தீராத நோயால் அவதிப்படும் தன் கணவர் குணமாக வேண்டும் என்று வேண்டாத பெண்கள் கிடையாது. அப்படி இங்கே இறைவன் மற்றும் இறைவியிடம் வேண்டிக்கொள்ளும் பெண்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. இவ்வகையில் தன் மனம் குளிர வைத்த தெய்வத்திற்கு தங்களால் முடிந்த வகையில் நன்றிக் கடனைச் செலுத்துவர்.
அல்லது பிரார்த்தனை செய்து கொண்டபடி வேண்டுதலை நிறைவேற்றுவர். இப்படி தங்கள் கணவர் குணமானபின் தான் வேண்டியபடி தன் கழுத்தில் உள்ள மாங்கல்ய கயிற்றில் உள்ள தாலியையே கழற்றி உண்டியலில் போட்டு நன்றிக் கடன் செலுத்தும் பெண்களும் இருக்கிறார்கள். ஆம் திருப்பதி உண்டியலில் தாலியை போடுகிறேன் என்று வேண்டிக்கொள்ளும் பெண் பக்தர்கள் இப்படித்தான் தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.
ஆனால் இது சரியானதா அல்லது தவறானதா என்று ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒளிமயமான எதிர்காலம் நிகழ்ச்சி புகழ் பிரபல ஜோதிடர் ஹரிகேசநல்லூர் வெங்கட்ராமன் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் படிக்க... சுப முகூர்த்த நாட்கள் 2021-2022:திருமணம்,நல்ல காரியம் செய்ய உகந்த நாள்
அவர் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் தெரிவித்திருப்பதாவது: “ என்னிடம் ஜோதிடம் பார்க்க வந்த பெண், ஒருசந்தேகத்தை கேட்டாங்க. அது எனக்கு மிகவும் அதர்ச்சியாகவும் பகிர் என்றும் இருந்தது. திருமாங்கல்யத்தை கழட்டி சாமி உண்டியலில் போடலாமா ? அது சரியா? என்று கேட்டங்க. அந்த தாலிக்கு பதிலாக வேறு ஒரு தாலியை கட்டிக்கொண்டு இந்த தாலியை சாமி உண்டியலில் போடலாம் என சிலர் கூறியதாக அந்த பெண் என்னிடம் கூறின்னார். மேலும் இதுபோல இதுவரை தான் 6 முறை அப்படி போட்டுள்ளேன் என்றும் அந்த பெண் என்னிடம் தெரிவித்தார். அதற்கு அது நான் இது முற்றிலும் தவறு. அப்படி செய்யக் கூடாது. கணவன் உயிருடன் அருகிலேயே இருக்கும் போது அந்த தாலியை கழட்ட க்கூடாது. அது திருமாங்கல்யம். திருமணத்தன்று கட்டினால் கடைசி வரைக்கும் அப்படியே இருக்க வேண்டும்.
இதுபோல உண்டியலில் போட வேண்டும் என்று சாமி கேட்கவில்லை. அதனால் அப்படி போட வேண்டும் என்று அவசியமும் இல்லை. திருமாங்கல்யம் என்பது மங்களகரமானது. அதனால் அதனைக் கழட்டக் கூடாது. அப்படி இதுவரை வேண்டி இருந்தால் பரவாயில்லை போட்டுவிடுங்கள். ஆனால் இனிமேல் இப்படி ஒரு வேண்டுதலை வைக்காதீர்கள். ஏனால் அது அவசியமில்லை.
ஏனால் ஒவருடைய ஜாதகத்தில் சனி, ராகு, கேது 8ஆம் இடத்தில் உள்ளது. ஆனால் அவருக்கு எந்த பிரச்சனையும் இல்லாம் வாழ்வில் நன்றாகதான் உள்ளார். அந்த பெண்ணுக்கு 8ஆம் இடத்தில் இப்படி ராகு, கேது உள்ளது என்று ஒரு ஜோதிடரிடம் சென்று கேட்டுள்ளார். அதற்கு அவர், மாங்கல்யம் தோஷம் உள்ளது என்று தாலியை கழட்டி உண்டியலில் போட்டுவிடுங்கள் என கூறியுள்ளார். ஆனால் என்னுடைய கருத்து என்னவென்றால், அது மிகவும் மங்களகரமானது அதனை கழட்டக் கூடாது. அது தொடர்ந்து கழுத்திலேயே இருக்க வேண்டும். சிலர் குளிக்கும் போதும் தூங்கும் போது கழட்டி விடுவார்காளாம் அது மிகவும் தவறு.
திருமாங்கல்யத்தை உண்டியலில் போட்டால் கணவர் உடல் நலம் பெறுவார் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இனிமேல் அப்படி யாரும் வேண்டிக்கொள்ள வேண்டாம். அப்படி இதுவரை வேண்டியிருந்தால் பரவாயில்லை வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு விடுங்கள்” என்று கூறினார்.
வீடியோ
மேலும் படிக்க... இனி திருமணம் செய்ய சுப முகூர்த்தத்தை நீங்களே கணிக்கலாம்..
உங்கள் குணாதிசயங்களைச் சொல்லும் பிறந்த நாள்... உங்களை பற்றி தெரிஞ்சுக்கோங்க..
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.