முகப்பு /செய்தி /ஆன்மிகம் / புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது..? கதையும் காரணமும்

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது..? கதையும் காரணமும்

பெருமாள்

பெருமாள்

சைவ தேவதையான புதன் மாதம் என்பதால் அந்த மாதம் முழுதும் சைவ உணவுடன் பெருமாள் வழிபாட்டில் இருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

எந்த மாதமும் இல்லாமல் புரட்டாசி வந்தால் மட்டும் கண்டிப்பாக அசைவத்திற்கு “நோ” சொல்லும் பெரியோர்கள் - அதற்கான கதையும் காரணமும் என்ன?

கதை - ஜோதிட சாஸ்திரத்தில் 6வது ராசியான கன்னி ராசிக்குரிய மாதம் புரட்டாசி. அதற்கு அதிபதி புதன். புதனுக்குரிய தேவதை மகாவிஷ்ணு. சைவ தேவதையான புதன் மாதம் என்பதால் அந்த மாதம் முழுதும் சைவ உணவுடன் பெருமாள் வழிபாட்டில் இருக்க வேண்டும்.

காரணம் - புரட்டாசி மாதம் மழை துவங்கும் மாதம். இதுவரை இருந்த வெப்பம், காற்று குறைந்து மழை ஆரம்பிக்கும் நேரம். இதுநாள் வரை சூடாகி இருந்த பூமி இப்பொழுது, தன்னுள் இருக்கும் சூட்டை மழை பெய்ய வெளியேற்றி கொண்டு உஷ்ணத்தை கிளப்பிவிடும்.

இது தகிக்கும் அக்னி நட்சத்திர வெயிலிலும் கொடியது. அந்நேரத்தில் சூடாகிய மாமிசம் உண்பது உடலுக்குள் பல உபாதைகளுக்கு வழி வகுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், குறைவாக பெய்யும் மழையினால் நோய் தோற்று ஏற்பட்டு சளி, ஜுரம் போன்றவை அதிகரிக்கும்.

Also see... அமாவாசை அன்று வாழைக்காயை கட்டாயம் சமைக்க வேண்டும்... ஏன் தெரியுமா?

தற்போது நாடெங்கும் பெருகி வரும் குழந்தைகளுக்கான காய்ச்சல் இதன் ஒரு பகுதியே, மாறும் காலநிலையால் ஏற்படும் இந்த சிரமத்தை ‘துளசி’ குறைக்கவல்லது. கதையோ காரணமோ ஒரு மாதம் வழக்கமான உணவு பழக்கத்தை மாற்றி தான் பார்க்கலாமே!

- விஷ்ணு நாகராஜன்

First published:

Tags: Meat, Non Vegetarian, Purattasi