Home /News /spiritual /

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்... தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்... தேவஸ்தானம் சூப்பர் அறிவிப்பு

சபரிமலை

சபரிமலை

சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
சபரிமலையில் ஐயப்ப பக்தர்களுக்கு இனி முதல் இ-சேவை மூலம் காணிக்கை செலுத்த வசதி ஏற்படுத்தி திருவிதாங்கூர் தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

இந்த சேவை தேவசம் போர்டு தனலக்ஷ்மி வங்கியுடன் இணைந்து சபரிமலையில் வரும் பக்தர்கள் இனி மேல் இ-சேவை மூலமாக காணிக்கை செலுத்த வசதி செய்துள்ளன. இதன் படி கூகுள் பே வழியாக இனி பக்தர்கள் காணிக்கை செலுத்த முடியும்.

பக்தர்களுக்கு காணிக்கை செலுத்த சன்னிதானம், நிலக்கல், ஆகிய இடங்களில் QR  code போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. சன்னிதானம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 இடங்கில் QR  code போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பக்தர்களுக்கு 9495999919 என்ற எண் மூலம் கூகுள் பே (google pay) வழியாக காணிக்கை செலுத்த முடியும். இதே போல சபரிமலைக்கு செல்லும் பாதைகளில் பல்வேறு இடங்களில் காணிக்கை செலுத்த  QR Code போர்டு வைக்க நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக சபரிமலை செயல் அலுவலர் கிருஷ்ண குமார வாரியர் தெரிவித்தார். இந்த இ-காணிக்கை வசதி பக்தர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.

சபரிமலையில் கூடுதல் தளர்வுகள் ஏற்படுத்தி கேரளா அரசு அறிவிப்பு

5 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு முன் பதிவு தேவை இல்லை.
18 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்கள் பள்ளி கல்லூரி அடையாள அட்டைகள் மூலம் ஆன்லைன் முன்பதிவு செய்யலாம்.

10 வயதிற்கு கீழ் உள்ள சிறுவர்களுக்கு RTPCR சோதனை சான்றிதழ் தேவை இல்லை. மற்றவர்கள் 72 மணிநேரத்துக்குள் RTPCR சோதனை செய்த நெகட்டிவ் சான்றிதழ் அல்லது இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்ட சான்றிதழ் கட்டாயம்.

ஆன்லைன் முன்பதிவு செய்யும்போது அதனுடன் அப்பம், அரவணை , போன்ற பிரசாரமும் முன் பதிவு செய்யலாம்.

Also read: சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு!
Published by:Esakki Raja
First published:

Tags: Sabarimala, Sabarimala Ayyappan

அடுத்த செய்தி