Home /News /spiritual /

மதுரையில் இஸ்லாமிய கொடியை ஏற்றி திருவிழாவை துவக்கிய இந்துக்கள்.. மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் திருவிழா..

மதுரையில் இஸ்லாமிய கொடியை ஏற்றி திருவிழாவை துவக்கிய இந்துக்கள்.. மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் திருவிழா..

Madurai | மதுரை சிக்கந்தர்சாவடியில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக இஸ்லாமிய கொடியை ஏற்றி திருவிழாவை துவக்கிய இந்துக்கள். மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் விதமாக நடைபெறும் விழா நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

மதுரை சிக்கந்தர் சாவடியில் உள்ள ஸ்ரீமந்தையம்மன் கோவில் சக்தி கரகம் எடுக்கும் விழா 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுகிறது. நேற்று மாலை நடைபெற்ற அந்த விழாவின் கொடியேற்ற நிகழ்வில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இஸ்லாமிய கொடிக்கம்பத்தை ஊர்வலமாக எடுத்து சென்று பின்னர் கோவில் முன்பாக இஸ்லாமிய கொடியை ஏற்றி விழா துவங்கப்பட்டது.

இப்பகுதியில் பல்வேறு மதம் மற்றும் ஜாதியை சேர்ந்தவர்கள் வசிக்கும் நிலையில் அனைவரிடமும் எந்தவித வேற்றுமையும் இல்லாமல் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தி இவ்விழா நடைபெறுகிறது.

மேலும் படிக்க... மலேசிய சிலையைவிட பெரிது.. உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை

விழாவின் சிறப்பாக இஸ்லாமியர்களும் இணைந்து விழாவை கொண்டாடுவதால் இஸ்லாமியர்களை பெருமைப்படுத்தும் விதமாக இஸ்லாமிய கொடியேற்றி விழா துவக்கப்படுவது பண்டைய காலம் தொட்டு நடைமுறையாக இருந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க... மதுரை சித்திரை திருவிழா 2022 : மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் எப்போது ? தேதி, நேரம் குறித்த தகவல்கள்

5 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சக்தி கரகம் எடுப்பது, முளைப்பாரி எடுப்பது என பல்வேறு வேண்டுதல்களை பக்தர்கள் நிறைவேற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது..
Published by:Vaijayanthi S
First published:

Tags: Hindu, Madurai, Muslim

அடுத்த செய்தி