• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • சீரடி சாய் பாபாவின் வரலாறு!

சீரடி சாய் பாபாவின் வரலாறு!

சாய் பாபா

சாய் பாபா

குழந்தாய், நீ பிராமண குலத்தில் பிறந்து, இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, அடுத்த சில வருஷங்களில் பிராமணனான என்னிடம் ஒப்படைக்கப்பட்டாய். ஆனாலும், நான் உன்னை ஓர் இஸ்லாமியனாகவே வளர்க்கவும் பயிற்றுவிக்கவும் செய்தேன். ஆனால், நீயோ அனைத்தையும் கடந்த அவதார புருஷன் என சய் பாபா போற்றப்பட்டார்.

  • Share this:
    சீரடி சாய் பாபா என்றழைக்கப்படும் “சாய் பாபா” அவர்கள் இந்தியாவின் மகாராஸ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டதிலுள்ள “சீரடி” என்ற இடத்தில் பிறந்தார். இவருடைய பிறப்பு மற்றும் ஆரம்ப வாழ்க்கை பற்றிய உண்மையான தகவல்கள் ஏதும் கிடைக்காததால், இன்றுவரையும் அவருடைய பிறப்பு பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. ஆனால், அவர் இந்து மதம் சார்ந்த பெற்றோருக்கு பிறந்ததாகவும், பிறகு ஒரு முஸ்லிம் குடும்பத்தில் வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

    அவருக்குப் 16 வயது இருக்கும் பொழுது, ஒரு வேப்பமரத்தடியில் முதல் முதலாக தியானத்தில் ஈடுபட்டிருந்தார். அப்பொழுது, ஒரு மகானாக காட்சியளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், அவரை நாடிவந்த மக்களுக்கு சிறந்த ஆன்மீகத் தத்துவங்களை எடுத்துக்கூற தொடங்கினார். அவரை தரிசிக்க அதிகளவில் மக்கள் வர ஆரம்பித்தனர்.

    மேலும், தன்னிடம் ‘உடல் நிலை சரியில்லை’ என்று வருபவர்களுக்கு ஆசி வழங்கி அவர்களுடைய நோயைக் குணப்படுத்தினார். அவருடைய ஆன்மீக போதனைகள், இந்து மற்றும் இஸ்லாமியர்கள் மட்டுமல்லாமல், அனைத்துத்தரப்பு மக்களையும் கவர்ந்தது. அதுமட்டுமல்லாமல், அவருடைய போதனைகளும், தத்துவங்களும், கூற்றுகளும் பொதுமக்கள் எளிதில் புரிந்துக்கொள்ளும் அளவிற்கு மிக எளிமையான மொழியில் இருந்தது. அவருடைய புகழ், இந்தியா முழுவதும் பரவத் துவங்கியது.

    இதனை பார்த்த சாய் பாபாவை வளர்தத பிராமணர் அவரிடம் கூறியதவது, குழந்தாய், நீ பிராமண குலத்தில் பிறந்து, இஸ்லாமிய குடும்பத்தில் வளர்ந்து, அடுத்த சில வருஷங்களில் பிராமணனான என்னிடம் ஒப்படைக்கப்பட்டாய். ஆனாலும், நான் உன்னை ஓர் இஸ்லாமியனாகவே வளர்க்கவும் பயிற்றுவிக்கவும் செய்தேன். ஆனால், நீயோ அனைத்தையும் கடந்த அவதார புருஷன்.

    சீரடி சாயி பாபா


    உன்னால் இன, மொழி, மத பேதங்கள் காணாமல் போய், இந்த உலகத்தில் மனிதநேயம் தழைத்துச் செழிக்கப் போகிறது. நீ என்னை விட்டுப் பிரியப்போகும் நேரம் வந்துவிட்டது. அதுபற்றி நீ கவலைப்படாமல், உன்னுடைய புனிதப் பயணத்தை இன்றே தொடங்கு! இங்கிருந்து மேற்கு திசைக்குச் செல். புனிதமான கோதாவரி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஓர் அழகிய கிராமம் உன்னுடைய வருகைக்காகத் தவம் இருக்கிறது.

    மேலும் படிக்க... பிரம்ம மூகூர்த்தத்தின் ரகசியம் தெரியுமா?

    நீ அங்கிருந்தபடியே இந்த உலகத்தை உன் வசப்படுத்திவிடுவாய். உன்னால் இந்த உலகம் அடையப்போகும் நன்மைகள் ஏராளம்!’’ என்று கூறி, இளைஞன் சாயிநாதரைத் தம்மிடம் இருந்து பிரிந்துபோக அனுமதி கொடுத்தார்.

    ஷீரடி திருத்தலத்திற்கு சென்ற சாய்பாபா

    குருநாதரின் வார்த்தைகளைக் கேட்டு மிகவும் நெகிழ்ச்சி அடைந்த சாயிநாதர், அவருடைய பாதங்களில் பணிந்து வணங்கி விடைபெற்று, அவர் அந்தரத்தில் நிலைநிறுத்திய செங்கல்லை அவருடைய நினைவாகப் பெற்றுக்கொண்டு, மேற்குத் திசையை நோக்கித் தன்னுடைய நெடிய அருள் பயணத்தைத் தொடர்ந்தார். அந்த இளைஞரின் திருப்பாதங்கள் சென்று சேர்ந்து நிலைபெற்ற திருவிடம்தான் ஷீர்டி திருத்தலம் ஆகும்.

    மேலும் படிக்க... சாய் பாபா டாப் 10 ஹிட்ஸ் பாடல்கள்...

    சாய்பாபாவின் இறப்பு

    இருபதாம் நூற்றாண்டில் இந்தியா முழுவதும் பரவலாக அறியப்பட்ட ‘முதல் அவதாரப் புருஷர்’ எனப் போற்றப்பட்ட சீரடி சாய் பாபா அவர்கள், 1918 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாள் இந்த உலக வாழ்க்கையை விட்டு நீங்கினார். இன்று அவர் இல்லாவிட்டாலும், சீரடியில் அவர் சமாதியான இடம் தற்பொழுது பல்லாயிரக்கணக்கானவர் புனிதமாக வணங்கும் புண்ணியத் தலமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் படிக்க... சீரடி சாய்பாபா கோவில் பற்றி உங்களுக்குத் தெரியாத சில உண்மைகள்..!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: