியை வேகமாகவும் கவனமாகவும் செய்ய முடிக்க வேண்டும்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.