Home /News /spiritual /

நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி... அனுமனை வணங்கினால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா?

நாளை ஆஞ்சநேயர் ஜெயந்தி... அனுமனை வணங்கினால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்னென்ன தெரியுமா?

Hanuman Jayanti 2022 |  ராம பக்த அனுமன் என்று சொன்னால் அகம் குளிர்ந்து போவாராம் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் பிறந்தநாள் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. அத்தகைய அஞ்சநேயருக்கு நாளை பிறந்த நாள்.

மேலும் படிக்கவும் ...
    அனுமனை வழிபட்டால் காரியங்கள் அனைத்தும் கைகூடும் என்பது ஐதீகம். அனுமன், ஆஞ்சநேயர், ராமதூதன், அஞ்சனை மைந்தன் என்று பல திருநாமங்கள் கொண்டிருந்தாலும் ராம பக்த அனுமன் என்று சொன்னால் அகம் குளிர்ந்து போவாராம் ஆஞ்சநேயர். ஆஞ்சநேயர் பிறந்தநாள் மார்கழி மாதம் அமாவாசை மூலம் நக்ஷத்திரத்தில் அவதரித்தவர். இவரது பெருமை ராமாயணத்தில் மட்டுமில்லை, பல புராணங்களிலும் உண்டு. அத்தகைய அஞ்சநேயருக்கு நாளை பிறந்த நாள். அதாவது மார்கழி அமாவாசையும், மூல நட்சத்திரமும் சேர்ந்து வருவதால் நாளை அனுமன் ஜெயந்தி தமிழ்நாட்டில் கொண்டாடப்படுகிறது.

    அனுமன் வைணவத்தில் ராம பக்தனாகவும், சைவத்தில் சிவனின் அம்சமாகவும் இருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. எந்த இன்னலையும் எதிர்நோக்கும் அறிவையும், பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கிறவர் அனுமன். "ராமா" என சொல்லுகின்ற இடத்தில் எல்லாம் ஆஞ்சநேயர் இருப்பது நிச்சயம்.

    இவரது வழிபாட்டில் ராமநாம பஜனையும், செந்தூரப் பூச்சும், வெற்றிலை மாலையும் நிச்சயம் இடம் பெறும். இவரது சன்னதியிலும் துளசியே பிரதான பிரசாதம். பாரத புண்ணிய பூமியில் தொண்டரையே தெய்வமாக போற்றப்படும் மேன்மையை ஆஞ்சநேயர் வரலாற்றில் காணலாம்.

    அனுமனை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்

    அனுமன் ஜெயந்தியை நாம் கொண்டாடுவதால் நமக்கு சகல மங்கலங்களும் உண்டாகும், நினைத்த காரியம் கைகூடும், துன்பம் விலகும், குடும்பத்தில் இன்பம் பெருகும். ஆஞ்சநேயரை ராமநாமத்தால் சேவிப்பதோடு, வடைமாலை சாத்தி, வெற்றிலை மாலை அணிவித்து, வெண்ணெய் சார்த்தி, ஆராதிக்க வேண்டும்.

    மேலும் படிக்க... பயம் நீங்கி பலம் தரும் ஆஞ்சநேயர்!

    சனிக்கிழமை தோறும் விரதமிருந்து ஆஞ்சநேயரை வழிபட்டால், சகல யோகங்களும் நமக்கு வந்து சேரும். விரதமிருக்கும் நாட்களில் மிகச் சுத்தமாக இருக்க வேண்டும். அனுமனை முழுமையாகத் தியானித்து ஒருவேளை உணவு மட்டும் உண்டால், உன்னத பலன் கிடைக்கும்.

    மேலும் படிக்க... Hanuman Jayanti 2022 | அனுமன் ஜெயந்தி எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்..

    அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று ஆஞ்சநேயருக்கு வடை மாலை அணிவத்து வழிபட்டால் தடைகள் அகலும். வெற்றிலை மாலையை அணிவிப்பவர்கள் தங்கள் கோரிக்கைக்கு ஏற்ப, தாராபலம் பெற்ற நாளில் அணிவித்தால் ஏராளமான நற்பலன்களை அடையலாம். அவல், பொரி, கடலை, கற்கண்டு, வாழைப்பழம் போன்றவை அனுமனுக்குரிய நைவேத்தியங்கள்.

    மேலும் படிக்க... அனுமனுக்கு உகந்த வழிபாட்டு தினங்கள் என்னென்ன?

    வைஷ்ணவக் கோயில்களில், ஆஞ்சநேயருக்கு சந்நிதி அமைக்கப்பட்டிருக்கும். அதேபோல், ஆஞ்சநேயருக்கு இந்தியா முழுவதிலும் தனிக்கோயில்களும் உள்ளன. நாமக்கல் ஆஞ்சநேயர், சென்னை நங்கநல்லூர் ஆஞ்சநேயர், திருச்சி கல்லுக்குழி ஆஞ்சநேயர்,சுசீந்திரம் அனுமன், சென்னை ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் என பல தலங்களில் அனுமன் சக்தியும் சாந்நித்தியமும் கொண்டு அருள்பாலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது....

    மேலும் படிக்க... ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா : இவர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்... உதவி ஆணையர் தகவல்...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Temple

    அடுத்த செய்தி