• HOME
  • »
  • NEWS
  • »
  • spiritual
  • »
  • அனுமனுக்கு உகந்த வழிபாட்டு தினங்கள் என்னென்ன?

அனுமனுக்கு உகந்த வழிபாட்டு தினங்கள் என்னென்ன?

வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும். கிரக தோஷமுள்ளவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று வழிபட்டால் சனியின் பிடியிலிருந்து நம்மை காப்பாற்றுவார்.

  • Share this:
    ஆஞ்சநேயரை வழிபட்டால் சிவனையும் பெருமாளையும் சேர்த்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும். வியாழக்கிழமையும், சனிக்கிழமையும் அனுமனுக்கு முக்கிய வழிபாட்டு தினங்கள் ஆகும்.

    அனுமனுக்கு வெண்ணெய் காப்பை சார்த்தி வழிபடுவதனால் கஷ்டங்களும் வெண்ணெய் உருகுவது போல் உருகி விடும். தாம்பூலம் என்னும் வெற்றிலையை மாலையாக கட்டி அணிவித்து சனிக்கிழமை அனுமத் கவசம் படித்தால் சத்ரு பயம் நீங்கி நலம் பெறலாம்.

    அனுமனுக்கு திராட்சைப்பழம் பிரியமான நிவேதனப் பொருள். வெற்றி கிடைத்திட திராட்சைப் பழம் படைத்து வழிபட வேண்டும். அனுமனுக்கு செந்தூரம் பூசி, வடை மாலையோடு, ஸ்ரீராமஜெயம் எழுதிய காகித மாலையும் அணிவித்து அனுமனின் அருள் பெறலாம்.

    அனுமனுக்கு துளசி மாலை சார்த்தி வழிபட்டால், சனீஸ்வரனின் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம். அனுமனை வணங்குவதால் புத்தி, பலம், புகழ், அஞ்சா நெஞ்சம், ஆரோக்கியம் ஆகியவற்றை பெறலாம்.

    திருமணத்தடை நீங்க அனுமனுக்கு வியாழன் அன்று வெற்றிலை மாலை சார்த்தி வழிபட வேண்டும். புதியதாக துவங்கிய  வேலைகளில் தடை நீங்க வியாழன், சனிக்கிழமைகளில் எலுமிச்சை மற்றும் வடைமாலை சார்த்தி வழிபடலாம்.

    விரதம் இருந்து அனுமன் வாலில் ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் சந்தனமும், அதன்மேல் குங்குமமும் வைத்து ஒரு மண்டலம் வழிபாடு செய்து வரவேண்டும். பறந்து செல்லும் அனுமன் படத்தை வாங்கி, விரதம் இருந்து அதன் வால்பகுதியில் ஒரு மண்டல காலம் பொட்டு வைத்து அனுமன் கவசம் பாடி வழிபட்டால் திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும்.

    தடைகள் அகலும். குடும்பப் பிரச்சினைகள் அகலும். அனுமனுக்கு வாலில் பலம். முருகனுக்கு வேலில் பலம். யோகபலம் பெற்ற நாளில் பொட்டு வைக்கத் தொடங்க வேண்டும். வாலில் பொட்டு வைத்தால், நம் வாழ்க்கைப் பிரச்சினை தீரும் என்பதை அனுபவத்தில் கண்டு கொள்வீர்கள். வாலின் சக்தியை இலங்கையில் காண்பித்தவர் அனுமன். அவரது வாலில் கீழிருந்து மேலாக பொட்டு வைத்தால் தான் வெற்றிகிட்டும்.

    ஒருமுறை ராமபிரானுக்கே, அனுமன் தனது வாலை சுற்றி வைத்து கோட்டை போல எழுப்பி, பாதுபாப்பு அளித்ததாக புராணங்கள் சொல்கின்றன. அனுமனின் பலம் அனைத்தும் வாலில் இருப்பதாக ஐதீகம். எனவே அந்த வாலைத் தொட்டு வழிபட்டால் நாளும் நன்மை கிடைக்கும்.

    மேலும் படிக்க... திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவித்த முக்கிய செய்தி...

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: