Home /News /spiritual /

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன கேரள அரசு!

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ் சொன்ன கேரள அரசு!

ஐயப்ப பக்தர்கள்

ஐயப்ப பக்தர்கள்

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் பம்பையில் புனித நீராடுவதற்கு கேரள அரசு அனுமதி அளித்துள்ளது.

    சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்காக வரும் பக்தர்கள் புனித நீராடலாம் என கேரள அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்படி, இன்று (டிசம்பர் 12) முதல் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் புனித நீராடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    சபரிமலை யாத்திரை சீசன் நவம்பர் 16ஆம் தேதி  தொடங்கியது. இரண்டு மாதங்களுக்கு நீடிக்கும் இந்த சீசன் ஜனவரி மாதம் மூன்றாவது வாரத்தில் முடிவடையும். இதில் டிசம்பர் கடைசி வாரத்தில் மட்டும் சிறு இடைவெளி இருக்கும். சீசன் தொடங்கி இத்தனை நாட்களாக பக்தர்கள் புனிதநீராடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் பக்தர்களால் புனித நீராட முடியவில்லை.

    இந்நிலையில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்று முதல் பம்பையில் புனித நீராடலாம் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் சன்னிதானத்திற்கு பாரம்பரிய பாதையான நீலிமலை, அப்பாச்சி மேடு வழியாக செல்லலாம் என்றும் தேவசம்போர்டு  அறிவித்துள்ளது.

    இதற்காக இந்த பாதையில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. அப்பாச்சி மேட்டில் சிகிச்சை மையமும் தொடங்கப்பட்டு உள்ளது. இதுபோல பம்பையில் பக்தர்கள் குளிக்கவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல அவர்கள் ஆற்றில் பலிதர்ப்பணம் செய்யவும் அனுமதிக்கப்படுவார்கள். ஆற்றில் ஏற்படும் வெள்ளப் பெருக்கை கண்காணித்து பக்தர்கள் குளிப்பது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் முடிவு செய்யும்.

    சபரிமலை சன்னிதானம் செல்லும் பக்தர்கள் அங்கு இரவு நேரத்தில் தங்கவும் அனுமதி வழங்கப்படுகிறது. இதற்காக அங்கு 500 அறைகள் தயார் செய்யப்பட்டு உள்ளன.அந்த அறைகளில் அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பக்தர்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகள் படி அறைகளில் தங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் படிக்க... வைகுண்ட ஏகாதசி: 10 நாட்கள் திருமலையில் சொர்க்க வாசல் திறப்பு
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sabarimalai Ayyappan temple

    அடுத்த செய்தி