வரம் தரும் வரலட்சுமி விரதம்!

வரலட்சுமி விரதம் என்பது அஷ்டலட்சுமிகளுக்கும் உரியது. இதை செய்வதன் மூலம் எல்லாவித பாக்கியங்களும் உண்டாகும். அத்துடன் வரம் கொடுக்கும் மகாலட்சுமியின் அம்சம் பரிபூரணமாக நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

Web Desk | news18
Updated: August 9, 2019, 1:14 PM IST
வரம் தரும் வரலட்சுமி விரதம்!
வரம் தரும் வரலட்சுமி விரதம்!
Web Desk | news18
Updated: August 9, 2019, 1:14 PM IST
”யாதேவி சர்வ பூதேஷு மாத்ரு ரூபேண சம்ஸ்திதா நமஸ் தஸ்யை நமஸ் தஸ்யை நமோ நம நம்முடைய வாழ்விலே” என்று மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக நிறைந்திருக்கட்டும் என்பதன் பொருள்தான் இந்த ஸ்லோகம். மகாலட்சுமிக்காக இருக்கக்கூடிய ஒரு விரதம்தான் வரலட்சுமி விரதம். இந்த விரதம் மிக பழமையான ஒரு விரதமாகும். ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் கடைசி வெள்ளிக்கும் முந்தின வெள்ளி அன்று வரலட்சுமி விரதம் கொண்டாடப்படுகிறது.

இது முழுக்க முழுக்கப் பெண்களால் செய்யப்படக்கூடிய விரதம். பொதுவாக வரலட்சுமி விரதத்தை நமது வீட்டின் பூஜை அறையிலோ அல்லது நமது வீட்டினுடைய ஈசானி மூலையிலோ செய்யலாம். பசும் சாணம் போட்டு மெழுகி தயாராக வைத்துள்ள ஒரு பீடத்தை பூஜை செய்யக் கூடிய இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

அதன் பின்னர் அந்த இடத்தில் சுக்கிர ஹோரையில் சுக்கிர ஹோரை என்றால் காலை 6 மணியில் இருந்து 7 மணிக்குள் மகாலட்சுமி அம்பாளை அந்த இடத்தில் வைத்து சந்தனம் தடவி பூஜை செய்வது வழக்கம். மேலும் அதன் அருகில் ஐந்து முக விளக்கில் பஞ்ச எண்ணெய் ஊற்றி பஞ்ச முக தீபம் ஏற்ற வேண்டும். அருகில் நெல் பரப்பி அதன்மேல் ஒரு வாழை இலையை வடக்கு நுனியாக பரப்பி அதில் பச்சரிசி போட்டு அதன் மேல் ஒரு கலசம் வைக்க வேண்டும்.


கலசத்தில் புனித நீர் ஊற்ற வேண்டும். அதில் வாசனை திரவியங்களான ஜாதிக்காய், ஜாதிப்பத்திரி ஏலக்காய்,  பச்சை கற்பூரம், ரோஜா மொக்கு, ஜவ்வாது இவைகளை சேர்க்க வேண்டும். அதன் மேல் மாவிலை கொத்து வைத்து நல்ல தேங்காயை எடுத்து மஞ்சள் தடவி அதை அந்த கலசத்தின் மீது வைக்க வேண்டும்.

முதலில் குலதெய்வத்தையும் நமது இஷ்ட தெய்வத்தையும் நமது கிராம தெய்வத்தையும் வணங்க வேண்டும்.  அதன்பின்னர் மஞ்சள் பிள்ளையார் பிடித்து விநாயகர் பூஜை செய்து இந்த வரலெட்சுமி பூஜையை தொடங்க வேண்டும்.

இந்த பூஜையின் போது மஞ்சள் சரடு வைத்து வணங்க வேண்டும். அப்படி வணங்குவதற்கு பெயர்தான் நோன்பு. இந்த நோன்பை கடைப்பிடிக்கும் பெண்கள் காலை உணவு அருந்தக்கூடாது.

Loading...

காலையில் பூஜை ஆரம்பித்ததும் முதலில் மகா கணபதி பூஜையை செய்ய வேண்டும். அதன் பிறகு மகாலட்சுமி அஷ்டோத்திரம் 108 படிக்க வேண்டும். அதன்பிறகு மகாலட்சுமிக்கு அன்னம், பருப்பு பாயசம், வடை, பானகம் நெய்வேத்தியம் செய்து பூஜையை முடிக்க வேண்டும்.

பூஜை முடிந்த பிறகு அந்த நோன்புச் சரடை திருமணமான பெண்கள் என்றால் அவர்களுடைய கணவர்கள் கையால் கட்டிக்கொள்ள வேண்டும்.  திருமணமாகாதவர்கள் தாங்களே கட்டிக் கொள்ள வேண்டும்.

இந்த பூஜை செய்வதன் மூலம் திருமணத்தடை இருப்பவர்களுக்கு தடை நீங்கி திருமணம் சீக்கிரம் நடைபெறும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை செல்வம் கிடைக்கும். வீடு மனை வாகன பிராப்தி வேண்டிக் கொள்பவர்களுக்கு நிச்சயமாக கிடைக்கும்.

இந்த வரலட்சுமி விரதம் என்பது அஷ்டலட்சுமிகளுக்கும் உரியது. இதை செய்வதன் மூலம் எல்லாவித பாக்கியங்களும் உண்டாகும். அத்துடன் வரம் கொடுக்கும் மகாலட்சுமியின் அம்சம் பரிபூரணமாக நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.

தனம் தரும் கல்வி தரும் ஒரு நாளும் தளர்வு

அறியா
மனம் தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில்


வஞ்சம் இல்லா

இனம் தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர்

என்பவர்க்கே க்னம் தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே

என்ற அபிராமி அந்தாதியில் பாடலுக்கு ஏற்ப எல்லாவிதமான செல்வங்களும் தரும் இந்த வரலெட்சுமி விரதம்.

  • பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


மேலும் படிக்க.... அத்திவரதர் : அலைமோதும் கூட்டம் - கடைசிநாள் தரிசனம்

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 9, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...