Home /News /spiritual /

இரவு 12 முதல் நண்பகல் 12 மணி வரையில் பிறந்த உங்கள் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் தெரியுமா?

இரவு 12 முதல் நண்பகல் 12 மணி வரையில் பிறந்த உங்கள் குணாதிசயங்கள் எப்படி இருக்கும் தெரியுமா?

இரவு 12 முதல் நண்பகல் 12 மணி வரையில் பிறந்த உங்கள் குணாதிசயங்கள்

இரவு 12 முதல் நண்பகல் 12 மணி வரையில் பிறந்த உங்கள் குணாதிசயங்கள்

TIME Of Your Birth at 12 | இரவு 12 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான நேரத்தில் நீங்கள் எந்த நேரத்தில் பிறந்தீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் குணாதிசயம் அமையுமாம்.

    இரவு 12 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான நேரத்தில் நீங்கள் எந்த நேரத்தில் பிறந்தீர்கள் என்பதைப் பொறுத்து உங்கள் குணாதிசயம் அமையுமாம். இதேபோலதான் ஆண்டும், நேரமும் வைத்து ஜாதகம் கணிக்கப்படுகிறது என்றாலும் அது தனிநபருக்கானது. ஆனால், நேரத்தை மட்டும், பல கால அளவுகளாகப் பிரித்து, அதற்கேற்ப பொதுவான குணாதிசயங்கள் வரையறை செய்யப்பட்டுள்ளன.

    நள்ளிரவு 12 மணி முதல் 12.30 மணி வரையில்

    இதுபோல நள்ளிரவு சமயத்தில் பிறப்பவர்களுக்கு அறிவுத் தேடல் மிக அதிகமாக இருக்குமாம். உலகில் தன்னைச் சுற்றியிலும் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள இவர்கள் விரும்புவார்கள். ஆனால், ஒருபோதும் தான் எந்த அளவுக்கு திறமைசாலி என்பதை பிறரிடம் வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள்.

    பின்னிரவு 2 மணி முதல் 4 மணி வரையில்

    இந்த நேரத்தில் பிறப்பவர்கள் குணத்தில் இனிப்பானவர்களைப் போல இருப்பார்கள். ஆனால், பெரும் வசதியோடு வாழ வேண்டும் என்பது இவர்களது விருப்பமாக இருக்கும். நல்ல வெற்றிகரமான தொழிலதிபர்களாக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். அதே சமயம், வெளியே ஊர் சுற்றுவது, இயற்கையை ரசிப்பது என அலாதியான ரசனையோடு இருப்பார்கள்.

    அதிகாலை 4 மணி முதல் 6 மணி வரையில்

    பெர்சானிலிட்டிக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இவர்கள் இருப்பார்கள். தன்னிம்பிக்கை மிகுந்த இவர்களுக்கு சவால்கள் என்றால் விரும்பி ஏற்பார்களாம். மக்கள் அனைவரும் நம்மை பாராட்ட வேண்டும், அவர்களது கவனத்தை ஈர்க்க வேண்டும் என நினைக்கும் இவர்கள், அதிகாரத்தை பிடிக்க நினைப்பார்களாம்.

    காலை 6 மணி முதல் 8 மணி வரையில்

    பிறப்பிலேயே தலைமைப் பண்புடன் வரும் இவர்கள் எப்போதும் பிறர் மீது ஆதிக்கம் செலுத்த நினைப்பார்களாம். வாழ்க்கையில் கடந்து வந்த எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் அனுபவங்கள் காரணமாக எப்போதுமே வலிமையானவர்களாக இருப்பார்களாம். ஆனால், கோபம் மூக்கிற்கு மேலே வருமாம். ஆகவே, அமைதியை கடைப்பிடிக்க முயற்சிக்க வேண்டும்.

    காலை 8 மணி முதல் 10 மணி வரையில்

    எப்போதுமே தத்துவம் பேசக் கூடிய இவர்கள், ஆழ்மன அமைதியை பெரிதும் விரும்புவார்கள். தன்னைச் சுற்றியுள்ள மக்கள் எதை விரும்புகிறார்கள் என்பது குறித்து கவனம் செலுத்துவார்கள். இயல்பாக நட்புடன் பழகக் கூடிய இவர்கள் அனைத்து தரப்பு மக்களையும் எளிதாக அரவணைத்துச் செல்வார்கள்.

    முற்பகல் 10 மணி முதல் 12 மணி வரையில்

    சுய ஒழுக்கம் மற்றும் மிகுந்த உணர்ச்சி வயப்படக் கூடியவராக இவர்கள் இருப்பார்களாம். தன்னுடைய பலம் எது, பலவீனம் எது என்பதை நன்றாகவே தெரிந்து வைத்திருப்பார்கள். இதனால், இயற்கையாகவே தலைமைத்துவம் இருக்கும். குறிப்பாக, கலைகள் சார்ந்த துறைகளில் அதிக ஆர்வம் கொண்டிருப்பார்கள்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Birthday

    அடுத்த செய்தி