முகப்பு /செய்தி /ஆன்மிகம் / இனி திருமணம் செய்ய சுப முகூர்த்தத்தை நீங்களே கணிக்கலாம்.. எப்படி தெரியுமா?

இனி திருமணம் செய்ய சுப முகூர்த்தத்தை நீங்களே கணிக்கலாம்.. எப்படி தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

மணமகனுக்கும் மணமகளுக்கும் உகந்த நட்சத்திரம் கொண்ட முகூர்த்த தினத்தையே தேர்ந்தெடுக்க வேண்டுமா?

  • Last Updated :

பஞ்சாங்கத்தில் ஒரு மாதத்தில் பல முகூர்த்த நாள்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால், மணமகனுக்கும் மணமகளுக்கும் உகந்த நட்சத்திரம் கொண்ட முகூர்த்த தினத்தையே தேர்ந்தெடுக்க வேண்டும்.

பொதுவாக திருமணம் செய்வதற்கு சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை, தை, பங்குனி ஆகிய மாதங்கள் உத்தமம். (சித்திரை, வைகாசி மாதங்களில் கத்தரி, அக்னி நட்சத்திர நாள்களைத் தவிர்ப்பது நல்லது.) புரட்டாசி, ஐப்பசி, மாசி ஆகிய மாதங்கள் மத்திமம். ஆடி, மார்கழி மாதங்களைத் தவிர்க்கவேண்டும்.

கிழமைகள்: புதன், வியாழன், வெள்ளி உத்தமம். ஞாயிறு, திங்கள் மத்திமம். செவ்வாய், சனிக்கிழமைகளைத் தவிர்க்கவும். அதேபோல், திருமண நாளில் அஷ்டமி, நவமி திதிகள் இருக்கக்கூடாது.

நட்சத்திரப் பொருத்தம்: முகூர்த்த நாளுக்கான நட்சத்திரம் மணமகன், மணமகள் இருவரின் நட்சத்திரங்களுக்கும் பொருத்தமான நட்சத்திரமாக இருப்பது அவசியம்.

ஒருவர் பிறந்த நட்சத்திரத்துக்கு

10-வது நட்சத்திரம் வந்தால் கர்மம்;

16-வது நட்சத்திரம் சாங்காதிகம்;

18-வது நட்சத்திரம் சாமுதாயிகம்;

23-வது நட்சத்திரம் வைணாதிகம்;

25-வது நட்சத்திரம் மானசும். இந்த எண்ணிக்கையுள்ள நட்சத்திரம் வரும் நாள்களில் முகூர்த்தம் வைக்கக்கூடாது.

உதாரணமாக மணமகனின் நட்சத்திரம் பரணி என்றால், 10-வது நட்சத்திரம் பூரம். 16-வது நட்சத்திரம் அனுஷம், 18-வது நட்சத்திரம் மூலம், 23-வது நட்சத்திரம் சதயம், 25-வது நட்சத்திரம் உத்திரட்டாதி ஆகும். எனவே திருமணம் நிச்சயிக்கும் நாளில் மேற்கண்ட நட்சத்திரங்கள் இல்லாதபடி பார்த்துக் கொள்ளவேண்டும். இதேபோல் மணமகளின் நட்சத்திரத்துக்கும் பார்க்கவேண்டும்.

தாராபலம்: அடுத்ததாக முகூர்த்த தேதியை நிச்சயிக்கும்போது, தாராபலம் இருக்கிறதா என்பதையும் பார்க்கவேண்டும். எந்த ஒரு சுபகாரியம் செய்யும்போதும் தாரா பலம், சந்திர பலம், வித்யா பலம் உள்ளதா என்று பார்த்து நிச்சயிக்கவேண்டும்.

தாராபலம் என்பதை மிகவும் எளிதாக கணிக்கலாம். தாராபலம் என்பது சுபமுகூர்த்தத்துக்காக பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள நாள்களில் சிலவற்றை தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும். அந்த நாள்களுக்கு உரிய நட்சத்திரத்தையும் குறித்துக்கொள்ள வேண்டும். மணமகன், மணமகள் ஆகியோரின் ஜன்ம நட்சத்திரம் முதல், முகூர்த்த நாளின் நட்சத்திரம் வரை எண்ணவேண்டும். அந்த எண்ணை 9-ஆல் வகுத்து வரும் மீதி எண்ணைக் கொண்டு, அன்றைய தினம் தாராபலம் உள்ளதா என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.

ஜன்ம நட்சத்திரம் முதல் முகூர்த்தம் வைக்கும் நட்சத்திரம் வரையுள்ள எண்ணிக்கை 9-க்குக் குறைவாக இருந்தால், அந்த எண்ணையே மீதியாகக் கொள்ளவேண்டும்.

மீதி வரும் எண்களும் அதற்கு உரிய பலன்களும்:

1. ஜன்ம தாரை - தவிர்க்கவேண்டும்

2. சம்பத் தாரை - முகூர்த்தம் வைக்கலாம்.

3. விபத்து தாரை - தவிர்க்கவேண்டும்.

4. ஹேம தாரை - மிகவும் உத்தமமானது.

5. பிரயுர் தாரை - தவிர்க்கவேண்டும்.

6. சாதக தாரை - சிறப்பானது

7. ரைதன தாரை - முகூர்த்தத்துக்கு ஏற்றது.

8. மைத்தர தாரை - ஏற்றுக்கொள்ளலாம்.

9. பரம மைத்தர தாரை - ஏற்றுக்கொள்ளலாம்.

மேலும் படிக்க... சுப முகூர்த்த நாட்கள் 2021-2022:திருமணம்,நல்ல காரியம் செய்ய உகந்த நாள்

மற்றபடி மணமகன், மணமகள் ஆகியோருக்கு சந்திராஷ்டம் இல்லாத நாளாக இருக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். இவற்றுக்கெல்லாம் முதலாவதாக திருமணப் பொருத்தமும், பையன், பெண் ஆகியோரின் மனப் பொருத்தத்தையும் பார்க்கவேண்டியது அவசியம்.

top videos

    மேலும் படிக்க... உங்கள் குணாதிசயங்களைச் சொல்லும் பிறந்த நாள்... உங்களை பற்றி தெரிஞ்சுக்கோங்க..

    First published:

    Tags: Temple