ஒவ்வொரு நட்சத்திரம் மற்றும் ஒவ்வொரு ராசிக்கும் அதற்குரிய எழுத்துக்கள் இருக்கின்றன. அந்த எழுத்துக்களை, முதலெழுத்தாக ஓசையாக வருமாறு பெயர் வைப்பது காலம் காலமாக இருந்து வரும் பழக்கங்களில் ஒன்று. அதேபோல பிறந்த தேதியின் அடிப்படையில் நியூமராலஜிக்கு ஏற்றார்போல பெயர் சூட்டும் பழக்கமும் அதிகரித்து வருகிறது.
ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும், அதற்குரிய தன்மைகளும் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, அதைச் சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்று குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் பல விஷயங்கள் இருக்கின்றன.
H என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களுக்கு என்று தனிப்பட்ட சில குணங்கள் இருக்கும். அதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.
H என்ற எழுத்தை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்களின் குணாதிசியங்கள் மற்றும் பலம்.
H என்ற எழுத்தை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள் இயல்பாகவே வேகமாக பேசும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் மின்னல் போன்ற யோசிக்கும் ஆற்றல் கொண்டவர்கள். அவர்கள் செய்யும் செயலிலும் வேகத்தை காட்டுவார்கள். பிறர் யோசிக்கும் விஷயத்தைக் கூட முன்கூட்டியே உணர்ந்து பதில் சொல்லக்கூடிய திறமை இவர்களுக்கு உண்டு. இவர்கள் சுலபமாக பிறருடன் பழகும் சுபாவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். மனதில் என்ன நினைக்கிறார்களோ அதை பிறரிடம் சொல்லும் தைரியம் உடையவர்கள். எவ்வளவு கடினமான வேலையாக இருந்தாலும் சரி தயங்காமல் தைரியமாக செய்யும் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள்.
யாராலும் செய்யமுடியாத வேலையை கூட நான் செய்து காட்டுகிறேன் என்று சொல்வார்கள். இது இவர்களுடைய சிறந்த அம்சமாகும். பழமையை விட புதிய புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும் என்று ஆசை படுவார்கள். எந்த துறையில் இருந்தாலும் அந்த துறையின் நுணுக்கத்தையும் அதை அவர்கள் எப்படி செய்கிறார்கள் என்ற கவனிப்பு திறனும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இன்று செய்ய வேண்டிய வேலையை இன்றே முடிக்க வேண்டுமென்று செய்து முடிப்பார்கள்.
நாளை என்று தள்ளிப்போடும் பழக்கம் இவர்களிடம் இருக்காது. பிறருக்கு உதவி செய்யும் குணம் அதிகம் உண்டு. வெற்றி தோல்வி பற்றி எல்லாம் சிறிது நேரம் தான் இவர்கள் மனதில் வைத்துக் கொள்வார்கள். அதை பற்றி பெரிதாக கவலைப்பட மாட்டார்கள். அடுத்தது என்ன செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். எந்த விஷயத்திலும் குறிக்கோள், விடாமுயற்சி கொண்டு சாதிக்க நினைப்பார்கள். இவர்கள் எப்பொழுதுமே உற்சாகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கக் கூடியவர்கள். தன்னம்பிக்கை உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் எந்த தொழில் செய்தாலும் வெற்றி பெறுவார்கள்.
* புதுமையை விரும்புவார்கள்.
* நுணுக்கங்களை எளிதில் கற்பார்கள்
* பிறருக்கு உதவும் குணம்
* வேலையை ஒத்தி போட மாட்டார்கள்
* உற்சாகம் நிறைந்தவர்கள்
* வெற்றி தோல்வி பற்றி கவலைப்பட மாட்டார்கள்
* குறிக்கோள், விடாமுயற்சி உடையவர்கள்
* தன்னம்பிக்கை கொண்டவர்கள்.
* கற்பனை சக்தி அதிகம்
H என்ற எழுத்து முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்களின் பலவீனங்கள்
இவர்களுக்கு கோவம் அதிகமாக வரும். இதுவே இவர்களுக்கு பெரிய மைனஸ் பாயிண்ட்டாக இருக்கும். இதனால் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும். பணத்துக்காக அவர்கள் விருப்பம் இல்லாத இடத்தில் வேலை செய்ய மாட்டார்கள். அவர்கள் மனதில் என்ன நினைக்கிறார்களோ அதை தான் செய்வார்கள். அது தான் சரி என்றும் சொல்வார்கள். பண விவகாரத்தில் எந்த கவலையும் இல்லாமல் செலவு செய்வார்கள்.
எண் கணித ஜோதிடத்தில் சனியின் ஆதிக்கம் பெற்ற H எழுத்து
எண் கணித ஜோதிடத்தில் ஜாதகத்தில் H என்ற எழுத்து 8 ஆம் எண்ணைக் குறிக்கும். இது கடின உழைப்பு, மர்மம், மறைவு, அதிர்ஷ்டம், திடீர் உயர்வு, இழப்பு, ஆகியவற்றை குறிக்கும் எண் ஆகும். அதே போல், எண் எட்டு என்பது சனியைக் குறிக்கும் எண்ணாகும். எனவே சனியின் குணங்களும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும்.
Also Read : A என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!
Also Read : B என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!
Also Read : C என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!
Also Read : D என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!
Also Read : E என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!
Also Read : G என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படி தான் இருப்பார்கள்!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News