• HOME
 • »
 • NEWS
 • »
 • spiritual
 • »
 • குரு பகவானின் பயோடேட்டா குறித்து உங்களுக்கு தெரியுமா?

குரு பகவானின் பயோடேட்டா குறித்து உங்களுக்கு தெரியுமா?

குரு பகவான்

குரு பகவான்

எந்த ஒரு ஜாதகத்திலும் குருவின் இருப்பு மிக மிக முக்கியம். இதை வைத்துதான் குல தெய்வ அனுக்ரஹம் - முன்னோர்கள் ஆசீர்வாதம் ஆகியவற்றை கணிக்க முடியும்.

 • Share this:
  குரு பார்வை கோடி நன்மை என்பார்கள். அத்தகைய குரு பகவானின் முழு பயோடேட்டாவை பற்றி தெரிந்திக் கொள்ளலாம் வாங்க...

  குரு பயோடேட்டா:

  சொந்த வீடு - தனுசு, மீனம்

  உச்சராசி - கடகம்

  நீச்சராசி - மகரம்

  திசை - வடக்கு

  அதிதேவதை - பிரம்மா

  நிறம் - மஞ்சள்

  வாகனம் - யானை

  தானியம் - கொண்டைக்கடலை

  மலர் - வெண்முல்லை

  வஸ்திரம் - மஞ்சள்நிற ஆடை

  ரத்தினம் - புஷ்பராகம்

  நிவேதனம் - கடலைப்பொடி சாதம்

  உலோகம் - தங்கம்

  இனம் - ஆண்

  உறுப்பு - தசை

  நட்புகிரகம் - சூரியன், சந்திரன், செவ்வாய்

  பகைகிரகம் - புதன், சுக்கிரன்

  மனைவி - தாரை

  பிள்ளைகள் - பரத்வாஜர், கசன்

  பிரதானதலங்கள் - ஆலங்குடி(திருவாரூர்), திருச்செந்தூர்

  தகுதி -தேவகுரு

  குரு காயத்ரீ மந்திரம்

   ஓம் பிரஹஸ்பதீச வித்மஹே சுராசார்யாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

  ஓம் வ்ருஷபத்வஜாய வித்மஹே க்ருணீ ஹஸ்தாய தீமஹி தந்நோ குரு ப்ரசோதயாத்.

   குரு ஸ்லோகம்

  தேவனாம்ச ரிஷீணாம்ச குரும் காஞ்சன ஸந்நிபம்

  பக்தி பூதம் த்ரிலோகேசம் தம் நமாமி ப்ருஹஸ்பதிம்.

  மேலும் படிக்க... குரு பெயர்ச்சி 2021: பொருளாதாரம், வானிலை, அரசியல் குறித்த பொதுபலன்கள்!

  குருவால் ஏற்படும் பாக்கியங்கள்:

  பக்தி, சிரத்தை, வழிபாடு, புனித சிந்தனை, யாத்திரை, நல்லொழுக்கத்தைக் கடைபிடித்தல் போன்ற விஷயங்கள் குரு பலத்தால் பெறக் கூடியதாகும். ஒருவர் பெரிய மத குருவாக இருக்கிறார் என்றால் அவருக்கு குரு நல்ல பலம் பெற்றிருக்கிறார் என்று பொருள்.

  ஒழுக்கசீலராக இருப்பவர்களின் ஜாதகத்தில் குரு பலம் பெற்றிருப்பார். உலகத்தார் அனைவரும் ஒருவரை மதிக்கிறார்கள் என்றாலும் அவரின் ஜெனன கால ஜாதகத்தில் குரு பலம் நிறைந்திருக்கிறது என பொருள்.

  அரிய சாதனைகளை செய்வதற்கு குரு பலமே பிரதானமாக இருக்கிறது. வேத சாஸ்திரம், விஞ்ஞானம் ஆகியவற்றில்  புகழ் அடைவதற்கு மூலபலம் குருபலம்தான்.

  குருவின் பலம்:

  எந்த ஒரு ஜாதகத்திலும் குருவின் இருப்பு மிக மிக முக்கியம். இதை வைத்துதான் குல தெய்வ அனுக்ரஹம் - முன்னோர்கள் ஆசீர்வாதம் ஆகியவற்றை கணிக்க முடியும். குரு திரிகோணத்தில் இருந்தால் பெரிய பலம் என்றும், கேந்திரத்தில் இருந்தால் மத்திம பலம் என்றும், மறைவுஸ்தானத்தில் இருந்தால் அதம பலம் என்றும் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சார பலம் மிக முக்கியம்.

  மேலும் படிக்க... குரு பகவானின் வியாழக்கிழமை விரதமும் பலன்களும்

  குரு பெயர்ச்சி 2021 | ராஜயோகத்தை பெறபோகும் ராசிகாரர்கள் யார் தெரியுமா?

  குரு பெயர்ச்சி 2021: குரு பெயர்ச்சியின் இறுதி நிலையில் இந்த ராசியினர் பலவித பலன்களை பெறுவர்..

  குரு பெயர்ச்சி 2021 : இந்த ராசிகாரருக்கு இனி ராஜயோகம் தான்!           

  குரு பெயர்ச்சி பலன்கள் 2021: 12 ராசிகளுக்கான பொது பலன்கள்

  அதிசார குரு பெயர்ச்சி காலம் எவ்வளவு? யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்..

  குரு, சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் 2021 - கும்ப ராசியினருக்கு எப்படி இருக்கும் தெரியுமா?

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Vaijayanthi S
  First published: